மரணம்
147 Posts • 3M views
☠️💀☠️💀☠️💀☠️💀☠️ மரணம் ☠️💀☠️💀☠️💀☠️💀☠️ மரணம் பேசுகிறேன்... என்னைக் கண்டு பயப்படாதீர்கள் ! நான் தான் உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன்... விதி முடிந்தால் நான் வருவது உண்மைதான் ஆனால் உங்கள் மதி தான் அதற்குள்ளேயே ! உங்கள் வீட்டுக்கு என்னை அழைத்து விடுகிறது... நான் வந்ததற்காக ஒன்று கூடி ஒப்பாரி வைக்கின்றீர்கள் நானாக வருவதில்லை நீங்கள் தான் அழைக்கின்றீர்கள்... தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்னை விருந்து வைத்து அழைப்பது போல் மருந்து வைத்து அழைக்கின்றனர்... கையிருந்தும் கஷ்டங்களோடு போராடாதவர்கள் தற்கொலை என்ற பெயரில் கயிறு போட்டு என்னை இழுக்கின்றனர்.... வாழ்க்கையில் விவேகத்தை காட்டாமல் வண்டியில் வேகத்தைக் காட்டி விபத்துக்குள்ளாகி 108-ல் வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுக்கின்றனர்... வாழ்வதற்காகச் சாப்பிடாமல் சுவைக்காகவே சாப்பிட்டு சவம் ஆனவர்கள் சுடுகாட்டிற்கு தூக்கிச் செல்ல பாடையோடு வரச் சொல்கின்றனர் நான் என்ன செய்வது....? என்னால் இறந்தவர் மட்டுமில்ல வாழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள்... நான் உங்கள் ஆன்மா உடைமாற்றும் வரை அவ்வளவுதான் ... இந்த உலகம் உங்களுக்கு நிரந்தரம் இல்லை என்று நான் கத்தி கத்தி சொல்லியும் காதில் வாங்காமல் பணத்திற்காக கொ**ஐ செய்வதும் கொள்ளையடிப்பதும் ஊழல் செய்வதும் ஏமாற்றுவதும் திருடுவதும் பாவங்கள் செய்வதும் அதிகரித்துக் கொண்டே போகிறது.... நான் இல்லை என்றால் என்னாகும் சற்று யோசித்துப் பாருங்கள் ? நான் இல்லாமல் போயிருந்தால் முதுமையை எப்படி கடந்திருப்பாய் ? முக்தியை எப்படி பெற்றிருப்பாய் ? சிலர் செய்த தவறுக்கு நான் தண்டனையாக மட்டுமல்ல திருந்துவதற்கு வாய்ப்பாகவும் இருந்திருக்கிறேன்... பிறப்பு இருக்கும் வரை நான் இருப்பேன் ஒருவேளை நான் இல்லாமல் போனால் பிறப்பும் இல்லாமல் போகலாம்....... என்னை கண்டு பயப்படாதே நான் தான் உன்னை வாழ வைக்கிறேன்... ☠️💀☠️💀☠️💀☠️💀☠️ ~ #மரணம் #மரண வலி காதல் #maranam #maranam 🌹🌹🌹🌹🌹🌹 🌹
12 likes
13 shares