சமீப காலமாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பொய் செய்தியை அதிகம் பரப்புபவர்களாக திமுகவினர் அறியப்படுகின்றனர் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
அந்த வகையில் திமுக அதிதீவிர தொண்டராக அறியப்படும் @madraspaiyan_ இந்த நபர் தொடர்ந்து பொய் செய்தியை பரப்பி சமூகப் பதட்டத்தை உண்டாக்குவதையே முழு நேர வேலையாக வைத்துள்ளார். அப்படித்தான் தற்போது நடிகர் சூரி கூறியதாக, "பேரழிவோ பெரும் துயரமோ ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும் ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விட்டது. அதன் தலைவரே பனையூரில் பதுங்கிக் கொண்டார்" என்று பொய்யான செய்தியை பரப்பி உள்ளார் . இது பொய்யான செய்தி என்பதை உறுதிப்படுத்தி இருக்கும் நடிகர் சூரி குறிப்பிட்ட @madraspaiyan_
என்ற நபர் வெளியிட்ட அந்த செய்திக்கு கீழேயே அதை மறுத்து,"தம்பி தவறான தகவலை பரப்புவது எப்போதும் சமூகத்திற்கு தீங்கையை தரும். ஒவ்வொரு செயலிலும் நிதானமும் முதிர்ச்சியும் காட்டுவோம். இந்த சமூகம் நல்ல மாற்றங்களை பெற தகுதியானது. அதனால் அன்பையும் நன்மையையும் பரப்புவதில் உங்கள் சிறந்ததை செய்யுங்கள். எனக்கு பல வேலைகள் உள்ளன. உங்களுக்கும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. ஆகையால் இப்போது நம்முடைய பணியில் முழு கவனம் செலுத்துவோம்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழக இளைஞர்களிடம் மோதலை தூண்டும் விதமாக பதிவிட்டு வரும் குறிப்பிட்ட இந்த @madraspaiyan_ நபர் இவ்வாறு செயல்படுவது மிகப்பெரிய ஆபத்தாக இருப்பதாக மக்கள் உணர்கின்றனர்.
ஒரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் @mkstalin அவர்கள் பொய் செய்தி பரப்புவது தடுக்கப்பட வேண்டும் என்றும், வதந்தியை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிவரும் சூழலில் சம்பந்தப்பட்ட அந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக அறியப்படும் பலர் தினம் தினம் பொய் செய்தியை பரப்பி வருவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களிடம் ஒருவித எதிர்ப்பு மனப்பான்மையையும் உருவாக்குகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் சமூகத்திற்கு நல்லதல்ல என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இவர்களின் இந்த செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.
##dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails
#dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் ##தவெகவுக்கு_பயந்த_திமுக ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு