#🚹உளவியல் சிந்தனை அடிமை வலிகள் தான் வழிகாட்டி பழிகள் தான் முகவரி சோதனைகள் தான் சாதனை இவற்றை பணிந்தே ஏற்கிறேன்...
*ஓம் சிவயநம* 🙏🙏🙏
*திருச்சிற்றம்பலம்* 🙏🙏🙏
*தன் கடமையே மிகச்சிறந்த சிவ பூசையாகும்.* 🙏🙏🙏
#🚹உளவியல் சிந்தனை நல்லவர் யாருமே யில்லை
எல்லோருக்கும் நல்லவர் நல்லவ ரில்லை
எல்லோருக்கும் நல்லவர் ஏமாற்று வேலை
எல்லோருக்கும் நல்லதால் எதிரிகள் வருமே 🙏🙏🙏
*ஓம் சிவயநம* 🙏🙏🙏
*திருச்சிற்றம்பலம்* 🙏🙏🙏
*தன் கடமையே மிகச்சிறந்த சிவபூசை யாகும் 🙏🙏🙏*
#🚹உளவியல் சிந்தனை வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!
ஆடு வளர்ப்பு,
கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.
குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.
‘ சிநேக் இந்தியா பார்ம் ’
என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:
நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன்.
ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்.
பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.
அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது.
இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.
பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.
இதற்கு ஆகும் செலவு
5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,
25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,
கொட்டாய் செலவு ரூ.10,000,
பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000
ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.
குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:
குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது.
குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.
1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம்.
ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும்.
அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும்.
அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.
கேட்கவே தலை சுற்றுகிறதா?
இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.
ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள்.
நிறைய பணத்தை அள்ளுங்கள்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
வண்டுமுருகன்
A12/219,விவேகானந்தர் தெரு,
துபாய் குருக்கு சந்து,
துபாய் மெயின்ரோடு,
துபாய்.😄
(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு.
" சதுரங்கவேட்டை " படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க....
இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)
பின்குறிப்பு:
ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும்.
அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.
சிரித்தது போதும்..
படித்து சிரித்தது...
#நவராத்திரி இரண்டாம் நாளில் வழிபடப்படும் தெய்வம் பிரம்மச்சாரிணி. “பிரம்மம்” ஆகிற சிவத்தை தேடுகின்ற தவம் அல்லது ஆன்மீகச் சாதனை செய்கின்ற அன்னைக்கு பிரம்மச்சாரிணி என்று பெயர். “சாரிணி” என்பது நடைமுறைப்படுத்துபவள் எனப் பொருள்படும். ஆகவே, பிரம்மச்சாரிணி யாகிய இத்தெய்வம் தவத்தின் வடிவமே ஆன தெய்வம் அவள்.
பிரம்மச்சாரிணி அம்மன் பாதணிகள் அணியாத பாதத்துடன் நடப்பவளாகவும், சாந்த ஸ்வரூபிணியாகவும் வர்ணிக்கப்படுகிறார்.
வலக்கையில் ஜபமாலை (அக்ஷமாலை) தாங்கியுள்ளார்.
இடக்கையில் கமண்டலம் வைத்துள்ளார்.
இந்த ஸ்வரூபத்தில் அன்னையின் முகம் எப்போதும் அமைதி, கருணை, மற்றும் ஒளிவீசும் தன்மையோடு காணப்படுகிறது.
சிவபெருமானை கணவனாக பெறும் குறிக்கோளுடன், பிரம்மச்சாரிணி கடுமையான தவங்களை மேற்கொண்டார்.
இலைகளையும் தவிர்த்து உணவு, நீர் எதுவுமின்றி தவம் மேற்கொண்டதால் அவள் 'அபர்ணா' என அழைக்கப்பட்டாள்.
அவளது தவம் சூரியனின் கடும் வெப்பத்தையும், பனிக் குளிரையும், புயல் மழையையும் தாங்கும் கடினமான தவமாக இருந்தது.
