💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
ShareChat
click to see wallet page
@sudarsan142
sudarsan142
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
👉 உண்மை சம்பவம் 👈 👉 பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் சில பல வக்கிரம் எண்ணம் கொண்டவர்களுக்கு நடுவில் பேச்சியம்மாள்-முத்துமாஸ்டர் ஆக உருவான உண்மை சம்பவம் 👈 ஒரு தாயின் தைரியம் ஒரு வாழ்க்கையின் மறுஉருவாக்கம்...!! கணவர் திடீரென உயிரிழந்த பிறகு பச்சிளம் குழந்தையுடன் தனியாக நின்ற ஒரு பெண் அவள் பெயர் பேச்சியம்மாள் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு...!! சமூகம் பாதுகாப்பளிக்கவில்லை. வேலை செய்யும் இடங்களில் தொந்தரவு ஒரு பெண்ணாக வாழ்வதற்கான அச்சம் மகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டிய பொறுப்பு…!! அப்போது பேச்சியம்மாள் எடுத்த முடிவு சாதாரணமல்ல...!! அவள் ஒரு ஆணாக மாற முடிவு செய்தாள் தன் பெயரை முத்து என்று மாற்றிக்கொண்டாள்...!! முத்து மாஸ்டர் ஆக வாழத் தொடங்கினாள்...!! முடியை குறுகியதாக வெட்டினாள் லுங்கி சட்டை அணிந்தாள் பெயிண்டிங் வேலை டீக்கடை உதவி போன்ற வேலைகள் செய்தாள்...!! பொதுமக்கள் இடங்களில் ஆண்களுக்கான வசதிகளை பயன்படுத்தினாள்...!! இவை அனைத்தும் ஒரே காரணத்திற்காக தன் மகளை பாதுகாப்பாக, அச்சமில்லாமல் வளர்க்க...!! மகள் திருமணம் ஆன பிறகும் கூட பேச்சியம்மாள் முத்து என்ற அடையாளத்திலேயே வாழ்கிறாள்...!! ஏனெனில் அந்த அடையாளம் இப்போது அவளுக்கு பாதுகாப்பு சுயமரியாதை சுதந்திரம்...!! ஒரு தாயின் தியாகம் ஒரு பெண்ணின் தைரியம் ஒரு மனிதனின் வாழ்க்கை போராட்டம் இதுதான் பேச்சியம்மாள் அல்லது முத்து மாஸ்டர்...!! குறிப்பு : இதை பற்றி உங்கள் கருத்தை தயங்காமல் கூறுங்கள்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💞Feel My Love💖 - மஒருதாய் தந்தையாக மாறினாள் மகளின்பாதுகாப்புக்காக 30 ஆண்டுகள் தன் ஆணாகவே வாழ்ந்துவருகிறாள் .! Sudarsan Sudarsan மஒருதாய் தந்தையாக மாறினாள் மகளின்பாதுகாப்புக்காக 30 ஆண்டுகள் தன் ஆணாகவே வாழ்ந்துவருகிறாள் .! Sudarsan Sudarsan - ShareChat
👉 அன்பை நேசியுங்கள் அன்பை விதையுங்கள் நீங்கள் அறுவடை செய்யும் பொழுது அன்பு அது பலமங்காக உங்களிடம் வரும் 👈 ஒரு பெண் ஒரு மகானிடம் என் காதலனுக்கும் எனக்கும் இப்போது எல்லாம் அடிக்கடி சண்டை வருகிறது என்னை அவர் புரிந்து கொள்ளவதில்லை தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது என் வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள் என்றாள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...!! ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன் என்றார்...!! குழப்பத்தில் இருந்தவள் தன் காதலனுக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போது என்ற எண்ணத்தில் தைரியத்துடன் மகான் சொல்லியது போல அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள் மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது என நாட்கள் பல ஓடியது 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது...!! இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள் 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள் உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது 31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள் நேராக மகானை சந்திக்க வந்தாள் புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...!! பார்த்தீர்களா குரு பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன் இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள் இந்த புலி பூனை போலவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது என்றாள்...!! மென்மையாக சிரித்த அந்த மகான் ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய் உன் காதலன் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர் என்றார்...!! மகானின் சொல்லில் உண்மை அறிந்தவள் அன்புதான் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றிவிடும் என்பதை உணர்ந்தாள் அன்பின் வழி நடந்தால் அவள் வாழ்க்கை இனிக்க ஆரம்பித்தது...!! குறிப்பு : இந்த கதையில் வரும் சம்பவங்கள் ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும் அது (காதலன் காதலி கணவன் மனைவி) எல்லோருக்கும் பொருந்தும்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - Sudarsan Sudarsan சுரேஷ் நாராயணன் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவதில் பணத்தால் காட்டாதீர்கள் குணத்தால் காட்டுங்கள் Sudarsan Sudarsan சுரேஷ் நாராயணன் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவதில் பணத்தால் காட்டாதீர்கள் குணத்தால் காட்டுங்கள் - ShareChat
👉 கவலை இல்லாத மனிதன் 👈 உலகத்தை அறிந்தவன் உணர்ந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன் என்றான் ஒரு கவிஞன்...!! போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் மெய் தளராமல் உண்மையும் பொய்யும் உணர்ந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்...!! வாழ்க்கை என்பது நாடகமே வந்து போனவர் ஆயிரமே கொண்டு வந்தவர் யாருமில்லை கொண்டு சென்றதும் ஏதுமில்லை...!! துறவரம் துறந்த முனிவர் ஒருவர் ஒருநாள் ஆற்றங்கரையோரமாக உள்ள மரத்தடியில் தன் கையையே தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டு இருந்தார்...!! அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருத்தி தன் தோழியிடம் துறவறம் துறந்த இந்த முனிவர் இவருக்கு உயரமாக வைத்துக் கொண்டு தூங்கும் சுகம் கேட்கிறது இவர் எல்லாம் என்ன சந்நியாசி என்று கிண்டலாகச் சொன்னாள்...!! தூங்க முயற்சித்த முனிவருக்குத் தூக்கி வாரிப் போட்டது தான் எளிமையாக இருக்கவில்லையோ இன்னும் சில சவுகரியங்களை என் உடலும் மனமும் கேட்கிறதோ இந்தப் பெண் சரியாகத் தான் சொல்கிறாளோ...!! நான் என்ன செய்வது என்று கவலை கொண்டார் ஆழ்ந்து சிந்தித்து அருமையான ஒரு முடிவெடுத்தார்...!! இனி எதையும் தலைக்கு வைத்துப் படுப்பதில்லை என்று பொழுது சாய்ந்தது தவம் செய்தார் பயிற்சிகள் செய்தார் அமைதியான மனதுடன் ஆராய்ந்து தூங்கினார் தலையைத் தரையில் வைத்தபடி...!! அடுத்த நாள் அந்த இரண்டு பெண்களும் அவ்வழியே வந்தார்கள் முனிவரைப் பார்த்தார்கள்...!! முதலாமவள் சொன்னாள் பார்த்தாயா நேற்று நீ அவரைக் கிண்டல் செய்தாய் இப்போது அவர் தலைக்கு எதையும் வைக்கவில்லை அநேகமாக உன் மீது கடுங்கோபத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்...!! சத்தியமாக உனக்கு இப்போது சாபம் நிச்சயம் என்று பயம் காட்டினாள் அதற்கு மற்றவள் அடி போடி நான் ஏதோ விளையாட்டாகச் சொன்னேன்...!! அடுத்தவன் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்கும் இவர் என்ன பெரிய ஞானி என்று சொற்களால் சுட்டாள்...!! இப்போது அந்த ஞானிக்கு உண்மையாகவே கவலை வந்து விட்டது தான் உண்மையிலேயே முற்றும் துறந்த ஞானியா இல்லையா என்று...!! ஆம் மக்களே...!! மற்றவர் சொல்வதைக் கேட்டாலும் விமர்சனம் வரும் கவலை வரும் சுயமான முடிவு எடுத்தாலும் விமர்சனம் வரும் கவலை வரும்...!! உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதன்படி நடங்கள் உங்கள் வாழ்வுக்கும் மன அமைதிக்கும் சமூக நன்மைக்கும் எது தீங்கு விளைவிக்காமல் இருக்குமோ அதன்படி வாழ்ந்தால் உங்களுக்கு கவலை வராது....!! ஆம் கவலைப் படுவதால் ஒன்றும் நடக்கப் போவது இல்லை வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - னக்கு உண்மையாக ೨ இருப்பவர்களுக்கு மட்டும் நீ உணமையாக இரு எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயன்றால் நீ நல்லவன் முட்டாள் 6606 Sudarsan Sudarsan னக்கு உண்மையாக ೨ இருப்பவர்களுக்கு மட்டும் நீ உணமையாக இரு எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயன்றால் நீ நல்லவன் முட்டாள் 6606 Sudarsan Sudarsan - ShareChat
