RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#🤣காமெடி ஸ்டேட்டஸ் #🤣 லொள்ளு #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
🤣காமெடி ஸ்டேட்டஸ் - ShareChat
00:58
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஐயப்ப சுவாமி தரிசனம்🙏🌼 #ஐயப்ப பக்தர்கள்
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
00:23
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #🙏 ஓம் நமசிவாய எனும் குபேரன் ======================= செல்வத்தின் அதிபதி குபேரன் யாருடைய பரம பக்தரென நீங்கள் நினைக்கிறீர்கள்? அவரின் இதயத்தில் எப்போதும் இருந்து அருள்வது சிவபெருமான். இந்த ஆழ்ந்த பக்தியே குபேரனுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட ஒரு தெய்வீக பட்டத்தை உருவாக்கியது —✨ “சிவசஹா” ✨ 🔱 “சிவசஹா” என்றால் என்ன? ============================= சிவபெருமானின் பிரியமான நண்பர், நெருங்கிய துணை, என்றும் சிவனோடு ஒன்றிப்படுபவர் என்று பொருள். குபேரனின் பரமான சிவபக்தி மட்டுமல்ல… ஜோதிட ரகசியமும் இதற்குப் பின்னால் அழகாக இணைந்து இருக்கிறது! 🌙 குபேரனின் ஜென்ம நட்சத்திரம் — பூரட்டாதி ======================================= குபேரன் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி. இந்த பூரட்டாதி நட்சத்திரம், 9 — 18 — 27 என எண்ணினால் வரும் பரம மித்ர தாரையில் 👉 சதய நட்சத்திரம் அடங்கும். பரம மித்ர தாரை என்பதே வளர்ச்சி, வைபவம், கீர்த்தி போன்றவற்றை தரும் சக்தி. 🔱 சதயம் = சிவம் ஜோதிடத்தில் சதய நட்சத்திரத்தின் தெய்வம் — சிவன். அதனால் பூரட்டாதியிடம் மித்ரனாக வரும் நட்சத்திரம், “சிவ நட்சத்திரம்” என்ற பெயரையே தருகிறது. இதன் அடிப்படையில்... 👉 பூரட்டாதியில் பிறந்த குபேரனுக்கு பரம மித்ர தாரையாய் வரும் “சதயம்” 👉 அதன் தெய்வம் “சிவம்” 👉 அதனால் உருவான பெயர் “சிவசஹா” — சிவனின் நண்பன். 🧭 ஈசான்யமும், குபேர திசையும் ============================ 🕉 ஈசான்யம் (வடகிழக்கு) – சிவபெருமானின் திசை 🪙 வடக்கு – குபேர திசை குபேரன் சிவனின் பரம நண்பனாக இருப்பதால், இரு தெய்வங்களின் திசைகளும் அருகருகே அமைந்திருக்கின்றன. சிந்தித்துப் பாருங்கள்.... 🧭 வடகிழக்கு & வடக்கு — செல்வமும் சிவமும் அருகருகே! 🌺 குபேரன் வழிபாட்டின் சாரம்q குபேரனை வணங்குவது என்பது வெறும் செல்வவளம் மட்டுமல்ல....அது சிவனின் அருளை பெற்றுதருவதற்குமாகும்.
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #😍குட்டி கதை📜 *தோல் நோய்களைக் குணமாக்கும் ♥️ #குருவாயூரப்பனின்_வாகைசார்த்து' ....* கேரள மாநிலம், குருவாயூரிலுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு #நிர்மால்யதரிசனம் காண பக்தர்கள் காத்துக் கிடப்பார்கள். ஆலயக் கதவு திறந்தவுடன் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, "#அம்மேநாராயணா!' #கிருஷ்ணா! குருவாயூரப்பா!' என்று அழைத்துக் கொண்டு திருச்சந்நிதி நோக்கி ஓடுவார்கள். அங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான். ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, உடனடியாக தைலாபிஷேகம் நடைபெறும். தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள். அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டுகின்றனர். அதன்பின் அலங்காரம் செய்யப்படுகிறது. திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி, சிறிய சிவப்புநிற கோவணம் (கௌபீனம்) தரித்து, #புல்லாங்குழலுடன்_பாலகோபாலனாக ஸ்ரீ குருவாயூரப்பன் பக்தர்களுக் குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறான். இந்த அபிஷேகத் தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த வாகை சார்த்து வழிபாடு பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், தாய்- தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த #காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டதாம். பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான். அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம். அவனும் அதிலிருந்து தேவையானபோதெல்லாம் உணவை வரவழைத் துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான். இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்குப் பேராசை ஏற்பட்டது. மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான். அதன்படி நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை. பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான். அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார். சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்த காஷுவுக்கு பகவான் காட்சி கொடுக்க, அவன் எழுந்து நின்று தன்னை அவரது திருவடிகளில் ஆட்கொள்ளுமாறு வேண்டினான். திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, ""#கலியுகத்தில்_நீ_ஒருவாகைமரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாகக் காட்சி தருவேன். ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி சிறுவன் காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார். இவ்வாறுதான் குருவாயூர் திருத்தலத்தில் குருவாயூரப்பனுக்கு " #வாகைசார்த்து' வழக்கம் ஏற்பட்டதாம்!! *ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்....!* .
