சாதனை
354 Posts • 1M views
*ஏழாம் அறிவு படத்தில் டாங்லி* என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தவர் *ஜானி ட்ரை நுயன் (Johnny Trí Nguyễn).* ‘நோக்கு’ வர்மம் என்ற கலையின் மூலம் பலரின் மனதையும் கட்டுப்படுத்தக்கூடியவராக நடித்திருந்தார். இரக்கமற்ற வில்லனாக அவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. டாங்லி திரையில் வரும்போது பார்வையாளர்களுக்கு ‘திகில்’ மனநிலை தான். அந்த அளவுக்கு தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நடிப்பாலும், வில்லத்தனத்தாலும் நியாயம் சேர்ந்திருந்தார் ஜானி. முன்னதாக 2002-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘we were soldiers’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ‘ஸ்பைடர் மேன் 2’ படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்து வந்தவர், கடந்த 2007-ம் ஆண்டு ராம் சரண் நடிப்பில் வெளியான ‘சிருதா’ படத்தில் நடித்தார். ‘7 ஆம் அறிவு’ படத்தில் நடித்தார்.அடுத்து தெலுங்கில் ‘பிஸ்னஸ்மேன்’ படத்தில் நடித்தார். தமிழில் ‘இரும்பு குதிரை’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் கடைசியாக ‘டபுள் ஐ ஸ்மார்ட்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஜானியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 7ஆம் அறிவு படத்தில் நடித்தவரா இவர்... என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது தோற்றம் மாறியிருக்கிறது. #நடிகர் #சாதனை #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👶குழந்தைகள் உலகம் #சிரிப்போ சிரிப்பு 🤣
9 likes
7 shares