ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
508 views • 5 hours ago
சம்பவத்தன்று இரவு கணவருக்கு ஆசையாகப் பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார். அதில் 20 தூக்க மாத்திரைகளை அரைத்துக் கலந்துள்ளார். அதைச் சாப்பிட்ட நாகராஜு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் இரவு 11:30 மணியளவில் கள்ளக்காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கோபி நாகராஜுவின் மார்பில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொள்ள, லட்சுமி மாதுரி தலையணையால் முகத்தை அழுத்தி கணவரைக் கொலை செய்துள்ளார்.
கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, இருவரும் பயப்படவோ அல்லது அங்கிருந்து தப்பிக்கவோ முயலவில்லை. மாறாக அதிகாலை வரை லட்சுமி மாதுரி தனது கள்ளக்காதலனுடன் அமர்ந்து செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார். அதன் பின்னரே கோபி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதிகாலையில் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி லட்சுமி மாதுரி அழுது நாடகமாடியுள்ளார். இறுதிச் சடங்கின் போது நாகராஜுவின் காதில் இரத்தம் வழிந்ததும், மார்பு எலும்புகள் உடைந்திருப்பதைப் பார்த்தும் அவரது தந்தைக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் இது குறித்து புகாரளிக்க, பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறி இறந்தது உறுதியானது. லட்சுமி மாதுரியின் செல்போனை ஆய்வு செய்த போது, அவர் கோபியுடன் பேசியதும், கொலைக்குப்பின் ஆபாசப் படங்களைப் பார்த்ததும் ஆதாரங்களுடன் சிக்கியது #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗
15 likes
11 shares