#🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள்
#Throwback 2016 January 26th
தனக்கு 'பத்மவிபூஷண்' விருது வழங்கப்படுவது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
''எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான 'பத்ம விபூஷண்', மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் ஆகிய அத்தனைபேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்''.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்துக்கு ஏற்கனவே மத்திய அரசு, 2000ல் 'பத்மபூஷண்' விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.