ஜெய் ஶ்ரீ நரசிம்மா
1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
2. லக்ஷமி யாலிங்கித வாமாங்கம்
பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
சக்ராப்ஜாயுத தரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
5. ஸிம்ஹநாதேன மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
6. ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்
பக்தானாம் அ பயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
8. வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே
9. இதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்ச்ஞிதம்
அந்ருணீஜாயதே சத்ய :
தனம் சீக்ர - மவாப்னுயாத்
அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
மஹாவீரஜகந்நாத
ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
ருணவிமோச நாதாய
ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள் #📸பக்தி படம்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️சதுர்த்தி விரதம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
♦️♦️இன்று 08.12.2025.
🌹கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வ தற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கிய ங்களையும் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்ச மும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
' ஹர' என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கட ஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷ த்தில் வரும் சதுர்த்தி ஆகும்.
ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப் பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்த தாகும். இதை 'மகா சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கின்றனர்.
🌹விரதத்தின் பலன்கள்
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர் மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட் பேறு என பலவித நன்மைக ளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
🌹விரதம் இருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட் கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.
அன்றையதினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்"
எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் ஔவையார் இயற்றிய சீதகளப என்று துவங்கும் விநாயகர் அகவல் மற்றும் வளர்சிகையை பராபரமாய் என்று துவங்கும் விநாயகர்கவசம் போன்றவை பாடி தொந்திக் கணபதியை தியானித் தால் கூடுதல் பலன் உண்டு.
🌹விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...
🌹08.12.2025... நேசமுடன் விஜயராகவன்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🕉️சதுர்த்தி விரதம் #📸பக்தி படம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏🏻சரணம் ஐயப்பா #🕉️கந்த சஷ்டி கவசம் #🤩கார்த்திகை ஜோதிடம்💫
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #🙏பெருமாள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #✡️ஜோதிட பரிகாரங்கள்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🕉️ஓம் முருகா #📸பக்தி படம்
#🙏பெருமாள் #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஜெய் ஆஞ்சநேயா
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
#💫தீபம் பக்தி பாடல்கள்🎵 #🪔திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது💫 #🪔கார்த்திகை தீபம்💫 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
#🕉️கந்த சஷ்டி கவசம் #🕉️ஓம் முருகா #✡️ராசிபலன் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம்