👉 கழுதை புலி சிங்கம் 👈 கழுதை புலியிடம் சொன்னது புல்லின் நிறம் சிவப்பு...!! புலி கழுதையிடம் சொன்னது இல்லை புல்லின் நிறம் பச்சை...!! விவாதம் சூடு பிடித்தது இறுதியில் காட்டின் ராஜாவான சிங்கத்திடம் தீர்வு கேட்டு இருவரும் சென்றார்கள்...!! கழுதை கத்தியது ராஜா புல்லின் நிறம் சிவப்பு அதுதானே உண்மை...!! சிங்கம் சொன்னது ஆம் புல்லின் நிறம் சிவப்பு என்று நம்பினால் அது உண்மைதான் புல்லின் நிறம் சிவப்புதான்...!! கழுதை மேலும் சொன்னது புலி இந்த உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறது புலிக்குத் தண்டனை கொடுங்கள்..!! சிங்கம் ஒத்துக் கொண்டு ஆணையிட்டது புலி ஒரு மாத காலம் சத்தம் எழுப்பாமல் அமைதி காக்க வேண்டும் இதுதான் தண்டனை...!! கழுதை மகிழ்ச்சியாக அந்த இடத்தை விட்டுச் சென்றது...!! புலி தண்டனையை ஏற்றுக்கொண்டது ஆனால் அந்த இடத்தை விட்டுச் செல்லும் முன் புலி சிங்கத்திடம் கேட்டது புல்லின் நிறம் பச்சைதானே பிறகு எனக்கு ஏன் ராஜா தண்டனை கொடுத்தீர்கள்...!! தண்டனை புல் சிவப்பா பச்சையா என்பதற்காக அல்ல ஆனால் உன்னைப் போல அறிவாளியான ஒரு உயிரினம் கழுதை போன்ற ஒரு முட்டாள் உயிரினத்திடம் ஒரு அற்ப விஷயத்திற்கு வாதிட்டு நேரத்தை வீணாக்கியதற்காகத்தான் இந்த தண்டனை...!! குறிப்பு: உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்து கொள்ளவே விரும்பாத தன் நம்பிக்கைகளும் மாயைகளும் மட்டுமே உண்மை என்று என்றுமே நம்பும் சில முட்டாளுடன் வாதிடுவது நேரமும் விரயம் பேச்சும் விரயம் என்பது தான் நிஜம் நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💞Feel My Love💖 - Sudarsau Sudarsan Sudarsau Sudarsan - ShareChat
🙏🙏🙏கடவுளால் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள்🙏🙏🙏 கடன் இல்லாமல் மாதாமாதம் வரும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தி இப்போது இருக்கும் வசதிகள் போதுமானது எனும் மன நிறைவுடன் வாழ்ந்தால் நீங்கள் உலகின் மிகப் பெரிய பணக்காரர்...!! உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை நேசித்தால் நீங்கள் உலகின் கவர்ச்சியான நபர்...!! உங்கள் பிள்ளைகள் உங்களை ஆதர்சமாக நினைத்தால் நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்...!! அந்த அங்கிள் மாதிரி நீயும் வாழ்க்கையில நல்லா வரணும் என அண்டை வீட்டுத் தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னால் நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ...!! ஏதாவது பிரச்னை என்றால் அதைத் தீர்க்க உங்கள் அண்டை அயலார் உற்றார் உறவினர் உங்களை நாடி வந்தால் நீங்கள் ஒரு தலைவன்...!! உங்களை நேரில் பார்க்காதவர்களும் உங்களை மதித்தால் நீங்கள் ஒரு பிரபலம்...!! அழியும் நிலையில் இருக்கும் ஒருவருக்கு எந்தப் பலனையும் எதிர்பாராமல் உதவி அவரை மீட்டு எடுத்தால் நீங்கள் கடவுள்...!! இதை எல்லாம் செய்ய பெரிய அளவில் பணமோ செல்வாக்கோ அவசியமில்லை என்பது மிகப் பெரிய உண்மை...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - Su Sudarsan Su Sudarsan - ShareChat