பிரம்மச்சாரிணி அம்மன் தனது முந்தைய பிறவியில் தக்ஷ பிரஜாபதியின் மகளாக சதி என்ற பெயருடன் பிறந்தார். தக்ஷன் யாகத்தில் சிவபெருமானை இகழ்ந்தபோது, சதி தன்னைத்தானே தீயில் அர்ப்பணித்துக் கொண்டார். அடுத்த பிறவியில் இமவானின் மகளாகப் பிறந்து, கடுமையான தவத்தின் மூலம் சிவபெருமானை மணந்தார்.
பிரம்மச்சாரிணி அம்மன் ஸ்வாதிஷ்டான சக்கரத்தின் பிரதிநிதி. அவள் பக்தர்களுக்கு பொறுமை, மன உறுதி, ஆன்மிக ஒளி ஆகியவற்றை அருள்கிறாள். அவளை வணங்குவதால் மன அமைதி, உறுதியான பக்தி, வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கிறது.
"ஜபமாலை வலக் கையில் தாங்கி,
ஞான ஒளி பரப்பும் தேவி,
கமண்டலம் இடக்கையில் ஏந்தும்
பிரம்மச்சாரிணி அன்னையை வணங்கிடுவோம்"
#🚹உளவியல் சிந்தனை காலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
🙏🏻🙏🏻🙏🏻
என்றும் அன்புடன்
*உங்கள் நண்பன்*
`சோ நா ரகுநாதன்`
#🚹உளவியல் சிந்தனை .விஷம் என்பது என்ன*?_
_நமது தேவைக்கு அதிகமான ._
_அனைத்தும் விஷமே ._
_அது நமது_
_அதிகாரமாக_
_செல்வமாக_
_பசியாக_
_அகங்காரமாக_
_பேராசையாக_
_சோம்பேறித்தனமாக_
_காதலாக_
_லட்சியமாக_
_வெறுப்பாகவும்_
_எதுவாகவும்_ _இருக்கலாம்._
_*2.அச்சம் என்பது என்ன*?_
_எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும் ._ _அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும் ._
_*3.பொறாமை என்பது என்ன*?_
_பிறரிடம் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமையாகும்._
_அதை நாம் ஏற்றுக்_ _கொண்டால்_
_அதுவே நமக்கு உத்வேகமாகிவிடும் ._
_*4.கோபம் என்பது என்ன* ?_
_நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும் ._
_ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மையாகி விடும்._
_*5.வெறுப்பு என்பது என்ன*?_
_ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுப்பது._
_ஒருவரை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொண்டால்,_
_அது அன்பாகிவிடும்._
_*ரூமி*_
#🚹உளவியல் சிந்தனை ழ் க் கை*_
_*வாழ்க்கை அப்படின்னா என்ன? என்று ஒருவன் வாழ்க்கையிடம் கேட்டான்.*_
_அதற்கு வாழ்க்கை உடனே இங்கே வா என்று அழைத்தது._
_*வாழ்க்கையில் வரக்கூடிய முதல் எழுத்து வா*_
_உடனே வாழ்க்கையிடம் எதற்காக என்னை வா என்று அழைத்தாய் என்று கேட்டான்._
_*உடனே வாழ்க்கை இந்த உலகத்தில் எவ்வளவு துன்பம் வந்தாலும் நீ வாழ் என்றது.வாழ்க்கையில் வரக்கூடிய இரண்டாவது எழுத்து . ழ்*_
_உடனே வாழ்க்கையிடம் வான்னு சொன்ன, வாழ்ன்னு சொன்ன இந்த உலகத்தில் நான் எதை வைத்துக் கொண்டு வாழ்வது என்று கேட்டான்._
_*உன்னிடத்தில் தானே கை இருக்கிறது அந்தக் கையை வைத்துக் கொண்டு வாழ் என்று வாழ்க்கை சொன்னது. வாழ்கை.*_
_மீண்டும் வாழ்க்கையிடம் வான்னு சொன்ன, வாழ்ன்னு வாழச் சொன்ன, கையை வைத்துக் கொண்டு வாழச் சொன்ன, இந்த உலகத்தில் நான் எப்படி வாழ்வது என்று கேட்டான்,_
_*எவன் ஒருவன் தமிழனைப் போல் வாக்கை காப்பாற்றி வாழ்கிறானோ அதுதான் வாழ்க்கை என்று சொன்னது.*_
_மீண்டும் அவன் வான்னு சொன்ன, வாழ்ன்னு வாழச் சொன்ன, கையை வைத்துக் கொண்டு வாழச் சொன்ன, வாக்கை காப்பாற்றி வாழச் சொன்ன, இப்படி எல்லாம் வாழ்ந்தால் வாழ்க்கையில் எனக்கு என்னக் கிடைக்கும் என்று கேட்டான்._
_*வாழ்க்கையில் இருக்கக் கூடிய முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்துப் பார் *வாகை* *என்று வரும்.*_
_*வாகை* என்றால் வெற்றி அந்த *வெற்றி* உனக்குக் கிடைக்கும் என்று வாழ்க்கை சொன்னது._
#நவராத்திரி விழா பகுதியில் 2
நவராத்திரி
இரண்டாம் நாள் பூஜை: மகிஷாசுரமர்த்தினி..!
23.09.2025 செவ்வாய்க்கிழமை தட்சுணாயணம் புரட்டாசி மாதம் 7தி
அபிராமி_அந்தாதி (50) அம்பிகையை நேரில் காண🙏
நாயகி; நான்முகி; நாராயணி;
கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே !
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
நவராத்திரி
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் உண்டானது. தேவர்களின் பதவிகள் அனைத்தையும் அசுரர்கள் பெற்றுக்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினர். இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனின் ஆலோசனைபடி, சிவன் தேவர்களின் துன்பத்தைப் போக்க எண்ணி, மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதை வரமளித்த பிரம்மனிடம் கேட்டு அறிந்தனர்.
அவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக்கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். இதனைப் போன்றே பிரம்மன், விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் போன்ற எண்ணற்ற தேவர்கள் தங்களது உடலிலிருந்து சக்தியினை வெளிக்கொணர்ந்து ஒரே வடிவில், ஒளிவடிவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் சேர்ந்து பிரகாசிப்பது போல ஒரு பெண் வடிவை உருவாக்கினர். அந்தச் சக்தியைத் தேவர்களும், கடவுளர்களும் கைகூப்பி வணங்கி நின்றனர். அப்பெண் சக்திக்கு ஒவ்வொரு கடவுளர்களும் தமது ஆயுதங்களை அளித்தனர்.
மகிஷாசுர மர்தினி: மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள். இவள் நான்கு திசைகளைத் திரும்பி பார்க்கும் போது வெள்ளம் கரைபுரண்டது. பிரபஞ்சம் நடுங்கியது. வானுக்கும் பூமிக்கு இடையே உயர்ந்த வடிவுடையவளாக வீற்றிருந்தாள். பிரளயம் உருவானது போல காட்சியளித்தது.
பூமித்தாய் அந்தப் பெண் சக்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் சலித்துக் கொண்டாள். மர்த்தினியின் சிம்மாசனமான சிங்கம் கர்சனை செய்தது. மகிசனின் அசுரப் படைகளை தேவி லாவகமாக முறியடித்து அசுரர்களைக் கொய்து, அழித்தாள். அசுரன் மாய வேலைகளினால் உடலினை மாற்றி பல்வேறு வடிவில் தேவியை எதிர்த்தான். இறுதியில் எருமைக் கடாவின் உருவத்தில் இருந்த போது தேவி தமது திரிசூலத்தால் அவனது தலையினைத் துண்டித்தாள். மகிஷன் தேவியால் அழிக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் கடவுளர்கள் அதனைக் கண்டு ஆனந்தமடைந்து தேவியை வணங்கினர்.
நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை:
வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.
நவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்....!
நவராத்திரியின் முதல் நாள் பூஜை முறைகள்...!
நாளை முதல் நவராத்திரி விழா ஆரம்பம்...!
இரவு நேரத்தில் நவராத்திரி கொண்டாடப்படுவது ஏன்...?
ராமபிரான் ராவணனை வெற்றிகொண்ட நாள் விஜயதசமி...!