😱யூடுப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்📱
32 Posts • 1M views
Senthilvel Achari
745 views 2 months ago
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சுப்பிரமணிய சர்மா என்பவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் சுப்பிரமணிய சர்மாவின் தாயார் கனக மகாலட்சுமி (66) தன் மகனோடு வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை சமையலறையில் மின்கசிவு ஏற்பட்டதால் தீயில் மாமியார் கனக மகாலட்சுமி சிக்கிக் கொண்டதாக லலிதா கதறி உள்ளார். உடனே தகவல் அறிந்து பொதுமக்கள் தீயை அணைத்து மகாலட்சுமியை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் லலிதா கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதில், மாமியாருடன் இருப்பதை நான் விரும்பவில்லை. Youtubeல் முதியோரை கொலை செய்வது எப்படி என்று ஆய்வு செய்தேன். அதன்படி மாமியாரிடம் அன்பாக பழகத் தொடங்கினேன். சம்பவத்தன்று திருடன் போலீஸ் ஆட்டம் விளையாடலாம் என்று மாமியாரை அழைத்தேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அவருடைய கண்களை ஒரு துணியால் கட்டிவிட்டேன். கைகளையும் கட்டினேன். இதற்கு முன்பாக பெட்ரோலை தயாராக வைத்திருந்தேன். சமையலறைக்கு அவர் வந்ததும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டேன். அவர் அழகிய போது கீழே தள்ளினேன். அவருடைய அலறல் வெளியே கேட்காமல் இருக்க டிவியை அதிக சத்தமாக வைத்து சீரியல் பார்த்தேன். பிறகு ஸ்விட்ச் போர்டு மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினேன். இதற்குள் மாமியார் தீயில் கருகி இறந்துவிட்டார். ஆனால் வீட்டில் இருந்து புகை வந்ததால் அனைவரும் வந்துவிட்டனர். அவர்களை நம்ப வைப்பதற்காக மின்கசிவு என்று நாடகம் ஆடினேன் என்று மருமகள் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருமகள் லலிதாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #😱யூடுப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்📱 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗
5 likes
14 shares
சுப்பிரமணிய சர்மாவின் தாயார் கனக மகாலட்சுமி (66) தன் மகனோடு வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை சமையலறையில் மின்கசிவு ஏற்பட்டதால் தீயில் மாமியார் கனக மகாலட்சுமி சிக்கிக் கொண்டதாக லலிதா கதறி உள்ளார். உடனே தகவல் அறிந்து பொதுமக்கள் தீயை அணைத்து மகாலட்சுமியை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் லலிதா கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதில், மாமியாருடன் இருப்பதை நான் விரும்பவில்லை. Youtubeல் முதியோரை கொலை செய்வது எப்படி என்று ஆய்வு செய்தேன். அதன்படி மாமியாரிடம் அன்பாக பழகத் தொடங்கினேன். சம்பவத்தன்று திருடன் போலீஸ் ஆட்டம் விளையாடலாம் என்று மாமியாரை அழைத்தேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அவருடைய கண்களை ஒரு துணியால் கட்டிவிட்டேன். கைகளையும் கட்டினேன். இதற்கு முன்பாக பெட்ரோலை தயாராக வைத்திருந்தேன். சமையலறைக்கு அவர் வந்ததும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டேன். அவர் அழகிய போது கீழே தள்ளினேன். அவருடைய அலறல் வெளியே கேட்காமல் இருக்க டிவியை அதிக சத்தமாக வைத்து சீரியல் பார்த்தேன். பிறகு ஸ்விட்ச் போர்டு மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினேன். இதற்குள் மாமியார் தீயில் கருகி இறந்துவிட்டார். ஆனால் வீட்டில் இருந்து புகை வந்ததால் அனைவரும் வந்துவிட்டனர். அவர்களை நம்ப வைப்பதற்காக மின்கசிவு என்று நாடகம் ஆடினேன் என்று மருமகள் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருமகள் லலிதாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #😱யூடுப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்📱 #🔴இன்றைய முக்கிய செய்திகள்
13 likes
10 shares