**அம்மையநாயக்கனூர் அருகே லாரி - மினி வேன் மோதி கோரவிபத்து, 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்*
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே திண்டுக்கல் - மதுரை தேசிய 4 வழி சாலையில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து வலது புற எதிர்சாலைக்கு சென்றபோது சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் மினி வேன் மினி லாரி மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #dindukkal #ammainayakkanur#madurai #selam #eicheraccident #vanaccident #accident #worldnews
https://www.instagram.com/reel/DOxp-_kkWlu/?igsh=Nm51MGRhZHhwazl0
#வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #திண்டுக்கல் #திண்டுக்கல்