#கேட்டாலே_இனிக்கும் #காதல்_பாடல்கள்!
காதலிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் காதல் பாடல்களைக் கேட்டுக் கிறங்காதவர்களும் பாடிக் கிறங்காதவர்களும் இல்லையென்றே சொல்லலாம்!
அப்போதெல்லாம் விவித்பாரதியில் (ரேடியோவில்), சிலோன் வானொலியில், பாடல்கள் கேட்பது இருந்துவந்தது. ஒருகட்டத்தில், அந்தப் பாடல்கள் தன் மனதின் காதலுக்கு மருந்தாகவே அமைந்தன. இன்னொரு கட்டத்தில்... காதல் ஜோஸ்யம் பார்த்தவர்களும் உண்டு.
அதாவது, நமக்குப் பிடித்த அந்தக் காதல் பாடல், இன்றைக்கு ஒலிபரப்பானால், நம் காதல் வெற்றி அடையும் என்று அர்த்தம் என்று இவர்களே ஒரு கணக்குப் போட்டு, பாட்டுக் கேட்டு பரவசம் அடைந்தார்கள்.
‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...’ எனும் இதயக்கமலம் பாடலைக் கேட்டுக் கொண்டே, தலையணையை நனைத்த ரகசியக் காதல்களும் காதல் ரகசியங்களும் காதல் ஏக்கங்களும் துக்கங்களும் அதிகம்.
‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்’ என்று குதூகலத்துடன் காதலைக் கடந்தவர்களும் இருக்கிறார்கள். ‘எங்கோ நீயோ நானும் அங்கே உன்னோடு...’ என்று சுசீலாவின் குரலைக் கேட்டுக் கொண்டே, தங்கள் காதலை வெளிப்படுத்திய ஆண்கள், இந்தப் பாடலையெல்லாம் மறக்கவே மாட்டார்கள். ‘என்னை முதன்முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்’ என்ற பாடலைப் பாடி காதலை டிக்ளேர் செய்து, காதலில் வெற்றி கண்டவர்கள்... ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்’ என்று தோல்வியை பாடலாகப் பாடி அழுது கலங்கியவர்கள்... பாடல்களைப் போலவே காதலில் தனித்தனி ரகம்!
’முத்துகளோ கண்கள்’ பாடலும் ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாடலும் காதலை அழகாகச் சொல்லி, மனதுக்குள் மயிலிறகு தடவுவதை, காதலிக்காதவர்கள் கூட உணர்ந்துகொள்ள முடியும்.
‘நீ எங்கே... என் நினைவுகள் எங்கே’ என்ற பாடல் காதல் சுகத்தைச் சொல்லியும் பின்பு காதலின் சோகம் சொல்லியும் அமைந்த பாடல். படத்தில் இரண்டு மூன்று முறை, வெவ்வேறு மெட்டுகளில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகும். அந்த இசைவித்தையிலும் வார்த்தைநேர்த்திகளிலும் கட்டுண்டுபோனார்கள் காதலர்கள்.
அதென்னவோ... பிபிஎஸ் குரலுக்கும் காதலுக்கும் அப்படியொரு பொருத்தம். அவரின் பாடல்கள், ஏனோ காதலைத் தூண்டும். மென்மைப் பக்கங்களை குரல் வழியே நமக்குக் கடத்தும். ‘நிலவே என்னிடம் நெருங்காதே... நீ நினைக்கும் இடத்தில் நானில்லை’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்’, ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்று காதலையும் இந்தப் பாடலையும் பிபிஎஸ் குரலையும் சேர்த்தே கொண்டாடினார்கள்.
அதேபோல், ஏஎல்ராகவனின் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ காதல் தோல்வியின் பாஸிடீவ் பக்கங்களுக்கு நம்மை நகர்த்திக் கரை சேர்த்தது என்றே சொல்லலாம்.
அதேபோல டிஎம்எஸ் குரலில், ‘அன்னத்தைத் தொட்ட கைகளில் நான் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’ என்று வசந்தமாளிகையில் இந்தப் பாடல் வரி வரும்போது, தியேட்டரில் கைதட்டிய இளைஞர்கள் உண்டு. இதைச் சொல்லி காதலியருக்கு சத்தியம் செய்தவர்கள் அவர்கள்!
