#பத்தி #🙏ஆன்மீகம் ஸ்பெஷல்*
*திருமலை-பூவராஹர் கோயில்*
ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராஹ க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராஹரிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் ஆதி வராஹரை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்கபடுகிறது.
ஸ்ரீவராஹ அவதாரம் ஆதி வராஹம், பிரளய வராஹம், யஜ்ன வராஹம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இங்குள்ள வராஹர் “ஆதி வராஹர்’ எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது.
திருப்பதி திருமலைக்கு சொந்தக்காரரான *ஸ்ரீ பூ வராஹ பெருமாள் திருவடிகளே சரணம்* ... !!!
*கோவிந்தா ஹரி*
*கோவிந்தா*🙏 !
ஓம் நமோ வெங்கடேசாய 🙏