நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#குலேபகாவலி முதல் #ஆசைமுகம் வரை... முதியவர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தப் படங்கள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் நடிப்பு என்றால் என்ன? எம்.ஜி.ஆரிடம் ஒரு நிருபர் ‘நீங்கள் நூறு வயது வரை வாழுங்கள் ஆனால் அதுவரை இப்படித்தான் இளைஞராக நடிப்பீர்களா? உங்கள் வயதுக்கேற்ற கதாபத்திரங்களை ஏற்று நடித்தால் என்ன?’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ஒரு கடை இலாபமாக நடக்கும்போது யாராவது வியாபாரத்தை நிறுத்துவார்களா என்றார். தன் படம் வசூலை அள்ளிக்கொட்டும்போது தான் ஏன் இளைஞனாக நடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர் கூற விரும்பிய கருத்து. மேலும் அவர் நடிப்பு என்றால் என்ன? இருபது வயதுக்காரர் 80 வயது முதியவராக நடிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? அது சிறப்பான நடிப்பு என்றால் அதைப்போல நான் இருபது வயது இளைஞனை போல நடிப்பதும் சிறப்பான நடிப்பு தானே என்று அவர்களுக்குப் புரியும்படி எடுத்துக்கூறினார். நடிப்பில் வயது வித்தியாசம் இருப்பது குறித்து விளக்க அப்போது மேலும் ஓர் உதாரணத்தையும் எடுத்துரைத்தார். நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் தன் முதிர்ந்த வயதில் மனோகரா நாடகத்தில் நடிக்கும்போது தர்பாருக்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரை இழுத்து வரும் காட்சியில் இந்தப் பதினாறு வயது பாலகனை என்று தன்னைக் குறிப்பிட்டபடி ஒரு நீண்ட வசனம் பேசுவார். அப்போது அந்நாடகத்தைப் பார்த்த அனைவருக்கும் அவர் வயது 60 என்பது தெரியும். இருந்தும் அந்நாடகம் வெற்றி பெற்றது. ஏன் தெரியுமா? பார்ப்போர் நடிப்பைப் பார்த்து ரசிக்கிறார்களே தவிர நடிப்பவரின் வயதைக் கருதுவதில்லை. அதனால்தான் இன்னும் என் படங்கள் நல்ல வசூலைப் பெறுகின்றன என்றார். முதியவர் வேடம் ஏன்? தமிழ் பாரம்பர்யத்தில் வள்ளி திருமணம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. அதில் முருகனாக நடிப்பவர் வேலன் [இளைஞன்] விருத்தன் [முதியவர்] என்று இரு வேடம் போடுவார். யானையைக் கண்டு அஞ்சி ஓடும் வள்ளியை முதியவர் வேடத்தில் வந்து முருகன் காப்பாற்றி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி சத்தியம் வாங்குவார். எனவே, மாறு வேடங்களில் முதியவர் வேடம் என்பது தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பார்த்து ரசித்து ஏற்றுக்கொண்ட ஒரு வேடம் ஆகும். முதியவராக வரும்போது ரசிகர்களிடையே ஒரு ‘சிம்பதி’ கிடைக்கும். எனவே எம்.ஜி.ஆர் பாரம்பர்ய வெற்றி ஃபார்முலாவான முதியவர் வேடத்தை தன் பல படங்களில் பயன்படுத்திக் கொண்டார். எம்.ஜி.ஆர் தன் படங்களில் ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்ததால் பிற வேடங்களில் நடிக்க வாய்ப்பில்லை. எனவே அவர் போலீஸாக வரும்போதும் அவர்மீது தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு தப்பிக்கும் போதும் கதாநாயகியை வேற்றுருவில் வந்து காதலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் மாறு வேடங்களைத் தெரிவு செய்தார். முதியவர் வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் வெவ்வேறு வகையான முதியவர் வேடங்கள். அவற்றை இப்போது விரிவாகக் காண்போம். வேடப் பொருத்தம் முதியவர் வேடத்துக்குரிய நரைத்த தலை, தளர்ந்த உடல், சுருங்கிய கண்கள், ஒளியிழந்த முகம், நடுங்கும் குரல் என மேக்கப், காஸ்டியூம், நடிப்பு என அனைத்திலும் எம்.ஜி.ஆர் கவனம் செலுத்தியிருப்பார். குலேபகாவலி, மலைக்கள்ளன், மகாதேவி, பாக்தாத் திருடன், படகோட்டி, தேடி வந்த மாப்பிள்ளை போன்ற சில படங்களில் முதியவராக மாறு வேடமிட்டு வந்து சில முக்கியக் காட்சிகளில் நடித்திருப்பார். குலேபகாவலியில் முதியவர் வேடத்தில் வந்து லக்பேஷ்வாக நடிக்கும் டி.