அதேபாடலில், ‘இரண்டு மனம் வேண்டும்’ என்று சிவாஜி கேட்பதாகவோ கண்ணதாசன் கேட்பதாகவோ டிஎம்எஸ் கேட்பதாகவோ நினைக்கவில்லை. ‘அட... ஆமாம்பா ஆமாம்’ என்று அவர்கள் கேட்பதாகவே உணர்ந்த காதல் தோல்வியாளர்களின் ஆறுதல் பாடல் இது.
‘காதலின் பொன்வீதியில்...’ மாதிரியான பாடல்கள் தனி ஆலாபனையே நிகழ்த்தின.
எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் நிறைவிலுமாக இளையராஜாவும் டி.ராஜேந்தரும்தான், காதலர்கள் காதுகளில் தேன் வார்த்த இசைத்தேனீக்கள். டி.ராஜேந்தரின் ‘அமைதிக்குப் பெயர்தான் சாந்தி’ பாடல் அப்படியொரு பாடல் வகைதான். காதல் வகைதான். ‘வைகைக் கரைக் காற்றே நில்லு’ ‘அடப் பொன்னான மனமே பூவான மனமே...’, ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைதான் யாரறிவார்’ என காதலிக்காதவர்களைக் கூட, இந்தப் பாடல்களால் இசையைக் காதலிக்கச் செய்திருப்பார் டி.ராஜேந்தர்.
இளையராஜாவின் காதல் சாம்ராஜ்ஜியம் அளவிடவே முடியாதது. ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ என்று ஆரம்பித்த காதல், பூங்கதவே என்று நிழல்களிலும் காதல் ஓவியத்தின் எல்லாப் பாடல்களிலும் கரைபுரண்டது. குறிப்பாக, அலைகள் ஓய்வதில்லையின் விழியில் விழுந்து இதயம் நுழைந்து..., காதல் ஓவியம் பாடும் காவியம், ஆயிரம் தாமரை மொட்டுகளே... என்றெல்லாம் காதலின் சோகத்தையும் சுகத்தையும் சேர்த்துச் சேர்த்து புகட்டினார். நிறம் மாறாத பூக்களின் ஆயிரம் மலர்களேவும் உல்லாசப் பறவைகளின் தெய்வீக ராகமும் கல்லுக்குள் ஈரத்தின் சிறுபொன்மணியும் காதல் உணர்வை உசுப்பிவிட்டன.
ஒரேநாள் உனை நான்..., ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், ஈரமான ரோஜாவே, இதயம் ஒரு கோவில், வைகரையில்... வைகைக் கரையில் என்றெல்லாம் பாடாத காதலர்களே இல்லை.
ரேடியோவில் பாடல் கேட்பது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே. பாட்டுப் புத்தகம் கொடிகட்டிய காலம் அது. டிஎம்எஸ், எஸ்பிபி, பிபிஎஸ், சுசீலா, எம்எஸ்வி, இளையராஜா, எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, மோகன் வரை காதல் ஹிட்ஸ் என்று தனிப்பாட்டுப் புத்தகங்கள், கல்லா கட்டின.
டேப் ரிக்கார்டுகள் புழக்கமும் வந்த காலம் அது. விரும்பிய பாடல்களைப் பதிவு செய்ய மியூஸிகல்ஸ் கடைகள் இருந்தன.
சங்கர்கணேஷின் ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது’ பாடலும், ‘மேகமே மேகமே’ பாடலும் எவர்கிரீன் லவ் சாங்க்ஸ்!
எண்பதுகளில் வந்த எம்எஸ்வியின் ’கனா காணும் கண்கள் மெல்ல’ பாடல் கணவன் மனைவிக்குமான பாடல்தான் என்றாலும் காதலுக்கான வரிகள் போல் எடுத்துக் கொண்டார்கள் காதலர்கள்.
காதல் பாடல்கள், காதலர்கள் வாழ்வில் மட்டுமின்றி, நம்மிலும் கூட இரண்டறக் கலந்தவைதான். ‘விழியே கதை எழுது’ என்று சொல்லும்போதே காதலின் சோகத்தையும் மென்மையையும் யோசிக்கத் தொடங்கிவிடுவோம்.
‘எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம். உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்’ என்று சசிரேகா பாடி முடிக்கும் போது, நம் உயிருக்குள்ளிருந்து ஒரு வலி கிளம்பி ஊடுருவுமே... அதுதான் காதல் இசை. இசையின் காதல்! #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
குடியிருந்த கோயில் திரைப்படம் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
வானத்து நிலவெடுத்து..
வாசலில் வைக்கட்டுமா? #🎵Lyrical Status #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📷நினைவுகள்
ஆடைகள் கூடைகள் கம்பளம்
ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும்
ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால்
நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும்
பொற்காலம் உண்டாகும் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
கோடையில்
ஒரு நாள் மழை வரலாம் என்
கோலத்தில் இனிமேல்
எழில் வருமோ
பாலையில்
ஒரு நாள் கொடி
வரலாம் என் பார்வையில்
இனிமேல் சுகம் வருமோ #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
’#ஆசையே_அலைபோலே’,
‘#வாராய்_நீ_வாராய்’,
#உலவும்_தென்றல்_காற்றினிலே’, ’
#கல்யாண_சமையல்_சாதம்’,
#புருஷன்_வீட்டில்_வாழப்போகும்_பொண்ணே’ -
ஜிகர்தண்டா குரலோன்
#திருச்சி_லோகநாதன்
வாத்தியக் கருவியில், சிறிய கருவி, பெரிய கருவி எனும் பேதங்களெல்லாம் இல்லை. கலைஞர்களிலும் அப்படித்தான். இந்தத் தலைமுறையினருக்கு அந்தப் பாடகரைத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் கடந்த தலைமுறையினருக்கு நன்றாகவே பரிச்சயப்பட்ட தனித்துவமிக்க குரல் அவருடையது. வாழ்வியல் தத்துவங்களை இவரின் குரல் வழியே கேட்டால், வாழ்க்கைப் பாடத்தை கன்னத்தில் அறைந்து சொல்லித்தருவது போல் இருக்காமல், செல்லமாக காது திருகி சொல்லித் தருவது மாதிரியான வசீகரக் குரல் அது. அந்த இலவம் பஞ்சுக்குரலுக்கு சொந்தக்காரரின் பெயர்... திருச்சி லோகநாதன். தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர். ஆமாம்... அப்போதெல்லாம் நடித்தவர்களே பாடினார்கள்.
திருச்சி மலைக்கோட்டைக்குப் பக்கத்தில்தான் வீடு. மனதின் அளவை விட, மனதுக்குள் இருந்த சங்கீதப் பித்து, மலையளவு இருந்தது. அரை நிஜார் பைகளுக்குள்ளே அந்தக்காலத்து இசைஞானியான ஜி.ராமநாதனின் பாடல்களை நிரப்பிவைத்துக்கொண்டு, எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். ‘லோகு நல்லாப் பாடுறாம்பா. எங்கே... ஒரு பாட்டுப்பாடு லோகு’ என்று கேட்டதும் காவிரி வெள்ளமென கரை புரண்டோடி வந்தது போல், உதடு தாண்டி வந்து விழுந்தன பாட்டுகள். கேட்டதும் பாடியதும் முதல் முயற்சி; பயிற்சி.
அப்பாவின் நகை செய்யும் தொழிலில் ஆர்வமில்லை. பின்னர், நடராஜன் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். அங்கேதான் இன்னும் இன்னுமாகப் பட்டை தீட்டப்பட்டார். அந்தச் சிறுவயதிலேயே உச்சஸ்தாயிக்குச் சென்றுவிட்டு, அழகாகக் கீழிறங்கிய சங்கதிகளில் சொக்கிப்போனார்கள் திருச்சியில்.
காலமும் நேரமும் சேர்ந்து வந்தது. எந்த ஜி.ராமநாதனின் இசையில் திளைத்தாரோ... அதே ராமநாதன் இசையில் முதன்முதலாகப் பாடினார். அந்தப் பாட்டு... ‘வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகுதூரமில்லை... நீ வாராய்’! ‘வாராய்....’ என்று திருச்சி லோகநாதன் குரலுக்காகவே ஒவ்வொரு முறையும் தியேட்டருக்கு ஓடிவந்தார்கள் ரசிகர்கள். வாய்ப்புகளும் அப்படித்தான் வந்தன அவருக்கு.
உற்சாகமான பாடல், வாழ்க்கையையே வெறுத்த பாடல்... இந்த இரண்டும் கிழக்கு, மேற்கு. ஆனால், இந்த இரண்டுக்கும் பொருந்துகிற குரலைக் கொண்டவர்தான் திருச்சி லோகநாதன். ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே’ என்று இவர் பாடினார். டெண்ட் கொட்டகையில் மணல் திட்டில் உட்கார்ந்திருந்த ரசிகர்களை அப்படியே ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு வந்தார்.
‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சிக் கண்ணே’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடல்தான், அன்றைக்குக் கல்யாண வீடுகளில் ஒலிபரப்பாகும். தங்கையே இல்லாதவர்கள் கூட, இந்தப் பாடலை எப்போதும் முணுமுணுத்தார்கள். அப்போது, செல்போன் இருந்திருந்தால், ‘ஆசையே அலைபோல’, ‘வாராய் நீ வாராய்’, என்கிற பாட்டையெல்லாம் ரிங் டோனாகவும் காலர் டியூனாகவும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.
‘உலவும் தென்றல் காற்றினிலே’ என்ற பாடல். அதில், ‘களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்’ என்று பாடும் போது, நம்மையும் உலாவவிட்டு கூட்டி வருவார். அப்படியொரு குலோப்ஜாமூன் குரல் அவருக்கு.
‘பொன்னான கைகள் புண்ணாகலாமொ, போதும் போதும் போகலாம்’ என்றொரு பாடல். பட்சணம் செய்யும் மனைவிக்குப் போட்டியாக கணவன் வர, அங்கே இருவரும் சமையற்கட்டில் பாடுகிற பாட்டு. மணக்க மணக்கக் கொடுத்திருப்பார். ’ஏபிசிடி படிக்கிறேன், இஎப்ஜிஹெச் எழுதுறேன்’ என்ற ஜாலியான பாடலிலும் குதூகலம் குழைத்துக் கொடுத்திருப்பார்.
’அடிக்கிற கைதான் அணைக்கும்’ அந்தக் காலத்தின் வித்தியாசமான பாடலில் இடம்பிடித்தது. அந்த விக்கல் சத்தத்தில் கிறங்கி மிரண்டார்கள் ரசிகர்கள்.
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் ப்ரமாதம் - அந்த
கௌரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹஹ
ஹஹஹஹஹஹஹஹ
அந்தார பஜ்ஜி அங்கே
சுந்தார சொஜ்ஜி இங்கே
அந்தார பஜ்ஜி அங்கே
சுந்தார சொஜ்ஜி இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க
ஹஹஹஹஹஹ
இதுவே எனக்குத் திங்க
என்ற பாடலை திருச்சி லோகநாதனின் குரலில் கேட்டதும், வயிறு முட்டச் சாப்பிட்டவர்களுக்குக் கூட கபகப என வயிறு குரல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அந்தக் காலத்தில், குழந்தையின் தொப்பையைத் தடவிக்கொண்டு, இந்தப் பாடலைப் பாடியபடியே, சாதம் ஊட்டிவிட்டவர்களும் ஏராளம். அப்படி வளர்ந்தவர்களும் ஏராளம்.
சன்னமான குரலில், சங்கதிகள் சேர்த்துக் கொண்டே வந்து உச்சம் தொடும் குரல், மயக்கிப் போட்டது. ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்பது உள்ளிட்ட எத்தனையோ பாடல்கள். கேட்டால் துன்பமெல்லாம் பறந்தோடும். கேட்டுக் கொண்டே இருக்கவைக்கும்.
நம்மை ரசிக்க வைக்கிற ரசகுல்லாக் குரலோன் திருச்சி லோகநாதன். இப்படித்தான், நடிகர் தங்கவேலு வீட்டில் நவராத்திரி விழா. மதுரை சோமு பாடினார். அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த திருச்சி லோகநாதன், விறுவிறுவென மதுரை சோமு அருகே சென்றார். ‘பிரமாதம்’ என்று சொல்லி, கையில் இருந்த வெற்றிலைப் பெட்டியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அது வெள்ளி வெற்றிலைப் பெட்டி. ஒரு கலைஞனாக இருக்கவேண்டுமெனில், ஒரு ரசிகனாகவும் இருக்கவேண்டும். திருச்சி லோகநாதன் மகா கலைஞன்; அற்புத ரசிகன்.
1924ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார் திருச்சி லோகநாதன். 89ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி காலமானார். இன்று அவருடைய நூற்றாண்டு கொண்டாட இன்னும் மூன்று வருடங்களே இருக்கின்றன.
‘வாராய்’ பாடலைக்கேட்க மலைகளும் ‘உலவும் தென்றல்’ பாட்டைக் கேட்க ஓடங்களும் ‘ஆசையே அலை போல’ பாடலின் குரலைக் கேட்க, அலைகளும் திருச்சி லோகநாதனின் குரலுக்கு ஏங்கிக் கொண்டிருக்கின்றன.
