ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது
யாரிடத்தில் கேள்வி கேட்பது
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது
தர்மமே மாறுபட்டால் எங்கு செல்வது #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
திரைப்படம் என்கிற பெயரில் ஒரு மகாகலைஞனின் மாசற்ற திறமைகளை நமக்கு முன் திரையிட்டுக் காட்டிய "தெய்வ மகன்" பார்த்த போது...
அதில் "கண்களால் பேசுதம்மா" என்கிற உன்னதப் பாடலைப் பார்த்த போது...
"அழ வைப்பவர்களைப் பிடிக்காது" என்கிற எனக்குள் திண்மையாய் இறுகிக் கிடந்த அனுபவ தத்துவம், தூள் தூளாய் நொறுங்கிப் போனது.
ஒற்றை ஆள் ஒரு முறை அழ வைத்தாலே ஜென்மத்துக்கும் பிடிக்காமல் போகுமே.. முன்பெல்லாம்? இங்கே... ஒருவரல்ல.. இருவரல்ல..ஆறு பேர் நம்மை கதறக் கதற அழ வைக்கிறார்கள்.
ஆனால்... அத்தனை பேரையும் பிடிக்கிறது.
'காலம் சென்ற' அல்ல... 'காலம் வென்ற' நம் கவியரசர் தன் இதயப் பேனாவுக்குள் உண்மைப் பாசத்தை மையாய் ஊற்றிக் கொண்டு எழுதி, எழுதி அழ வைக்கிறார். பிடிக்கிறது.
பாடலில் காட்டப்படும் விரிந்து பரந்த அந்த ஆலயத்தில் ஒரு அன்னையின், ஒரு பிள்ளையின் மனசுகளை இசையால் பேச வைத்து, மெல்லிசை மன்னர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
"பெண்ணோடு பேசுதம்மா..பெற்றெடுத்த வயிறு.." -அந்த "வயிறு" எனும் சொல்லைப் பாடும் போது நடுங்க விடும் குரலில், "இனம் புரியா.." என்று
உச்சஸ்தாயியில் உயர்த்தும் குரலில் அமரர் சீர்காழியார் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
இப்படி ஒரு உணர்ச்சிமயமான உருக்கும் பாடலை, கற்பனை செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைக் காட்சியாக நம் கண்களில் விரித்து இயக்குநர் அமரர் ஏ .சி . திருலோக்சந்தர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
அம்மா வேஷமே போடுவதால் "பண்டரிபாய்" இல்லை, " பண்டரித்தாய்" என்று நண்பர்கள் சிலர் கேலி செய்வார்கள். இந்தப் படம் பார்த்த பிறகு அவர்களைக் கண்டித்திருக்கிறேன். சொல்லத் தெரியாத பிள்ளைப் பாசத்தை,நொண்டியடிக்கும் ஒரு தவிப்பு நடையால் விளக்கி பண்டரிபாய் அம்மா அழ வைக்கிறார். பிடிக்கிறது.
ஊமையில்லை.. ஆனால் பேச, பாட வார்த்தையில்லை. ஒரு இயக்குநரின் சிந்தனையில் உதித்த பாத்திரத்தை அப்படியே
தன்னிலிருந்து வெளிக்காட்டும் திறமைக்கு ஈடு இணையில்லை. நம் நடிகர் திலகம்- படத்தின் தலைப்பை நிஜமாகவே நிரூபிக்கும் தெய்வ மகன்.
தெய்வ மகன்- பிறப்பிலிருந்தே பெற்ற தாயைப் பிரிந்திருக்கிறவன் இவ்வாறுதானிருப்பான் என்று காட்டுகிறார். பிடிக்கிறது.
அகல விரித்த கண்களின் வழியாக, அன்பே உருவான அன்னையை விழுங்கப் பார்க்கும் செயலால் அய்யன் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
சுடர் மினுக்கும் தூணுக்குப் பின்னால் நின்று உதடு பிதுக்கி அழுது அழ வைக்கிறார். பிடிக்கிறது.
அய்யன் தன் முகத்தை ஒரு பாத்திரம் போலாக்கி, அன்பை யாசித்து அழ வைக்கிறார். பிடிக்கிறது.
வரிசையில் கடைசியில் நின்று கை நீட்டி யாசிக்கையில், அன்னை கை நிறைய அள்ளித்
தந்த நாணயங்களை சிதற விட்டு, அன்னையின் திருமுக அழகை மனசுள் சேகரிக்கிற பாச யதார்த்தத்தில் அய்யா அழ வைக்கிறார். பிடிக்கிறது. #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
நினைக்கும் போதே ஆஹா
===================
குயிலின் குரலை விட மிக அழகான குரல் வளம் கொண்ட பாடகர் என்று யாராவது சொல்ல முடியுமா? எனக்குத் தெரிந்து அப்படி ஒரே ஒரு பாடகர் ஏ.எம்.ராஜா தான்.
ஏமல மன்மதராஜு ராஜா என்ற ஏ.எம்.ராஜாவின் குரலில் ஒலித்த தமிழின் இனிமை நூறாண்டுகளானாலும் மறக்க முடியாது.
ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஏ.எம்.ராஜா படிப்பதற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்.
சென்னையின் தொன்மையான பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ படித்த ஏ.எம்.ராஜா, கர்நாடக, மேற்கத்திய இசையில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். கல்லூரியில் நடந்த பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற ராஜாவின் திறமையை ஹெச்எம்வி நிறுவனமே கண்டுபிடித்தது. இரண்டு தெலுங்கு மெல்லிசை பாடல்களை ஏ.எம்.ராஜாவே எழுதிய இசையமைத்தார். அவருக்கு இசை உதவி செய்தவர் திரையிசை திலகம் கே.வி.மகாதேவன்.
ஹலோ ஸ்டாப்.. ஸ்டாப்... இது ஏ.எம்.ராஜா கட்டுரையா என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இல்லவே இல்லை. ஏ.எம்.ராஜா அரிதாக பாடிய ஒரு படத்தின் இசையமைப்பாளர் குறித்த பதிவு.
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு குரல் பொருந்திப் போகும். எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் உள்பட பலருக்கு டி.எம்.சௌந்தரராஜனின் குரல் அச்சு அசலாக மாறிப்போனது. ஒவ்வொருக்கும் தக்கவாறு குரலை மாற்றி டிஎம்எஸ் பாடி விடுவார்.
ஆனால், ஏ.எம்.ராஜாவும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால், அவர் குரலுக்கு மிகப்பொருத்தமான நடிகராக ஜெமினிகணேசன் இருந்தார். பூலோக ரம்பை படத்தில் ஆசை நெஞ்சமே அலைமோதும் கடல் மீது நானே, உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும் ஆகிய பாடல்களும், கல்யாணப்பரிசு படத்தில் ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்,காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன், வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ,உன்னை கண்டு நான் வாட என்னை கண்டு நீ வாட ஆகிய பாடல்களும், மிஸ்ஸியம்மா படத்தில் வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே, பிருந்தாவனமும் நந்தா குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ,எல்லாம் உனக்கே தருவேனே இனி, முடியுமென்றால் படியாது படியும் என்றால் முடியாது, பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் ஆகிய பாடல்களும், மனம் போல் மாங்கல்யம் படத்தில் மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய், , ஆடிப்பெருக்கு படத்தில் கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்,பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன், தனிமையிலே இனிமை காண முடியுமா என எத்தனை எத்தனை உணர்ச்சி மிகுந்த பாடல்களை ஜெமினி கணேசனுக்காக ஏ.எம்.ராஜா பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவ்வளவு மெல்லிய குரல் வளம் கொண்ட பாடகர் யாரும் இல்லையென்று சொல்லக்கூடிய வகையில் ஏ.எம்.ராஜா பாடிய தென்றலைப் போன்ற மெல்லிசை பாடல்கள் காலம் கடந்தும் இசை நேசர்களை இன்புற வைக்கிறது.
இப்படித்தான் ஜெமினி கணேசன் நடித்த ஒரு படத்தில் ஏ.எம்.ராஜா பாடிய ஒரு பாடலைக் கேட்டவுடன் யார் இந்த இசையமைப்பாளர் எனத் தேடினேன். ஆனால், அவர் அந்த படத்தை தவிர வேறு படத்திற்கு இசையமைத்தற்கான அடையாளமே இல்லை.
ஏ.எம்.ராஜா, பி.சுசீலா இணைந்து பாடிய அந்த பாடல் உங்களுக்கும் மிகவும் பிடித்த பாடல் தான்.
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா?....
மிக அற்புதமான மெட்டு கொண்ட இந்த பாடல் இடம் பெற்ற படம் இல்லறமே நல்லறம். பாடலின் வரிகளைக் கேட்க கேட்க மகிழ்ச்சி பொங்கும்.
கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா?
கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா?
எனையும் காணாமல் தூங்காமல்
இருவிழி
இருந்த அந்நாளை
என்னுள்ளம் மறக்குமா?
குறும்பு செய்து
பெண்கள் கையில்
பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே
இனிக்குதா?....
கேள்வி கேட்பதைப் போன்ற தன்மையில் அமைக்கப்பட்ட இந்த பாடலில் ஒலிக்கும் துள்ளல் இசை மனசை மயக்கும்.
1958ம் ஆண்டு பி.புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஜெமினிகணேசன், அஞ்சலி தேவி, வி.நாகையா, பி.எஸ்.ஞானம், கே.சூரியகலா, எம்.என்.நம்பியார், சி.ஆர்.பிரதாபன், வி.ஆர்.ராஜகோபால், வி.எம்.ஏழுமலை, எம்.ஆர்.சாந்தாராம் உள்பட பலர் நடித்துள்ளனர். சரோஜாதேவி தமிழில் அறிமுகமான படமிது தான். சரளா என்ற நடனக்கலைஞராக இவர் இப்படத்தில் நடித்திருப்பார்.
நிலவே அவன் யார் தெரியுமா தனிவேளை தன்னில் வந்தானே கனிவாக பேசி சென்றானே என்ற அற்புதமான பாடலுக்கும் சரோஜாதேவி நடனமாடியிருப்பார். 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி இப்படம் வெளியானது.ஆனால், அதே ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வெளியான நாடோடி மன்னன் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியானார்.
இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். பாடல்களை ஏ.மருதகாசி, பி.ஹனுமந்தராவ், கு.மா.பாலசுப்ரமணியம், கே.வி.கிருஷ்ணன் ஆகியோர் எழுதினர். மைனர் லைஃப் என்று ஏ.எம்.ராஜா பாடிய புகழ் பெற்ற பாடலும் இப்படத்தில் இடம் பெற்றது. அகார்டியன், தபேலாவின் கலவை ஒலிக்கிடையே மென்மையாக ஒலிக்கும் ஏ.எம்.ராஜாவின் குரலில் ஆங்கிலம் கலந்து வந்தது இந்த வித்தியாசமான பாடல். கு.மா.பாலசுப்ரமணியம் எழுதிய என்னை ஆனந்த ராஜா என்ற ஜிக்கியின் காலத்தால் அழியாத காவியபாடலும் இப்படத்தில் தான் ஒலித்தது. பி.சுசீலா குரலில் ஒலிக்கும் ஆசை மொழி பேசும் இவர் யாரடி, பாடிய மனமே உனதாவல் யாவும் கனவோ, டி.எம்.சௌந்தரராஜன் பாடிய அணையாதே அன்பெனும், ஏ.எல்.ராகவன், எஸ்.ஜானகி பாடிய ஜானி நீ வா வா, எஸ்.ஜானகி பாடிய நிலவே அவன் யார் தெரியுமா போன்ற பாடல்கள் இடம் பெற்ற இப்படத்தின் இசையமைப்பாளர் கே..ஜி.மூர்த்தி.
இவ்வளவு அற்புதமான இசை மீட்டிய இந்த இசையமைப்பாளரிடம் தான் சூலமங்கலம் சகோதரிகள் இசை பயின்றுள்ளனர் என்ற செய்தி பதிவாகியுள்ளது.
1931ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை 35 தமிழ், தெலுங்கு படங்களுக்கு மேல் சி.புல்லையா தயாரித்து இயக்கியுள்ளார். இவரது படங்களுக்கு சி.ஆர்.சுப்புராமன், கே.வி.மகாதேவன், பெண்டியாலா நாகேஸ்வரராவ், ரீமா - நாராயணன், பி.நரசிம்மராவ், ஏ.ராமாராவ், மாஸ்டர் வேணு, கண்டசாலா உள்பட இசையமைப்பாளர்களைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவர் அறிமுகப்படுத்திய கே.ஜி.மூர்த்தி இவ்வளவு சிறப்பான பாடல்களைத் தந்த பிறகும் வேறு படங்களில் ஏன் இசையமைக்கவில்லையென தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
- ப.கவிதா குமார் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரன் அறிமுகமான படம் “பராசக்தி” என்றே நினைக்கிறார்கள். ஆனால், 1947ம் ஆண்டு அவர் அறிமுகமான படம் “பைத்தியக்காரன்”. எம்ஜிஆரை போலவே சில காட்சிகளில் எஸ்எஸ்ஆர் நடித்திருப்பார். எஸ்வி. சகஸ்ரநாமம் எழுதிய கதையை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினர். எம்ஜிஆருக்கு ஜோடி மதுரம்.
இந்த படத்தில் சிஆர். சுப்புராமன் இசையில்
“ஜெயிலுக்கு போய் வந்த தேச மக்கள்” என் பாடலை என்எஸ்.கிருஷ்ணன் பாடினார். இந்த பாடலை எழுதியதும்
#கவி_காமாட்சி தான். சிறைச்சாலையில் குற்றவாளிகள் தொலைக்காட்சி, செல்போன் உள்ளிட்ட சகல வசதிகளுடன் இப்போது இருப்பதைப் போல, கறிக்கஞ்சி சாப்பிட்டதை 1947ம் ஆண்டே பதிவு செய்த பாடல் இடம் பெற்ற படம் பைத்தியக்காரன் என்பதை மறக்க முடியுமா? #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
வெள்ளிய மேகம்
துள்ளி எழுந்து அள்ளி
வழங்கும் வெள்ளை
பூவில் புதுவிதமான
சடுகுடு விளையாட்டு
விட்டு விடாமல்
கட்டியணைத்து தொட்டது
பாதி பட்டது பாதி வித
விதமான ஜோடிகள்
விளையாட்டு
இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.
கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
அந்த நீல
நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய்
அந்தி நேரம்
நான் பாடி
வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம்
சில காலம் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
ஆடி அடங்கும் வாழ்க்கையடா #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா








