ஒரு மனிதன் மிருகக்காட்சிசாலை ஒன்றை நிறுவி நுழைவுக் கட்டணமாக 300 ரூபாய் என அறிவிப்பு செய்தார்;
ஆனால் யாரும் அங்கு செல்லவில்லை.
ஆகவே அவர் அதை 200 ரூபாயாக குறைத்தார், ஆனால் இன்னும் யாரும் வரவில்லை.
மேலும் அந்த கட்டணத்தை 10 ரூபாயாக குறைத்து பார்த்தார்;
அதற்கும் மக்கள் வரவில்லை.
இறுதியாக, இலவச நுழைவு என மாற்றினார், உடனே, மிருகக்காட்சிசாலை மக்களால் நிரம்பியது.
பின்னர் மிருகக்காட்சிசாலையின் வாயிலை மெதுவாக பூட்டி விட்டு சிங்கங்களை அவைகளின் கூட்டினில் இருந்து விடுவித்து மிருகக்காட்சிசாலை வளாகத்தினுள் உலவ விட்டார்.
இப்போது வெளியேறும் கட்டணமாக 500 ரூபாய் என அறிவித்ததார்;
அனைவரும் எதுவும் யோசிக்காமல் அக் கட்டணத்தை செலுத்தி வெளியே செல்ல முன்டியடித்ததனர்!
கதையின் சுருக்கம் :
வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும், மலிவான அல்லது இலவச சலுகைகள் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். எந்த ஒரு வியாபாரமும் இலவசம் இல்லை!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