ஆர் ராஜகுமாரியை பகடையில் ஜெயிக்கும் ரகசியத்தை அறிந்து அவரை வெல்வார். மலைக்கள்ளன் படத்தில் முதியவராக வந்து பி.பானுமதியைக் காப்பாற்றுவார் பின்னர் அவரை ரகசியமாகச் சந்திக்க இரவில் வந்த போது கூட முதியவரைப் போல நடுங்கும் குரலில் பேசி தன்னை வெளிப்படுத்துவார் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் சாக்ரட்டீஸ் போன்ற தோற்றத்தில் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவர் பாடிய மனுசன் பொறக்கும்போது பொறந்த புத்தி போகபோக மாறுது என்ற பாடலில் வரும் ‘கணக்குத் தெரியாம சிலது கம்பையும் கொம்பையும் ஆட்டுது. ஆனால் காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக் காட்டுது’ என்ற வரிகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தவை ஆகும். இந்தப் பாட்டு வரிகள் சிலர் தம் செல்வாக்கு நிரந்தரமானது என நினைத்து ஆடும் ஆட்டங்களின் நிலையாமையை விளக்குவதால் அவருக்கு மிகவும் பிடித்தன. அவர் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த இடம் தெரியாமல் போனதை நேரில் கண்டவர் என்பதால் நிலையாமை தத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார். உதய சூரியன் என்ற பெயரில் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்த எம்.ஜி.ஆர் திமுகவின் முதல் தேர்தல் பிரவேசத்தை முன்னிட்டு சாக்ரட்டீஸ் முதியவர் வேடத்தில் வந்து பாட்டிலேயே பகுத்தறிவு பிரசாரமும் செய்தார். ‘உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் -- அதை ஒப்புக்கொள்ளும் வீரருக்கு முன்னால -- நாம் கத்தி என்ன கதறி என்ன -- ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா’ என்று பாடுவார். பாக்தாத் திருடனில் வைஜயந்திமாலாவை ஏலத்தில் வாங்கும் அருவருப்பான முதியவராக வருவார். அவருக்குக் கூரிய ஒட்டு மூக்கும் பெரிய தொந்தியும் இருப்பதால ஆள் அடையாளமே தெரியாது. அவரிடமிருந்து தப்பிக்க நினைக்கும் வைஜெயந்திமாலாவின் காலில் சுருக்குப் போட்டு ‘’சூத்திரக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு – உன் பாச்சா ஒன்னும் பலிக்காது இங்கே செல்லு ‘’ என்று அவரை மீண்டும் குகைக்குள்ளே அனுப்பிவிடுவார். இந்த வேஷத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும். படகோட்டியில் இரண்டு குப்பத்தையும் ஒற்றுமைப்படுத்த முதியவர் வேஷம் போட்டிருப்பார். சரோஜாதேவியைக் குழந்தே குழந்தே என்று கூப்பிடுவார். அதற்கு அவர் ‘’சதா குழந்தே குழந்தேன்னுட்டு விலைக்கு வாங்குன சனியன் மாதிரி’’ என்று திட்டுவார். ‘’நானொரு குழந்தை நீயொரு குழந்தை – ஒருவர் மடியிலே ஒருவரடி’’ என்ற பாட்டு இந்தத் தாத்தா வேடத்துடன் தொடங்கும் பிறகு அந்த வேடம் கலைந்து மாணிக்கமாக காட்சியளிப்பார். தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவுக்கு இங்கிலீஷ் மியூசிக் கற்றுத்தரும் வாத்தியாராக வருவார். இவரது தோற்றம் தலையில் தொப்பியும் செம்பட்டை தாடியும் வட்டக் கறுப்புக் கண்ணாடியும் பார்க்க சற்று அருவருப்பாக இருக்கும். ஆனால் ஆறுமுகம் இது யாரு முகம் – தாடியை வச்சா வேறு முகம் -- தாடியை எடுத்தா தங்க முகம்’’ என்ற பாட்டு தாத்தா வேடத்துடன் தொடங்கும். தாய் சொல்லை தட்டாதே படத்தில் சந்தையில் சுற்றித் திரியும் ஒரு நாடோடி முதியவராக மாறு வேடம் போட்டு வழக்கம் போல குற்றவாளிகளைப் பிடிக்க வருவார். அதில் வேடம் போட்டவர் எம்.ஜி.