ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி !!!
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார்...
அவள்,
‘கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’
என ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள்...
இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்...
பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு
இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?..என்றாராம்.
இன்னும் நவதிருப்பதி சன்னிதி சாத்துமறையின் போது ' கூவுதல் வருதல் 'திருவாய்மொழி பாசுரம் ராகத்துடன் சேவிக்கும் வழக்கம் அங்குள்ள அருளிசெயல் கோஷ்டியார் கடைபிடித்துவரும் சம்பிரதாயம் ஆகும். #🤔தெரிந்து கொள்வோம்