🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱
370 Posts • 632K views
#🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 பார்க்க முடியாவிட்டாலும் அவர்கள் நூல்களை படியுங்கள்...... சித்தர்கள் வழியில் செல்ல வேண்டும். அவர்களின் வழிகாட்டல் வேண்டும் என்று தீவிரமாக ஆசைப்படுபவர்கள் அவர்களின் நூற்களைத் தொடந்து படிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் வழிகாட்டுதலைப் பெறமுடியும். "சித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன் சித்தர்மொழி நூலதனைத் தொட்டபோதே சித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார் சித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார் சிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார் சித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர்" - அருளிய சித்தர்:காரைச் சித்தர் பதவுரை: சித்தர்கள் தான் கண்ட உண்மையினை பிறருக்கு உரையாமல் மறைத்து வைத்தார் என்று கூறி எண்ண வேண்டாம்; சித்தர்களில் நூல்களை வாசிக்கத் தொடங்கிய போதே அதன் பொருளை விளக்க அனைத்து சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து வந்து அதன் பொருளை அருளுவார்கள்; சித்தர்களின் பால் வைத்த எண்ணங்களுக்காக அவர்கள் நாட்டம் கொண்டு அருளுவார்கள்; சித்தர் வழியில் அதன் பொருளைக் கண்டு நடக்கையில் அதன் உட்பொருளில் இருந்து மாறுபட்டு நடந்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வார்கள்; சித்தம் நிறைவு உள்ளவர்களுக்கே சித்திகள் எனப்படும் அட்டமா சித்திகள் தோன்றும்; அவ்வாறு சித்தம் நிலைபெறாமல் சித்தி கண்டவர்கள் என்று கூறி அவர்களால் செய்யப்படும் வித்தைகள் எல்லாம் சிரிப்பினைத் தான் தோற்றுவிக்கும். -
15 likes
7 shares
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் பெரியகோவில் நந்திக்கு சிறப்பு வழிபாடு*🍀 தஞ்சை பெரியகோவிலில் மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 1டன் அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி. ஸ்ரீராமஜயம்குழு உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலை உள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையன்று மாலை, பால், தயிர் மற்றும் மஞ்சள் போன்ற பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். தொடர்ந்து மாட்டு பொங்கலன்று காலை அதிகாலை லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்,மற்றும் தீபாராதனை நடைபெறும். அதை தொடர்ந்து உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெறும். மேலும், நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெறும். பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.🦋 #🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱 #🙏நந்தி பகவான் 🙏
76 likes
12 shares