ஆர் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தோற்றம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். உச்சியில் வழுக்கை நரைத்த முடி மீசை தாடி, கிழிந்து ஒட்டுப் போட்ட பழைய நைந்த கோட், தோளில் ஒரு பச்சைக்கிளி கை மடக்கில் உட்கார்ந்திருக்கும் ஒரு குரங்கு, கக்கத்தில் இடுக்கிய ஒரு குடை, கையில் ஒரு தடியோடு தளர்ந்து தடுமாறும் நடை, சில சமயம் அந்தக் குரங்கு சங்கிலியைப் பிடித்த படியும் நடப்பார், கூடவே அந்தக் குரங்கு ஓடி வரும். சந்தையில் பிக்பாக்கெட் அடித்தல், பெண்களை, ஃபாலோ செய்தல், அவர்களோடு நடந்து வந்தபடி விசிலடித்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையில் நாக்கை துருத்தி முறைத்துப் பார்த்து குற்றவாளிகளை அதட்டுவார். கூடவே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியைப் படைத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே’’ என்று பாட்டும் பாடுவதாக அக்காட்சி அமைந்திருக்கும். காவல் நிலையத்துக்கு வந்து வேடத்தைக் கலைக்கும்போது எம்.ஜி.ஆர் என்பது தெரிய வரும். முதல் முறை இப்படம் பார்ப்போருக்கு எம்.ஜி.ஆர் என்று தெரியாது. ஆசைமுகம் படம் தமிழில் அந்த முதல் ப்லாஸ்டிக் சர்ஜரி பற்றிய படம் ஆகும். எம்.ஜி.ஆர் வஜ்ரவேல் என்ற ராம்தாஸ் தன்னைப் போல முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து தன் வீட்டில் புகுந்துவிட்டதை அறிந்து தன் அப்பாவின் சித்தப்பாவைப் போல ஒரு கோட் சூட் போட்ட வெளிநாட்டு முதியவர் போல மாறு வேடத்துடன் வந்து தன் வீட்டிலேயே தங்குவார். அப்போது ராம்தாசை கேலி செய்து பாடுவதாக ஒரு பாடலை எம்.ஜி.ஆர் பாடுவார் அதுதான் 'எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு' என்ற பாடல். இப்பாடல் காட்சியில் நாகேஷும் சரோஜாதேவியும் மாறு வேடமிட்ட எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவார்கள் ராம்தாசுக்கு இது கோபத்தை ஏற்படுத்தும். இந்த வேடத்தில் எம்.ஜி.ஆர் ஒரு காலை சாய்த்து சாய்த்து ஒரு கைத்தடியை ஆதரவாகக் கொண்டு நடப்பார். இதில் தலைமுடி கறுப்பும் வெளுப்புமாகக் காணப்படும் தாடி இருக்கும் கண்ணில் கூலிங்க் கிளாஸ் போட்டிருப்பார். ஒரு ஸ்டைலான கோட் சூட் போட்ட தாத்தாவாக வெளிநாட்டிலிருந்து வந்தவராகத் தோன்றுவார். இந்த மேக்கப் காஸ்டியூம் அனைத்தும் நவீன காலத்து தாத்தா போல இருக்கும். எம்.ஜி.ஆர் முதியவர் வேடத்தில் தோற்றம் உடை, குரல் மற்றும் வசனம் நடிப்பு முக பாவனை கை கால் அசைவு என அனைத்திலும் கவனம் செலுத்தியதோடு அந்த வேடத்திலேயே பல படங்களில் சமூக சிந்தனையுள்ள பாட்டும் பாடியிருக்கிறார். விகடன். முனைவர் இராஜேஸ்வரி செல்லையா. #🎬 சினிமா #😍Old மூவிஸ் #📷நினைவுகள்
🎬 சினிமா - NATESH NATESH - ShareChat
தாலி பாக்கியம் திரைப்படம் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - ShareChat
01:58
🔥 திரைப்படம் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - ShareChat
01:59
அம்பிகாபதி திரைப்படம் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
😍Old மூவிஸ் - ShareChat
01:07
அரிச்சந்திரா திரைப்படம் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬 சினிமா - ShareChat
01:09
#காமராஜரின்_கடைசி_நாட்கள். நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் நுழைந்தவர் காமராஜர். அவர் 1964-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். இப்பொறுப்பில் 1967 வரை பதவி வகித்து, மூன்று முறை பிரதமர்களைத் தேர்வுசெய்த பெருமை இவருக்கு உண்டு. சோதனையான சூழலில் நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் பிரதமராகத் தேர்வுசெய்து, தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார். 1967 தேர்தல் தோல்வி காரணமாகத் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட திமுக ஆட்சியை ஆறு மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டேன் என்று பெருந்தன்மையோடு அரசியல் நாகரிகத்தை அறிமுகப்படுத்தினார். 1969-ல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவில் காமராஜர் ஒரு பக்கமும், இந்திரா காந்தி மற்றொரு பக்கமும் இருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டது. அந்தப் பிளவின் காரணமாக தேசிய சக்திகளின் வலிமைக்குத் தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்டது. காமராஜர் 1967-க்குப் பிறகு கடைசியாகச் சந்தித்தது 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலை. அந்தத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இந்தச் சூழலில், திமுகவில் பிளவு ஏற்பட்டு, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதால் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவம் குறைகிற நிலை ஏற்பட்டது. திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியின் பெரும் பகுதியை எம்ஜிஆர் கைப்பற்றுகிற சூழல் உருவானது. அந்தப் பின்னணியில்தான் திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திமுகவை ஓர் அரசியல் கட்சியாக எதிர்கொண்ட காமராஜரால், அதிமுகவுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்த ஆதரவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டு நலன் கருதி அதிமுகவின் வளர்ச்சியை எப்படியும் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இரண்டு காங்கிரஸும் இணைந்து புதுச்சேரி, கோவை மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வியூகத்தை காமராஜர் வகுத்தார். அதற்கு புதுச்சேரியில் வெற்றியும், கோவையில் மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைகிற நிலையும், காமராஜருக்கு சற்று ஆறுதலைத் தந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு காங்கிரஸ்களும் இணைய வேண்டுமென்ற முயற்சியில் சிலர் ஈடுபட்டபோது, அதற்கு காமராஜர் மனதளவில் இசைவுடன் செயல்பட்டார். இத்தகைய அரசியல் சூழலில் (1975-ல்), காமராஜர் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளானார். தனது 73-ஆவது பிறந்தநாள் விழாவை எளிமையாகக் கொண்டாடினார். சில காலமாகவே உடல்நலம் குன்றிய நிலையில் காமராஜர் காணப்பட்டார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவந்தார். எனினும், அக்டோபர் 1, சிவாஜியின் பிறந்தநாள் அன்று அருகில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டுத் திரும்பினார். மறுநாள் அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளன்று இயல்பாகவே இருந்தார். அன்று காலை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பிற்பகல் 1.30 மணிக்கு அவர் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார். மாலை சுமார் 3.05 மணி அளவில் உடம்பு முழுவதும் வியர்த்துவிட்டது. அந்த அறையில் குளிர்சாதனப் பெட்டி இயங்கிக்கொண்டிருந்த நிலையிலும் அவரது உடம்பு வியர்த்திருந்தது. காமராஜர் தமது உதவியாளர் வைரவனை அழைத்து, மருத்துவர்களைக் கூப்பிடும்படி கூறினார். உடனே, மருத்துவர் சவுரிராஜனுக்கும் மருத்துவர் ஜெயராமனுக்கும் தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப்பட்டது. பிறகு, காமராஜரின் உடம்பு சில்லிட்டிருந்ததால் உடம்பைத் துடைத்து, போர்வையால் போர்த்திவிட்டு, அறையிலிருந்து வைரவன் வெளியேறியபோது, டாக்டர்கள் வந்தால் தன்னை எழுப்பும்படி கூறிய காமராஜர், “விளக்கை அணைத்துவிட்டுப் போ” என்று கூறினார். 3.15 மணிக்கு வந்த மருத்துவர் சவுரிராஜன் காமராஜரின் உடல்நிலையை அவசர அவசரமாகப் பரிசோதித்துக்கொண்டே, “ஐயோ... பெரியவர், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாரே” என்று வீறிட்டு அழுதார். தொடர்ந்து வந்த மருத்துவர்கள் ஏ.எல்.அண்ணாமலையும் ஜெயராமனும் உடலைப் பரிசோதித்துப் பார்த்து, உயிர் பிரிந்ததை உறுதிப்படுத்தினார்கள். உடனே, ஆளுநர் கே.கே.ஷாவுக்கும், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதிக்கும் தொலைபேசி மூலம் செய்தி தெரிவித்தார் மருத்துவர் அண்ணாமலை. காமராஜர் மறைவுச் செய்தியைக் கேட்டவுடனே முதல்வர் மு.கருணாநிதி விரைந்து வந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த சிவாஜி கணேசன் துக்கம் பெருகி, “போச்சே... போச்சே...” என்று கதறியபோது, அவரை மு.