
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#பத்தி #பத்திஸ்டேட்ஸ் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 ஒன்று காட்டில் அடிபட்டு இருந்தது கண்டு,* ஆசிரமத்தில் கொண்டு வந்து, வைத்தியம் பார்த்த பின்பு காட்டில் விடப்பட்டது. ஆனால் மான், ஆசிரமத்திற்கு திரும்பி வந்து பக்தியுடன் ஆடி பாடுவதைப் பாருங்கள்
#சரணம் ஐய்ய#சாமி #சாமிய சரணம் ஐய்ய கோயிலை பற்றி தெரிந்து கொள்வோம்*
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் பூஜித்த ஸ்ரீசக்ரம்:சேலம் ஊத்துமலை ;* 🌹
ஸ்தல மலை எனும் ஊத்துமலையில் சித்தர் அகத்தியர் பெருமான் மற்றும் அவரின் மனைவி லோபமுத்திரா , போகர், போகரின் சீடர் புலிப்பாணி, ரேணுகர், கபிலர் என சித்தர்களின் தவம் செய்த இடமாகும்.
ஸ்ரீவித்யா- ஸ்ரீ சக்கரம் உபாசனை பெற்ற பின்பு தம் கரங்களால் ஸ்ரீசக்கரம் அமைத்து பூசித்த அருமையான ஆலயம்..
ஒரே பாறை மீது புடைப்புச் சிற்பங்களாக மிக அழகாக செதுக்கப்பட்டுள்ள ஸ்ரீசக்ரம், சிவலிங்கம், நந்தி, ஆசிரமம், அகத்தியர், ரிசி பத்தினி, மற்றும் பல வகையான இயற்கைக் காட்சிகள். இடம் ஊத்துமலை, சேலம் மாவட்டம்.
கபிலர் தியான குகை: அகத்தியர், கபிலர் உள்ளிட்ட பல சித்தர்கள் தியானம் செய்த, பாறை நீர் ஊற்றுடன் கூடிய அமைதியான தியான குகை, கபிலர் தியான குகை. இடம் ஊத்துமலை, சேலம்..
ஊத்துமலை அகத்தியர் தமிழிற்கு இலக்கணம் எழுதிய இடமாக நம்பப்படுகிறது...
சேலத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் ஊத்துமலை உள்ளது..
விநாயகா மிசன் 1008 லிங்கம் - லிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் ஊத்துமலை உள்ளது..
அதே போல ஊத்துமலையிலிருந்து சாந்தானந்த சாமிகளின் -கந்தாசிரமம் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..
தியான குகையில் அமாவாசை - பவுர்ணமி திதிகளில் அருமையான அனுபவங்களை பெறலாம்.. வந்து பாருங்கள்..
ஊத்துமலை சுமார் 2000 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.
அகஸ்தியர் இங்கு வந்து மலையை குடைந்து ஸ்ரீ சக்ரம் உருவாக்கியிருக்கிறார். அதோடு அவருடைய பத்னி லோபாமுத்ரா தேவியுடன் தான் இருப்பது போலவும் தண்ட கமண்டலுடன் வடிவமைத்திருக்கிறார்.
அகஸ்தியர் கபிலமுனி சுகபரம்ம ரிஷியும் வந்திருப்பதாக கல்வெட்டுகளில் உள்ளது. மேலும் சுகர் பிரம்ம ரிஷி இங்கு வந்த பிறகு சேலம் சுகவனேஸ்வரரிடம் வந்நிருந்து தன் சாபத்தை போக்கிக்கொண்டதாக சேலம் சுகவனேஸ்வரர் புராணம் கூறுகிறது.
இவர்கள் தவிர சப்த ரிஷிகள் மற்றும் கரடி சித்தர் போகர் கன்வர் போன்ற மஹரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்து உள்ளார்கள் என்று புராண கதையாக இங்கு சொல்கிறார்கள் அதற்கு சான்றாக சப்த ஏழு வித ஊற்றுகளும் இந்த ஊத்துமலையில் உள்ளது அதனால்தான் இந்த மலைக்கு ஊத்து-மலை ஊத்துமலை என்று பெயர் வழங்கலாயிற்று.
இந்த ஏழு ஊற்றுகளிலும் உள்ள தண்ணீர் நிறைந்த மருத்துவ குணங்கள் கொண்ட தண்ணீர் ஆகும். இந்த ஸ்ரீ சக்ர கோவிலுக்கு மேல் சென்றார் மலையின் உச்சி வரும் அங்கு பால சுப்ரமணியர் அருள்பாலிக்கிறார்.
மயிலை அரவணைத்து கொண்டு காக்ஷி தரும் முருகப்பெருமான். தற்போது இந்த ஊத்துமவையில் மிகப்பெரிய கால பைரவர் சன்னதியும் வைத்திருக்கிறார்கள் இந்த மூன்று கோவில்களையும் சிவாச்சாரியார் ஒருவர் அவர் சிஸ்யர்களை கொண்டு கவனித்து வருகிறார்.
இந்த ஊத்துமலை சுற்றி ஸ்கந்த கிரி, நாமகிரி, குமரகிரி பத்மகிரி போன்ற மலைகள் உள்ளன.🌹
#👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்