🙏ஆன்மீகம் - குருவாயூர் மூலவர் கிருஷ்ணர் குருவாயூர் மூலவர் கிருஷ்ணர் - ShareChat
#பத்தி #ஆன்மீக தகவல் #😍குட்டி கதை📜 வினை பற்றி பீஷ்மர் கூறிய கதை .... அம்புப் படுக்கையில் வீற்றிருந்த பீஷ்மர் கர்ம வினை பற்றி தர்மருக்கு சொன்ன கதை இது!!! மகாபாரத யுத்தம் முடிந்தது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கண்டு, தர்மபுத்திரர் கதறினார். “எங்களுக்கெல்லாம் மேலானவரே! யுத்த களத்தில் உயிர் நீத்த துரியோதனன், நல்லவேளை இந்த நிலையில் உங்களைப் பார்க்க வில்லை. இதைக் காணும் நான்தான் பாவி. இதற்கு பதிலாக, போரில் நானும் கொல்லப்பட்டிருக்கலாம். மறு உலகிலேனும் பாவத்தில் இருந்து நாங்கள் விடுபடும் வழியை உபதேசியுங்கள்” என்று பீஷ்மரிடம் தன் மனக் குறையைக் கொட்டினார் தர்மபுத்திரர். “தர்மபுத்திரா! கர்மத்தின் வசம் உள்ள நீ, இவற்றுக்குக் காரணமாக உன்னை நினைத்துக் கொள்கிறாய். கர்மத்தின் வடிவம் புலன்களுக்கு எட்டாதது; மிகவும் நுட்பமானது. இதுகுறித்து பழங்கதை ஒன்றைச் சொல்கிறேன் கேள்!” என்று கதையை விவரிக்கத் துவங்கினார் பீஷ்மர். ‘கௌதமி என்பவளின் பிள்ளை, பாம்பு தீண்டி மாண்டான். அந்தப் பாம்பை அர்ஜுனகன் எனும் வேடன், நரம்புக் கயிற்றால் கட்டி, கௌதமியிடம் கொண்டு வந்து, ‘இதுவே உன் பிள்ளையைக் கொன்ற பாம்பு. இதை துண்டு துண்டாக வெட்டலாமா? தீயிலிட்டு எரிக்கலாமா?” என்று கேட்டான். வேடன் அர்ஜுனகனுக்கு பதில் அளித்தாள் கௌதமி: அறிவில்லாதவனே! பாம்பைக் கொல்லாதே. விட்டு விடு. பாம்பைக் கொன்றால் என் பிள்ளை உயிருடன் வந்து விடுவானா? அல்லது இது உயிருடன் இருப்பதில் உனக்கு நஷ்டமா?’ என்றாள். ஆனால் வேடன், தன் நிலையில் இருந்து மாறவே இல்லை. நீ இப்படிப் பேசுவாய் என்று எனக்குத் தெரியும். அமைதியை விரும்புபவர்கள் சந்தர்ப்பத்தை நழுவ விடுவர். ஆனால் காரியத்தை விரும்புபவர்கள் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, அதனால் ஏற்படும் துயரத்தில் இருந்தும் விடுபடுவர். எனவே, இப்போதே பாம்பைக் கொன்று விடுகிறேன்’ என்றான். வேடனின் விளக்கத்தை கௌதமி ஏற்க வில்லை. நல்லவர்களுக்கு தர்மமே உயிர். அறிவற்றவரே அனுதினமும் துயரப்படுவர். பாம்பின் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. பகைவனைக் கொல்வதை விட உயிரோடு விட்டு விடுவதே மகிழ்ச்சி’ என்றாள் அமைதியாக! வேடனும் சளைக்கவில்லை. தன் கருத்தில் உறுதியாகவே இருந்தான். இந்தப் பாம்பைக் கொன்றால் எனக்கு புண்ணியமே! பல தர்மங்கள் செய்து, காலக்கிரமத்தில் கிடைக்கும் புண்ணியத்தைவிட, தீய உயிரைக் கொன்றால் உடனே புண்ணியம். மேலும், இப்பாம்பைக் கொன்றால் பலரைக் காப்பாற்றலாம். இதை உயிரோடு விட்டால், பலரையும் கொன்று விடும், என்று தர்க்கம் செய்தான் வேடன். இருவரும் தங்களது கருத்தில் விடாப்பிடியாக இருந்தனர். அப்போது வேடனால் கட்டப்பட்டு, குற்றுயிராக இருந்த பாம்பு, திடீரென பேசியது. வேடனே! சிறுவனைத் தீண்டியதால் எனக்கு என்ன லாபம்? உணவு மற்றும் பகைமை காரணமாக இதைச் செய்யவில்லை. என்னை ஏவியது யமன். இந்த பாவம் யமனையே சேரும்” என்று நழுவப் பார்த்தது பாம்பு. தன் கைப்பிடியில் இருந்த பாம்பை மேலும் இறுக்கிய வேடன், “செய்தது நீ; பழியை யமன் மீது போடுகிறாயே! சொன்னது யமனாகவே இருந்தாலும், காரியம் செய்த நீயும் குற்றவாளியே! உன்னை விடக் கூடாது” என்று கத்தினான். அப்போது அங்கே யமன் வந்தார். “சர்ப்பமே! சகலமும் தெரிந்தது போல், என் மீது பழி போடுகிறாயே…! என்னை காலம் ஏவியது; நான் உன்னை ஏவினேன். சிறுவனின் மரணத்துக்கு காலமே காரணம்..! உலகில் உள்ள அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் காலத்துக்கே கட்டுப்பட்டவை. ஆக்கம் - அழிவு இரண்டுக்கும் காலமே காரணம். நான் குற்றவாளி எனில் நீயும் குற்றவாளியே!’ பதறிய பாம்பு, “காலத்தைக் குற்றம் சொல்கிறாய். காலத்தை ஆராய நமக்கென்ன அதிகாரம்? நம் மீதான பழியை விலக்க முயலுவோம்” என்றது. குறுக்கிட்ட வேடன், “சிறுவனின் மரணத்துக்கு நீங்களே காரணம். பாம்பைக் கொல்ல வேண்டும். யமனை இகழ வேண்டும் என்றான். “தவறு வேடனே! உலகின் அனைத்துச் செயல்களும் காலத்தால்தான் நடைபெறுகின்றன. காலத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் நாங்கள், அவ்வளவே!” என்றான் யமன். குழப்பம் அங்கே குடிகொண்டது. அப்போது அங்கு வந்தான் கால புருஷன். “சிறுவனின் மரணத்துக்கு காலமாகிய நான், யமன், பாம்பு என்று எவரும் -எதுவும் காரணம் இல்லை. இவன் தன் கர்மம் அதாவது செயல்களாலேயே இறந்தான். நாங்கள் கர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அவரவர் செய்யக்கூடிய கர்மங்களே எங்களை ஏவுகின்றன. நாங்கள் ஒருவரை ஒருவர் ஏவுகிறோம். இவன் இறந்ததற்கு இவன் செய்த கர்மங்களே காரணம்” என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் தெரிவித்தான் காலபுருஷன். கௌதமி நிம்மதிப் பெருமூச்சுடன், “வேடனே! புரிந்து கொண்டாயா? பாம்பை விட்டுவிடு!” என்றாள். வேடனும் கையில் இருந்து பாம்பை விடுவித்தான். இருவரும் துயரம் நீங்கியவர்களாக ஆனார்கள். கதையை விரிவாகச் சொல்லி முடித்தார் பீஷ்மர். “தர்மபுத்திரா! கர்மத்தைச் சார்ந்தே உலகம் உள்ளது என்பதைப் புரிந்து கொள். இந்த யுத்தத்தில் ஏராளமானோர் இறந்ததற்கு நீயோ, துரியோதனனோ காரணம் அல்ல! அவரவர் கர்மங்களுக்கு - அதாவது செயல்களுக்கு உரிய பலனை காலம் தந்துள்ளது” என்று தர்மபுத்திரருக்கு ஆறுதல் அளித்தார். . . . . . #மகாபாரதம் 🙏 நற்காலை வணக்கம் 🙏
பத்தி - நீ மற்றவர்களுக்கு செய்யும் வினையே உனக்கு கர்ம வினையாக வந்து நிற்கும் நீ மற்றவர்களுக்கு செய்யும் வினையே உனக்கு கர்ம வினையாக வந்து நிற்கும் - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #ஆன்மீக தகவல் செய்தி மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கோப்பணம்பாளையம் சக்கரப்பட்டி சித்தரின் 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா....* . நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் -பாண்டமங்கலம் செல்லும் சாலையில் சக்கரப்பட்டி சித்தர் (எ) சதானந்த சித்தரின் ஜீவ சமாதி சித்தர் பீடம் உள்ளது. இங்கு 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. குரு பூஜையை முன்னிட்டு சக்கரப்பட்டி சித்தருக்கு காலை 7 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. காலை 10 மணியளவில் கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வேள்வி தொடங்கியது. 12.30 மணிக்கு கைலாய வாத்தியம், சங்கு நாதத்துடன் பூர்ணாஹுதி சமர்ப்பித்து வேள்வி பூஜை நிறைவு செய்யப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு 251 சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை சக்கரப்பட்டி சித்தர் அன்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #சனி #சனி &சனி பகவானின் லீலை*
🙏ஆன்மீகம் - ShareChat
01:07
#👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - யாரையும் கேவலமாக நினைக்காதே ! காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் இந்த தான் உலகத்தையே உலுக்கி பார்த்தவர்கள் யாரையும் கேவலமாக நினைக்காதே ! காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் இந்த தான் உலகத்தையே உலுக்கி பார்த்தவர்கள் - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்தி #தெரிந்து கொள்வோம் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - ShareChat
00:26