#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்*
"ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்".
(திருப்பாடல் 98 : 1-3. 7-9)
கண்ணீரோடு விதைப்பவர்களுக்கு, அக்களிப்பின் அறுவடையை அளிப்பவரே! எங்கள் அடிமனதின் அச்சத்தினை அகற்றுபவரே! எங்கள் அடிமை நிலையை மாற்றுபவரே! உம்மைப் போற்றுகின்றோம். புகழ்கின்றோம். உமக்கு நன்றி கூறுகின்றோம்.
தாயின் கருவில் நான் உருவான நாள் முதல், இன்று வரை என்னைக் கண்ணின் மணிபோலக் காத்து, வழிநடத்தும் என் நல்ல தெய்வமே உமக்கு நன்றி அப்பா.
இறைவா! "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்ற உமது இறைவார்த்தையை மறந்து, துன்ப வேளைகளில் நான் மனம் சோர்ந்து, அவநம்பிக்கையில் துவண்ட நேரங்களை எண்ணி மனம் வருந்துகிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும். தந்தையே! உம் மீது கொண்ட விசுவாசம் தொய்வுற்ற தருணங்கள், என் வாழ்வின் மோசமான காலக்கட்டங்கள் அப்பா.
"இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்" என்ற உமது இறைவார்த்தையை, நான் இன்று முதல் இறுக பற்றிக்கொள்ள இறைவா அருள் புரிவீராக!
தந்தையே! எனக்கு நல்ல நாவன்மையையும், சிறந்த ஞானத்தையும், குறையாத மனத்துணிவினையும் தந்தருள்வீராக.
இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணுலகில் இருக்கிற... (1)
அருள் நிறைந்த... (3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕






