#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
டிசம்பர் 11,
*விஸ்வநாதன் ஆனந்த்*
இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் 1969ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை என்ற இடத்தில் பிறந்தார்.
1987ம் ஆண்டு உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தியாவின் புகழை இமயம் தொடச் செய்த விஸ்வநாதன் ஆனந்த் அர்ஜுனா விருது(1985), பத்ம ஸ்ரீ விருது(1987), தேசிய குடிமகன் விருது(1987), ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது(1991), புக் ஆஃப் தி இயர் விருது(1998), பத்ம பூஷண் விருது(2000), சதுரங்க ஆஸ்கார் விருது(ஆறுமுறை), பத்ம விபூஷண் விருது(2007) போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
#நீரோடை ..... #நீரோடை
நீரோடைக்கும் பாறைக்கும் இடையே..
நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின்..
இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது..
தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்...
முயற்சி செய்யுங்கள்.. எதுவும் முடியும்!
#Stream
Between the stream and the rock...
The ongoing
uninterrupted struggle...
In the end,
the stream wins...
Not by its strength, but by continuous effort...
Keep trying... Anything is possible!
#🕉 शिव भजन #🙏🏻आध्यात्मिकता😇 #🕉 ओम नमः शिवाय 🔱 #🔱हर हर महादेव #🔱बम बम भोले🙏
#முயற்ச்சி
ஒருபோதும் உங்களுடைய
முயற்சியை நம்பிக்கையை
ஆர்வத்தை கைவிட வேண்டாம்.
ஏனெனில்,
உங்களுக்கான நாட்கள் விரைவில் உங்களை வந்தடையும்.
Never stop your
*Efforts*
*Hope*
*Passion*
Because, your days or coming soon.
சிந்திப்போம் செயல்படுவோம்!
*அசோக் குமார் (Ashok Kumar, வங்காள மொழி অশোক কুমার গাঙ্গুলি , 13 அக்டோபர் 1911 – 10 திசம்பர் 2001)* என்றும் அன்பாக தாதாமோனி என்றும் அழைக்கப்படும் குமுத்லால் கஞ்சிலால் கங்குலி ஓர் இந்திய திரைப்பட நடிகர்.
விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது.
அசோக்குமார் வங்காள ப்ரெசிடென்ஸி பகுதியில் பகல்பூரில் குமுத்லால் என்ற இயற்பெயரில் பிறந்தார். இவர் வழக்கறிஞரான தந்தை குஞ்சிலால் கங்குலிக்கும், கவுரிதேவிக்கும் மூத்த மகனாய் பிறந்தார். இரண்டு வருடம் கழித்து பிறந்த தங்கை சதிதேவி சஷாதர் முகர்ஜிக்கு மிக சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அடுத்து பிறந்த தமையன் பெயர் அனூப் குமார் 15 வருட இடை வெளியில் 1926-ல் பிறந்தார். இதை அடுத்து மூன்று வருடத்தில் அபாஸ் என்ற கிஷோர் குமார் 1929-ல் பிறந்தார்
குமுத்லால் கல்கத்தா ப்ரெசிடெண்சி கல்லூரியில் கல்வி பயின்றார் .அவர் வழக்கறிஞர் வேலைக்கு படித்தாலும் அவரது கவனம் முழுவதும் சினிமா மீதே சென்றது .எனவே பம்பாய்க்கு சென்று தன மைத்துனருடன் பாம்பே டாக்கீஸில் லேப் உதவியாளராக பணி புரிந்தார் .
குமுத்லால் கங்குலி ஒரு ஆய்வக உதவியாளராக மகிழ்ச்சியாக பணிபுரிந்தார், 1936 ஆம் ஆண்டில் மும்பை டாக்கீஸ் தயாரிப்பு ஜீவன் நையா . அப்போது நட்சத்திரமான தேவிகா ராணி நடிகர் நஜ்முல் ஹாசன் என்ற கதாநாயகனுடன் நடித்தார் . தேவிகா ராணி யின் கணவர் ஹிமான்சு ராய் அப்படத்தின் தயாரிப்பாளர் . என்றாலும் நஜ்முல் ஹாசனுடன் காதல் வயப்பட்டு தேவிகாரணி அவருடன் ஓடி விட்டார் . பின்னர் சில நாட்களில் தேவிகாராணி கணவருடன் திரும்ப வந்து விட்டார் .பழைய கதாநாயகன் நஜ்முல் ஹாசன் நடிக்க மறுத்து விட்டார் . எனவே கதாநாயகனுக்கு உரிய லட்சணங்கள் இல்லாது பார்வைக்கு சுமாராக இருந்த குமுத்லால் அசோக்குமார் என்ற பெயர் மாற்றப்பட்டு அப்படத்தின் கதாநாயகனாக மிளிர்ந்தார் .
இவர் 2001ஆம் ஆண்டு திசம்பர் 10-ல் 90 வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அப்போது அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நடிப்புக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் என்று பாராட்டினார்
பிரபல இந்தி திரைப்பட நடிகர்
அசோக் குமார் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
அசோக் குமார் என்று அன்பாக தாதாமோனி என்றும் அழைக்கப்படும் குமுத்லால் கஞ்சிலால் கங்குலி ஓர் இந்திய திரைப்பட நடிகர். விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பாகல்பூரில் பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1988ஆம் ஆண்டில் தாதாசாகெப் பால்கே விருதும் 1998ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதும் வழங்கியுள்ளது.
இந்தியத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். ‘சல் சல் ரே நவ்ஜவான்’, ‘ஷிகாரி’, ‘சாஜன்’, ‘சர்கம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை ஈட்டின. ‘ஜுவல் தீஃப்’, ‘ஆஷீர்வாத்’, ‘புரப் அவுர் பஸ்சிம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். தேவ் ஆனந்த், திலீப் குமார், ராஜ் கபூர் என பல நாயகர்கள் வந்தாலும் இவரது புகழ் மங்கவில்லை.
‘ஹம்லோக்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். ‘ஜித்தி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தார். 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சிறந்த ஓவியர், ஹோமியோபதி மருத்துவராகவும் திகழ்ந்தார்.
சிறந்த பாடகர், நடிகரான கிஷோர் குமார் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 1987-ல் இவரது பிறந்த நாளன்று தம்பி கிஷோர் இறந்ததால், அதுமுதல் இவர் தன் பிறந்தநாளை கொண்டாடவே இல்லை.
சங்கீத நாடக அகாடமி விருது, பிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகருக்கான தேசிய விருது, தாதா சாஹேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தி திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த அசோக் குமார் 90-வது வயதில் (2001) மறைந்தார்..
இந்த நினைவு நாளில் இந்த மாபெரும் நடிகரை நினைவு கூறுவோம்
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
#இயற்கை
இயற்கை அமைதி காக்கிற போது, மனிதன் அனைத்தையும் ஆளப் பிறந்தவனாக ஆணவம் கொள்கிறான்...*_
_புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி என பொங்கி எழுகிற போது, அதன் ஆவேசத்தில் அகப்படாமல், பிழைத்தால் போதும் என ஓடிஒழிகிற அனாதை ஆகிவிடுகிறான். மனித கட்டமைப்புகள் ஒடுங்கி விடுகிறது..._
_*இயற்கையின் அமைதி காலத்திலும் அதன் ஆவேச சக்தியை உணர்ந்து, அதை சேதப்படுத்தாமல் அதனிடம் விட்டுக் கொடுத்து வாழப் பழகுவோம்..!!*_
#சில இடங்களில்
சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது...*
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலை காட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களை தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்...
நம்மால் சொல்லப்படும் வார்த்தைகள்,
நாம் நினைத்தபடி.
புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது
அபத்தம்.
இந்த நாள் இனிதானது #🤔புதிய சிந்தனைகள்
Morning Coffee.... #morning coffee
*சிலர் உங்களுடைய தோல்வியை காண காத்திருக்க கூடும்...*
அவர்களை ஏமாற்றி விடுங்கள். அதாவது,
*சிறப்பாக வெற்றியடைந்து காட்டுங்கள்..!!*
~~~~~~~~~~~~~~~~
*Some people might be waiting to see you fall...*
Surprise them!
*Do your best and succeed..!!*
*சிந்திப்போம் செயல்படுவோம்!*
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
*டிசம்பர் 09, 1979*
பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்.
பெரியம்மை மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும்.
இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடும் நிலை உருவாகியது. உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் முகத்தில் நீங்காத தழும்புகளால் காணப்பட்டனர்.
20-ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300- 500 மில்லியன் மக்கள் இறந்தனர்.
எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் ஆண்டு கண்டுபிடித்தார். 1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.
அதனால் 1979-ம் ஆண்டு டிசம்பர் 09-ந்தேதி இந்நோய் உலகத்தில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.











![🤔புதிய சிந்தனைகள் - 5 574] |9 HeসA IM IN9 2111M 5 574] |9 HeসA IM IN9 2111M - ShareChat 🤔புதிய சிந்தனைகள் - 5 574] |9 HeসA IM IN9 2111M 5 574] |9 HeসA IM IN9 2111M - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_636499_b1766ac_1765300634597_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=597_sc.jpg)

