*இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா... * - - - - - - - - - - - - - - நான் *Bsnl ஆபீஸ்ல* அரைமணி நேரமா உக்காந்திருக்கேன். மேடம் போன் பேசி முடிச்சுட்டு, மெதுவா என் பக்கமா திரும்பினாங்க.
*மேடம்:* சொல்லுங்க சார்...
*மீ:* குட் மார்னிங் மேடம்...
*மேடம்:* இதை சொல்லத்தான் வந்தீங்களா ?...
*மீ:* இல்ல மேடம்... ஏர்டெல் - லிருந்து BSNL மாற...
*மேடம்:* புஷ்பாக்கா... காபி வாங்கவா போறீங்க ?...
*புஷ்பாக்கா:* ஆமா மேடம்...
*மேடம்:* கிருஷ்ணன் கடைல கல்லு வெச்ச பொட்டு, ஒரு அட்டை வாங்கிட்டு வாங்க. காசு தர்றேன்...
*மீ:* கல்லு வெச்ச கம்மல் கேள்விப்பட்டிருக்கேன். கல்லு வெச்ச பொட்டு இருக்கா மேடம் ?...
*மேடம்:* வந்த விஷயத்த சொல்லுங்க சார்...
*மீ:* ஏர்டெல் - லிருந்து BSNL மாற...
*மேடம்:* ஆனந்தி... புஷ்பாக்கா காபி வாங்க போறாங்க. வடை வேணும்னு கேட்டியே !. கூப்ட்டு சொல்லிடு. ம்ம்ம் சொல்லுங்க சார்...
*மீ:* ஏர்டெல் - லிருந்து BSNL மாற...
*மேடம்:* ஜவகர் சார். உங்க மிஸஸ் அளவு ஜாக்கெட் கேட்டாங்க. கொண்டு வந்திருக்கேன். சாயங்காலம் மறக்காம வாங்கிட்டு போயிடுங்க. ம்ம்ம் சொல்லுங்க சார்...
*மீ:* ஏர்டெல் - லிருந்து BSNL மாற...
*மேடம்:* ஜவகர் சார்... முதுகு பக்கம் அரை இஞ்ச் பிடிச்சு தைக்கச் சொல்லுங்க. ம்ம்ம் சொல்லுங்க சார்...
*மீ:* ஏர்டெல் - லிருந்து BSNL மாற...
*மேடம்:* ஆனந்தி... கேட் பக்கம் போனா செக்யூரிட்டி தாமுவ வரச்சொல்லு. கொரியர் அனுப்பனும். ம்ம்ம் சொல்லுங்க சார்...
*மீ:* ஏர்டெல் - லிருந்து BSNL மாற...
*மேடம்:* புஷ்பாக்கா... கங்கா கேன்டீன் சண்முகத்துகிட்ட மதியத்துக்கு கூட்டு பொரியல் கட்டித் தரச்சொல்லி வாங்கிட்டு வாங்க. ம்ம்ம் சொல்லுங்க சார்...
*மீ:* ஏர்டெல் எவ்ளோ நல்ல நெட் வொர்க்ன்னு இப்பதான் புரிஞ்சது மேடம். கிளம்பறேன் மேடம்... 🙄🙄🙄 #😅வடிவேலு காமெடி ஸ்டேட்டஸ்🤩 #சிரிப்போ சிரிப்பு 🤣 #🤩இன்றைய காமெடி🤣 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #செந்தில் கவுண்டமணி கலக்கல் காமெடி 👻😂🤣😁