🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
உறுப்பினர் சேர்க்கை முகாம் தவெக பூத் நிர்வாகிகள் பயிற்சி பட்டறை கடச்சனேந்தல் பிரபு மஹாலில் உற்சாகமாக நடைபெற்றது*
மதுரை: டிச.10 -
கழகத்தலைவர் தளபதியார் வழங்கிய ஆணையை தொடர்ந்து, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை அவர்களின் வழிகாட்டுதலில், மதுரை வடக்கு மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு பயிற்சி பட்டறை கூட்டம் பொய்கரைப்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது.இந்த பயிற்சி முகாமில், மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ் . அலாவுதீன் மற்றும் கிழக்கு ஒன்றியம் (வ) தலைவர் டாக்டர் தீபன் சக்ரவர்த்தி இணைந்து தலைமையேற்று நடத்தினர்.
நிகழ்வின் தொடக்கத்தில், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் குறித்து விரிவான விளக்கமும், தற்போதைய அரசியல் சூழ்நிலை, வாக்காளர் அணுகுமுறை, பொதுமக்கள் தொடர்பு விதிமுறைகள், டிஜிட்டல் தரவுச் சேகரிப்பு முறை, SIR செயல்முறைகள் போன்ற முக்கிய அம்சங்கள் முழுமையாக விளக்கப்பட்டன.
பூத் கமிட்டி அமைப்பை வலுப்படுத்துவது, ஒவ்வொரு வார்டிலும் தொண்டர்களின் பொறுப்புகளை விரிவுபடுத்துவது, உறுப்பினர் சேர்க்கையை வீடு தோறும் துல்லியமாக மேற்கொள்ளுவது போன்ற செயல்திட்டங்கள் நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது.
மேலும், அடுத்தடுத்த மாதங்களில் உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் நடைமுறை அமல்படுத்தும் படிகள் பற்றியும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. மாத்தூர், கள்ளந்திரி, பொய்கரைப்பட்டி, வெள்ளியங்குன்றம், குருத்தூர், பெருசுப்பட்டி, காதகிணறு, சின்ன மாங்குளம், மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த கழக நிர்வாகிகள், பூத் முகவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அணித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் நன்றி உரை ஆர். ரஞ்சித். ரஞ்சித்.
நிகழ்வில் கலந்துகொண்ட தலைவர்கள்,
“மக்களிடம் நேரடி இணைப்பை அதிகரிக்கும் வகையில் இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் செயல்பாட்டை பலப்படுத்த வேண்டும்”
என்று வலியுறுத்தினர் கூட்டத்தின் இறுதியில், பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது,
இந்த பயிற்சி பட்டறை, மாவட்டத்தில் அடுத்த கட்ட அரசியல் அமைப்பு வலுவூட்டும் முக்கிய நிகழ்வாக அமைந்தது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
#செய்திகள #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
#செய்திகள தஞ்சையில் இ- பைலிங் திட்டத்தை
ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூா்.டிச.9 - தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில், வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் 'இ-பைலிங்' என்ற டிஜிட்டல் நடைமுறை திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்
சங்க தலைவர் திராவிட செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .
சங்க செயலாளர் அருண்குமார், முன்னாள் தலைவர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்து பழைய நடைமுறையை தொடர வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
#செய்திகள
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காந்திநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்காறும் இடத்தில் இருசக்கர வாகனத்தை வரிசையாக நிறுத்தியும், பேருந்துகள் திரும்புவதற்கும் சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா!
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
#செய்திகள #செய்திகள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காபி வித் கலெக்டர் என்ற 209- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் குழந்தை தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்தச்சட்டம் 2016 இன் கீழ் மீட்கப்பட்ட 11 வளரிளம் பருவ தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.










![செய்திகள - [Coffee With Colector] டடடடம் 55|08[ [Coffee With Colector] டடடடம் 55|08[ - ShareChat செய்திகள - [Coffee With Colector] டடடடம் 55|08[ [Coffee With Colector] டடடடம் 55|08[ - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_949299_d427076_1765212819095_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=095_sc.jpg)