கருணாநிதி அணைத்துக்கொண்டு தேற்றினார். மருத்துவர்கள் வந்து தெரிவிக்கும் வரையில், காமராஜரின் உயிர் பிரிந்தது யாருக்கும் தெரியாது. காரணம், அவர் படுத்திருந்த தோற்றத்திலோ முகத்திலோ ஒரு வித்தியாசத்தையும் காண முடியவில்லை. சுகமாகத் தூங்குவதுபோலவே அவரது முகம் காணப்பட்டது. காமராஜரின் உடல், மாலை 5.30 மணிக்கு ஒரு சிறப்பு வாகனத்தில் ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.00 மணிக்கு ராஜாஜி மண்டபத்திலிருந்து அன்றைய மவுண்ட் ரோடு, மர்மலாங் பாலம் வழியாக காந்தி மண்டபத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, அதற்கு இடது பக்கத்தில் தகனம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இந்த இடத்தைத் தேர்வுசெய்து தகனத்துக்கான ஏற்பாடுகளை, காங்கிரஸ் தலைவர்களோடு கலந்து மு.கருணாநிதி செய்திருந்தார். ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே, மறைந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தக் கடல்போல் பெரிய கூட்டம் திரண்டது. ஜன சமுத்திரத்தைச் சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினார்கள். மூவர்ண தேசியக் கொடியால் காமராஜர் உடல் போர்த்தப்பட்டிருந்தது. பீரங்கி வண்டியில் காமராஜர் உடல் சென்றதைக் கண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள். ராஜாஜி மண்டபத்திலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் காந்தி மண்டபத்தை அடைவதற்கு மூன்று மணி நேரம் பிடித்தது. அக்டோபர் 3, மாலை 6.35 மணிக்கு காமராஜரின் உடல் தகனம் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. சிதைக்குத் தீ மூட்டும் முன்பு பீரங்கிகள் மூன்று தடவை முழங்கின. காமராஜரின் தங்கை நாகம்மாளின் பேரன் கனகவேல் சிதைக்கு எரியூட்டியபோது, அருகே இருந்த காங்கிரஸ் கட்சியினர் கதறி அழுதனர். “அமரர் காமராஜர் வாழ்க!” என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. இறுதி நிகழ்வில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலங்கிய கண்களோடு பங்கேற்றார். தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார். இவற்றையெல்லாம் வலியுறுத்திய காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, அவர் பிறந்தநாளில் மறைந்து அவரோடு இரண்டறக் கலந்துவிட்டார். காந்தியத்தின் கடைசித் தூண்களுள் ஒன்று சாய்ந்துவிட்டது என்று கூறுவது மிகவும் பொருத்தமாகும். வாழ்நாளில் தனக்கென்று எந்த சொத்தையும் அவர் சேர்த்ததில்லை. ஆனால், நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பொற்கால ஆட்சி நடத்தி, அடித்தளம் அமைத்த பெருமை காமராஜருக்கு உண்டு. அதன்மூலம் தமிழ்ச் சமுதாயம் அடைந்த பயன்கள் ஏராளம். அதனால்தான், இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்; நினைவுகூரப்படுகிறார். - ஆ.கோபண்ணா, #காமராஜர்
காமராஜர் - NATESH NATESH - ShareChat
எப்படியும் நமக்கு நேரம் சரி இல்லை #💪கெத்து ஸ்டேட்டஸ்
💪கெத்து ஸ்டேட்டஸ் - சத்தியவான கிட்டஇருந்து எம காப்பாத்துன . சாவித்திரி மாதிரி நான் உங்கள காப்பாத்துவேங்க. எமனேவந்தாலும் உன்கிட்ட காப்பாத்த இருந்து எனனை முடியாதுனுசொல்லு ? சத்தியவான கிட்டஇருந்து எம காப்பாத்துன . சாவித்திரி மாதிரி நான் உங்கள காப்பாத்துவேங்க. எமனேவந்தாலும் உன்கிட்ட காப்பாத்த இருந்து எனனை முடியாதுனுசொல்லு ? - ShareChat
யாரெல்லாம் 1 ரூபாய் காயின் போட்டு பேசி இருகிங்க!!! #📷நினைவுகள்
📷நினைவுகள் - 711 haTesh 8 0 711 haTesh 8 0 - ShareChat
70 ;80: நினைவுகள் யாரெல்லாம் ரேடியோ டேப் ரெக்கார்டரில் இப்போதும் பாட்டு கேட்பது ? #தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - natesh natesh - ShareChat
பாடினால் ஒரு பாட்டு பாடல் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎬 சினிமா
😍Old மூவிஸ் - ShareChat
01:30