👉 யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம் 👈 செல்லாத காசிலும் செப்பு உண்டு...!! ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்...!! வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது ஆள் நடமாட்டமே இல்லை பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை...!! தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்...!! அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது...!! கால் தடுக்கிக் கீழே விழ...!! கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் சாக்கடையில் விழுந்தன...!! என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன்...!! ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான் அவரிடம் ஐயா என்ன ஆயிற்று என்று கேட்டான்...!! அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்...!! இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து கொடுக்க முடியுமா...!! எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்...!! அதற்கு வழிப்போக்கன் இதுதான் உங்கள் பிரச்னையா...!! அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை...!! ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது...!! மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி...!! இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார் செய்து கொள்ளுங்கள்...!! வண்டியை ஓட்டிச் சென்று...!! அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள் என்றான்...!! விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது...!! நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும்...!! இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே...!! இவரைப்போய் , குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என்று தலை குனிந்தார் விஞ்ஞானி...!! உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு...!! உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு...!! நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்...!! குறிப்பு : இது கதைக்கு அல்ல சில பேர் பணம் இருந்தால் நாம் தான் அறிவாளி நம் கீழ் எல்லோரும் முட்டாள் என நினைத்து வாழ்வோருக்கு இது ஒரு சவுக்கு அடி நிதர்சனம் சொல்வது சுதர்சனம்👍👍👍👍👍 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💞Feel My Love💖 - ஆகாததவறு செய்வதெல்லாம் செய்து விட்டு சொன்னால் Sorry மனிதனும் பரிகாரம் செய்தால் கடவுளும் ஆகிவிட சமாதானம் வேண் LD 6r60r நினைக்கும் கே கெட்ட ஜென்மங்கள் வாழும் உலகம் இது Sudarsan sudarsan ஆகாததவறு செய்வதெல்லாம் செய்து விட்டு சொன்னால் Sorry மனிதனும் பரிகாரம் செய்தால் கடவுளும் ஆகிவிட சமாதானம் வேண் LD 6r60r நினைக்கும் கே கெட்ட ஜென்மங்கள் வாழும் உலகம் இது Sudarsan sudarsan - ShareChat
🤩😍🤩 அடேய் சுதர்சன் இதானாடா மனேஜர் வேலை ஓஓஓஓஓ நான் கூட ஏதோ அக்கௌன்ட் டிபார்ட்மெண்ட் இல்லை கேஷ் கவுண்ட்டர் வேலையாக இருக்கும் நினைச்சேன் டா சுதர்சன் எல்லா வேலையும் பாவம் அவனே பார்த்துவிட்டு சாப்பிட்டு முடிச்சிட்டால் கடைசியா தட்டு இலை எடுக்கும் சின்ன வேலையை தான் குடுத்து இருக்கிறான் பெரிய மனசு டா சுதர்சன் அவனுக்கு என்னமோ போடா சுதர்சன் 🤩😍🤩 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:42
👉 யாதுமாகி யாருமற்று 👈 யாதுமாகி நிற்கிறது பணம் யாருமற்று நிற்கிறது குணம் யாதுமாகி நிற்கிறது லஞ்சம் யாருமற்று நிற்கிறது நேர்மை யாதுமாகி நிற்கிறது சாதி யாருமற்று நிற்கிறது நீதி யாதுமாகி நிற்கிறது மதம் யாருமற்று நிற்கிறது கடவுள் யாதுமாகி நிற்கிறது வன்முறை யாருமற்று நிற்கிறது மனிதம் யாதுமாகி நிற்கிறது பகல் வேஷம் யாருமற்று நிற்கிறது உண்மை நேசம் யாதுமாகி நிற்கிறது துரோகம் யாருமற்று நிற்கிறது நம்பிக்கை யாதுமாகி நிற்கிறது காமம் யாருமற்று நிற்கிறது காதல் யாதுமாகி நிற்கும் சொந்தம் அதன் தேவைக்கு யாருமற்று விலகும் அதே சொந்தம் அதன் தேவை முடிந்த பின் யாதுமாகி நிற்கும் நாம் அனைவரையும் ஓர் நாள் அன்பு என்பது யாவரையும் நலமாய் ஒற்றுமையாய் யாருமற்று என்பதை தூக்கி எறிந்து நம்மை ஒன்று சேர்க்கும்...!! 💘🐦💜 Sudrsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💞Feel My Love💖 - யாதுமாகி யாருமற்று & ன்பம்துன்பம் எதுவும் நிரந்திரம் இல்லை அதை எதிர்கொள்ளும் நாம் மட்டுமேதான் நிரந்திரம் !! Sudarsan Sudarsan யாதுமாகி யாருமற்று & ன்பம்துன்பம் எதுவும் நிரந்திரம் இல்லை அதை எதிர்கொள்ளும் நாம் மட்டுமேதான் நிரந்திரம் !! Sudarsan Sudarsan - ShareChat
👉 READING 👈 👉 வாசிப்பது 👈 வாசிப்பு என்பது சும்மா அல்ல அது யாரை வாசிக்கிறோம் என்ன வாசிக்கிறோம் ஏன் வாசிக்கிறோம் என்பதைத் தாண்டி புரியவைக்கும்...!! READING : R - Rejuvenating yourself உங்களையே புதுப்பித்துக்கொள்ளுதல்...!! E - Energizing yourself உங்களையே உத்வேகப்படுத்திக் கொள்ளுதல்...!! A - Analysing yourself உங்களையே ஆராய்ந்தறிதல்...!! D - Decoding yourself உங்களையே உடைத்துப்பார்த்தல்...!! I - Improving yourself உங்களையே முன்னேற்றிக்கொள்ளுதல்...!! N - Neutralizing yourself உங்களையே சமநிலைப்படுத்துதல்...!! இறுதியாக - finally G - Godliness in you உங்களது இறைத்தன்மை உணர்தல்...!! ஆகிய நிலைகளை கடக்கவல்லதாய் இருக்க வேண்டும்...!! எழுதுவது ரொம்ப சாதாரணம் யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம் அப்படித்தான் நிறைய பேர் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள் அடியேன் (நான் )உள்பட...!! ஆனால் Reading என்பதொரு Skill ஒரு Anti Hero ரொமான்ஸ் கதை படிச்சேன் செம்ம ஃபீல் போன்றோ அந்த குடும்ப நாவல்ல ஒரு லவ் ஸீன் பாரு போன்றோ Temporary துக்கடாத்தனம் இல்லாது நிஜமாலுமே Applying Skill வாசிப்பது போலவே வாசிப்பவர்களுக்கு என்றொரு Universal Acronym இருக்கிறது அதுதான் நிர்ணயிக்கும் ஒரு தரமான வாசிப்பாளரை...!! READER : R - Relevance Is it important இது கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டுமா...!! E - Education Does it teach me something new இது எனக்கு ஏதேனும் புதிதாக சொல்லித்தருகிறதா...!! A - Applicability Can I use it in my practice இதை நான் வாழ்வியலில் நடைமுறைப்படுத்த முடியுமா...!! D - Discrimination Is the study well-designed நாம் வாசிக்கும் விஷயம் பாரபட்சமற்று கையாளப்பட்டதா...!! E - Evaluation How good is the study overall நான் வாசித்த அனுபவம் எனக்கே பிடித்திருக்கிறதா...!! R - Reaction What do I do with this article சரி வாசித்துவிட்டேன் இதை வைத்து என்ன செய்யப்போகிறேன்...!! இந்தளவு யோசித்தால் மட்டுமே வாசிப்பு வசப்படும் அல்லேல் அதுவெறும் டைம்பாஸ் அப்படி வசப்பட்ட ஒன்றை எழுதுகிறவர் தான் வெற்றி பெறுகிறார்கள் மற்றவர்களையும் வசப்படுத்த முடியும்...!! குறிப்பு : இதை வாசிக்கையில் இந்த READER/READING Acronymல் உள்ளது போல் சமீபத்திலோ அல்லது எப்பொழுதோ நீங்கள் வாசித்த லயித்த நல்லெழுத்து நற்புத்தகம் ஏதேனும் நினைவுக்கு வந்தால் தாராளமாய் சொல்லுங்கள்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - Sudarsan Sudarsan Sudarsan Sudarsan - ShareChat
🤩😍🤩 அடேய் சுதர்சன் என்னடா இது என்ன ஏது என்று தெரியாமல் எதை பற்றி பேசுறாங்கள் என்பதே தெரியாமல் இப்படி ஆர்வ கோளாறுகள் எல்லாம் கூட இருந்தால் என்னாடா சுதர்சன் செய்வது என்னமோ போடா சுதர்சன் 🤩😍🤩 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
00:36