கோவில்பட்டி அருகே அரசு பேருந்து -கண்டெய்னர் லாரி மோதல் ஒருவர் காயம்*
ில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி இன்று மாலை வந்து கொண்டிருக்கிறது. பேருந்தை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நடுவபட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த திடீரென அரசு பேருந்து நிலைகுலைந்து ஒரு சுற்று சுற்றி, ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது மட்டுமின்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மலையடிப்பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் காயமடைந்தார். அரசு பேருந்து பின்பகுதி சேதமடைந்து. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர் சுந்தரலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #thoothukkudi #kovilpatti #viruthunagar #sathur #naduvapatti #rajapalayam #malaiyadipatti #buslorryaccident #accident #accidentnews
https://www.instagram.com/reel/DOvmQ2DE1G6/?igsh=ZjlrdHh5djlibjJy
#வைரல் #📺வைரல் தகவல்🤩 #விபத்து #கோவில்பட்டி #தூத்துக்குடி #தூத்துக்குடி