இரவுகளில் திருச்சி லோகநாதனின் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். தூக்கம் வராதவர்களுக்கு தூக்கம் வரும். தூக்கம் சொக்கிப் போனவர்கள், தூங்காமல் திருச்சி லோகநாதன் அழைத்துச் செல்லும் இரவுகளுக்குள் பயணிப்பீர்கள்.
அந்த ஜிகர்தண்டா குரலோனைக் கொண்டாடுவோம்.
தி ஹிந்து #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
’ஆசையே அலைபோலே’, ‘வாராய் நீ வாராய்’, உலவும் தென்றல் காற்றினிலே’, ’கல்யாண சமையல் சாதம்’, ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே’ - ஜிகர்தண்டா குரலோன் திருச்சி லோகநாதன் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
நடிகர் ஜெமினி கணேசன்
பிறந்த நாள் இன்று #🎬 சினிமா #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#கார்த்திகை_மாதம்:
#துன்பம்_அகல,
#செல்வம்_பெருக
கை கொடுக்கும் கார்த்திகை மாதம்
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. அந்த வகையில், நமது வாழ்வை ஒளிமயமாக ஆக்கும் மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகின்றது. இருளை போக்கி ஒளியை பரப்பி, மங்கலங்களை அதிகரிக்கும் மாதம் கார்த்திகை மாதம்!!
ஆலயங்களுக்கு செல்வது நம் மனதிற்கு நிம்மதியையும், பரவசத்தையும் அளிக்கும் ஒரு விஷயமாகும். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களுக்குச் செல்வது நாம் அடையும் நன்மைகளை பன்மடங்காக அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
ஒளியின் மாதமான கார்த்திகை மாதத்தில் தினமும் மாலை விளக்கேற்றி இறைவனை வணங்கினால், நாம் செய்த வினைகளெல்லாம் அகன்று இறை சக்தி நம்மையும் நம் சுற்றத்தையும் காக்கும்.
புராணங்களில் படி, கார்த்திகை மாதம் பல சிறப்பம்சங்களைக் கொண்டது. கார்த்திகை பௌர்ணமியில்தான் சிவபெருமான், விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதி ஸ்வரூபனாய், அக்னிப்பிழம்பாய் காட்சியளித்தார்.
ஈசனை நோக்கி தவம் புறிந்த பார்வதி தேவி, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் ஈசனது இடபாகத்தை அடைந்தாள்.
- கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து இறைவனை வணங்கினால், வாழ்வில் உள்ள அனைத்து துயரங்களும் ஒளியைக் கண்ட இருளைப் போல அகலும்.
- கார்த்திகை மாதத்தில் பிறருக்கு அகல் விளக்கு வாங்கிக்கொடுத்தால், கொடுப்பவரின் பிள்ளைகள், அவரது சந்ததி நற்கதி அடையும்.
- சிவபெருமான் மகாவிஷ்ணு என இருவருக்கும் உகந்த மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் செய்யும், சிவ பூஜைக்கும் விஷ்ணு பூஜைக்கும் பன்மடங்கு பலன் கிடைக்கும்.
- கார்த்திகை மாத துவாதசி நாளில் அன்னதானம் செய்தால், வீட்டில் செல்வம் பெருகும்.
- ஆலயங்களுக்கு விளக்கு வாங்கி கொடுத்தால், வீட்டில் உள்ள சண்டை சச்சரவு, மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கார்த்திகை மாத துவாதசி நாளில் மகாவிஷ்வுடன் துளசி தேவியின் விவாகம் நடந்தது. ஆகையால், கார்த்திகை மாதம் முழுவதும் துளசி கொண்டு மகா விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தால், வீட்டில் நிலையான பணவரவும், மகிழ்ச்சியும் இருக்கும்.
- கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் புனித நதிகளில் நீராடினால், நவகிரக தோஷம் நீங்கும், பிரம்மஹத்தி தோஷம், தெரியாமல் செய்த திருட்டு, பிறருக்கு செய்த துரோகம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
- கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு அவர் நினைவுடன் இருந்தால், நம் வாழ்வில் நம்மை ஆட்கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அவரது அருட்பார்பை சரி செய்யும். தீராத பிரச்சனைகளும் தீர்ந்து போகும். #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏







![😍Old மூவிஸ் - $ Qauesan] திருச்சி லோகநாதன் $ Qauesan] திருச்சி லோகநாதன் - ShareChat 😍Old மூவிஸ் - $ Qauesan] திருச்சி லோகநாதன் $ Qauesan] திருச்சி லோகநாதன் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_529486_2c9160cf_1763341528022_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=022_sc.jpg)


