Makkal Mugam
ShareChat
click to see wallet page
@epaper
epaper
Makkal Mugam
@epaper
Daily Updates
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள தூத்துக்குடி மாவட்டம் 2026ம் ஆண்டிற்கான ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தகவல் தூத்துக்குடி, டிச.17 - தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்களுக்கு 2025ம் ஆண்டிற்கான ஔவையார் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது சர்வதேச மகளிர் தினவிழா (08.03.2026) நாளன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும். இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதினை பெற இணையதள (https://awards.tn.gov.in) மூலம் 31.12.2025க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். விதிமுறைகள்: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு, கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :- மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி – 628 101 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி கிராமத்தில் நேற்று விவசாயிகள் பயிரிடும் பயிர்களை டிஜிட்டல் முறையில் மின்னணு பயிர் கணக்கீடு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கே. ஜே. பிரவீன் குமார் ஆய்வு செய்தார்.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள மாப்பிள்ளையூரணியில் அடிப்படை வசதிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் எம்.சி.சண்முகையா எம்.ஏல்.ஏ. பங்கேற்பு தூத்துக்குடி டிச.17 - மாப்பிள்ளையூரணி பத்ரகாளியம்மன் கலையரங்க மண்டபத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கலந்தாய்வு கூட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்வசதி, சாலைவசதி, பொது சுகாதாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடையே கலந்தாய்வு கூட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் வந்துள்ள மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தினர். மேலும் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவும், பழுதான தெரு விளக்குகள் உடனடியாக சரி செய்யவும், உயர் மின் அழுத்தத்தில் அநேக வீடுகளில் பிரிட்ஜ், வாசிங் மிஷின், கிரைண்டர், மிக்சி, அலைபேசி உட்பட்ட மின்சாதன பொருட்கள் சேதப்படுவதை தடுத்து சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், தெருக்களில் குப்பைகள் முறையாக அகற்றப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும்,தண்ணீர் குழ்ந்திருக்கும் பகுதியில் கொசுமருந்து தெளிக்கவும் எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களின் குறைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, ஊரக வளர்ச்சித் துறை பிடிஒ சின்னத்துரை, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் மகேஷ், ஜாஸ்மின், மின்வாரிய உதவி பொறியாளர் குமார், பிரேம், சுகாதார ஆய்வாளர் முகமது ஆசிக், ஊராட்சி செயலர் ஜெயரத்தினம், முன்னாள் கவுன்சிலரும் மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளருமான அந்தோணி சேசுபாலன், மாவட்ட ஆதிதிராவிடரணி டிடிசி ராஜேந்திரன் மற்றும் தூய்மை பணியாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி சாத்தூர், டிச.17- விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். அரசு நிருவாகம் முழுமையாகத் தமிழில் மேற்கொள்ளப்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில் 27.12.1956-இல் சட்டமன்றத்தில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று17.12.2025 ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் விழிப்புணர்வுப் பேரணி சாத்தூர் நகராட்சி மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காவல்நிலையம் வழியாக கடைவீதி வரை(காய்கறி சந்தை) வரை நடைபெற்றது. இப்பேரணியின் போது, ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளும், ஒட்டுவில்லைகளும் வழங்கப்பட்டன. இப்பேரணியில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ஜோதிலெட்சுமி, சாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் - ஈ DIULa ஆட்பிபொழிச் சட்டலாரம்' 9095` 9080 ஊபப்புபவ اعزا ةا உடுறலடை ஈ DIULa ஆட்பிபொழிச் சட்டலாரம்' 9095` 9080 ஊபப்புபவ اعزا ةا உடுறலடை - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவனூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கப் புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள் ராமநாதபுரத்தில் திடீரென பெய்த பெருமழையால் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளியில் வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளதை நகர்மன்ற தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையாளர் தலைமையில் நகர் மன்ற ஊழியர்கள் மழை நீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர்.உடன் நகர்மன்ற துணை தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
செய்திகள - 'ಗ  గ 'ಗ  గ - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதிமுர்மு அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் திருமதி சுப்புலெட்சுமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பங்கேற்பு வேலூர், டிச.17- வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகியோர் பங்கேற்றனர். *நானோ தொழில்நுட்ப மாநாடு* வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது; நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 20 நாடுகளில் இருந்தும், 42 சர்வதேச கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் மேம்பட்ட நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குவாண்டம் பொருட்கள், நானோ மருத்துவம், சென்சார்கள் மற்றும் பயோசென்சார்கள், ஆற்றல் பொருட்கள் மற்றும் நிலையான தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்பட பல தலைப்புகளை உள்ளடக்கியது. மாநாட்டின் சிறப்பம்சமாக, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அண்மையில் வெளியான க்யூ.எஸ். நிலைத்தன்மை பிரிவில் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் வி.ஐ.டி பல்கலைகழகம் 7-ம் இடமும், உலகளவில் 352-ம் இடமும் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் உயர வேண்டும் என்பது இலக்காகக் கொண்டுள்ளோம். ஒரு நாடு முன்னேறிய நாடாக மாற வேண்டுமானால் உயர்கல்வியால் மட்டுமே முடியும். மத்திய, மாநில அரசுகள் கல்வியை முன்னுரிமையாக கொள்ள வேண்டும். சுகாதாரமும், கல்வியும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: நானோ தொழில்நுட்பம் வெறும் அறிவியல் துறை அல்ல. அது ஒரு புரட்சியாகும். இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளப் பொருள்களை வடிவமைக்க உதவுகிறது. நானோ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள் வரும்கால தொழில்துறையில் முன்னிலை வகிக்கும். திராவிட மாடல் அரசு சமூக நீதியைப் பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கிறது. உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை மாற்றி அமைத்துள்ளது. சமூக நீதி, உள்ளடக்கம் மற்றும் மனித மூலதன வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, தமிழ்நாட்டை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-ம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பொருளாதார வளர்ச்சி உள்ளடக்கமானதாகவும் அறிவு சார்ந்ததாகவும் இருந்தாலே நிலையானது. விலையில்லா பஸ் பயணத் திட்டம் 2021 டிசம்பரில் தொடங்கியபோது முதல் மூன்று நாட்களில் 7.8 மில்லியன் பெண்கள் பஸ் சேவையைப் பயன்படுத்தினர். தற்போது தினசரி 57.81 லட்சம் பெண்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 841 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் உயர்கல்வி செல்லும் மாணவிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தத் திட்டத்தை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. நான் முதல்வன் திட்டம் கடந்த 2022-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் தொழில்சார்ந்த திறன் பயிற்சி, தொழில் வழிகாட்டுதல், தொழில்முறை மேம்பாடு ஆகியவை வழங்கப்படுகிறது. 'புதுமைப் பெண்' திட்டத்தை மாணவிகளுக்கும், 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை மாணவர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டங்களால் 4.18 லட்சம் மாணவிகளும், 3.28 லட்சம் மாணவர்களும் பயனடைகின்றனர். இதன் மூலம் உயர்கல்வி கிடைப்பதுடன் இடைநிற்றலை குறைக்கிறது. முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் வருங்கால விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களை உருவாக்குகிறது. இந்திய உயர்கல்வி 2020-21 ஆய்வின்படி ஆராய்ச்சி படிப்பை படிக்கும் முனைவர்களில் 15,400 மாணவிகளும், 13,457 ஆண்களும் என மொத்தம் 28,857 பேர் அடங்குவர். திராவிட மாடல் அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும். நானோ தொழில்நுட்பமானது திறன்மிகு பேட்டரிகள், நீடித்த சூரிய தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் அமைப்புகளுக்கு முக்கிய பங்காற்றும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் கவுரவ விருந்தினராக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும், அமெரிக்காவின் எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தின் பேராசிரியருமான மவுங்கி பவெண்டி பேசியதாவது: நானோ அறிவியல் தொழில்நுட்பமானது அணு அளவில் பொருளைக் கையாள்வது, வடிவமைப்பது, பொறியியல் ரீதியாக உருவாக்குவது எப்படி என்பதைக் கற்று கொள்வதாகும். நானோ அறிவியலில் புதிய அறிவியல் பண்புகளை கண்டுபிடிப்பது, வேறுபட்ட பயன்பாடுகளுடன் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பது இதன் நோக்கமாகும். நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம் சுமார் 30 முதல் 35 ஆண்டுகளுக்கு முன்புதான் வேகம் எடுத்தது. அறிவியல் என்பது பொருளாதார வளர்ச்சி, மனிதகுலம், ஆரோக்கியம், வளங்களுக்கான எதிர்கால எந்திரமாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சியை பயன்படுத்துவது முக்கியமானது. இதற்கு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதை விஐடி பல்கலைக்கழகம் சிறப்பாகச் செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நானோ அறிவியல் மையத்தின் இயக்குநர் நிர்மலா கிரேஸ் வரவேற்றார். முடிவில் பேராசிரியை விமலா நன்றி கூறினார்.
செய்திகள் - MIi N'2  IGN 1o  వయ etlemall Tene MIi N'2  IGN 1o  వయ etlemall Tene - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள் இளையான்குடியில் கண்மாய் கரையினை சரி செய்துதர விவசாய பெருமக்கள் கோரிக்கை. சிவகங்கை, டிச.17- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம், இளையான்குடியிலிருந்து பரமக்குடி செல்லும் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் அமைந்துள்ள இளையான்குடி கண்மாயில் விறகு வெட்டிய நபர்கள் கண்மாய் கரையை சேதப்படுத்தி உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இளையான்குடி கண்மாயில் விறகுகளை வெட்டி வாகனங்களில் ஏற்றுவதற்காக கண்மாய் கரையினை தேசப்படுத்திய சம்பந்தப்பட்டோர், சேதப்படுத்திய கண்மாய் கரையினை சரி செய்துதர ஏன் முன்வரவில்லை. தற்போது விவசாய காலம் என்பதால் கண்மாயில் இருந்து விவசாய பாசனத்திற்கு நீர் ஆதாரம் தேவைப்படும் இக்காலகட்டத்தில், கண்மாய் கரையினை சேதப்படுத்தி நீர் தேங்க இடையூறு ஏற்படுத்த முற்படுவது உன்ன உணவு வழங்கும் விவசாயத்திற்கு முட்டுக்கட்டை அமையும் இச்செயல் எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அப்பகுதி விவசாய பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலையிட்டு, சேதமடைந்த கண்மாய் கரையினை விவசாயி பெரியசாமி, கிராம பகுதியில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.
செய்திகள - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள் வேலூர் மாவட்டம் வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு இன்று மாண்புமிகு இந்தியா குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சாமி தரிசனம் செய்த போது எடுத்த படம் உடன் சக்தி அம்மா தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளனர்
செய்திகள - ShareChat