நாளை விநாயகர் சதுர்த்தி.
1 Post • 296 views
VENKATESWARAN. A.
650 views
நாளை விநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார் சிலை வாங்க... பூஜை செய்ய நல்ல நேரம். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொதுவாக விநாயகர் சிலை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபட வேண்டும். ஆவணி மாத வளர்பிறை வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாளை (27-08-2025) விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் உள்ளது. இன்று 26-08-2025 பகல் 02:22 மணி துவங்கி, நாளை 27-08-2025 மாலை 03:52 வரை சதுர்த்தி திதி உள்ளது. வளர்பிறை சதுர்த்தி அன்று காலை சூரிய உதய நேரம் சதுர்த்தி திதி இருக்க வேண்டும் என்பதால் நாளை (27-08-2025) விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வாங்கி வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு எந்த நாள், எந்த நேரம் விநாயகர் சிலை வீட்டில் வாங்கி வர வேண்டும், எந்த நேரம் வழிபட வேண்டும், எப்போது விநாயகர் சிலை கரைக்க வேண்டும் ? என்பதை பார்ப்போம். சிலை வாங்குபவர் இன்று மாலை 04:50 மணி முதல் 05:50 மணி வரை அல்லது மாலை 06:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை நேரம் விநாயகர் சிலை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலை வாங்கியவர், நாளை காலை 6:00 மணி முதல் 07:20 மணி வரை நேரம் வழிபடலாம். நாளை புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி நாள் சிலை வாங்கலாம். ஆனால், காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை எமகண்டம் இருப்பதால் அந்த நேரம் தவிர்த்து, அதற்கு முந்தைய நேரம் அல்லது 9 மணி மேல் விநாயகர் சிலை வாங்குவதற்கான நல்ல நேரம் கருதப்படுகிறது. ஒருவேளை இன்று விநாயகர் சிலை வாங்க முடியவில்லை. நாளை தான் விநாயகர் சிலை வாங்க போகிறோம் என்பவர்கள் நாளை காலை 6:00 மணி முதல் 7:20 மணி வரை, காலை 09:10 மணி முதல் 10:20 மணி வரை நேரம் விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து, அந்த நேரம் வழிபடலாம். விநாயகர் சுண்டல், கொழுக்கட்டை, சாம்பார், சாதம், பாயசம், அப்பம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர் நாளை பகல் 01:35 மணி முதல் 2:00 மணி வரை நேரம் படையல் போட்டு வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு மாலை செய்யும் வழக்கம் உள்ளவர் மாலை 06:10 மணி மேல் வழிபடலாம். பொதுவாக விநாயகர் சிலை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபட வேண்டும். இன்று (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாம் நாள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று விநாயகர் எடுத்துச் சென்று கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி நாள் (ஆகஸ்ட் 27 ஆம் தேதி) விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாவது நாள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று கரைக்கக் கூடாது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் விநாயகர் எடுத்துச் சென்று கரைக்கக் கூடாது. அதனால் ஐந்தாவது நாள் அதாவது, ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் சென்று கரைக்கலாம். விநாயகர் சிலை கரைக்க எடுத்துச் செல்லும் போது ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரம் பார்த்து எடுத்துச் செல்வது நல்லது. வீட்டில் விநாயகர் சிலை எத்தனை நாட்கள் வைத்து இருந்தால் தினமும் விநாயகர் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், முடிந்தால் ஏதாவது சுண்டல் அல்லது இனிப்பு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். வீட்டில் அருகில் பொது இடத்தில் விநாயகர் சிலை அமைத்து இருந்தால், அந்த சிலை வீட்டில் இருக்கும் சிலை கொண்டு போய் கரைப்பதற்காக வைத்து விடலாம். அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள நீர் நிலைக எடுத்துச் சென்று கரைக்கலாம். வீட்டில் அருகில் நீர் நிலை எதுவும் இல்லையென்றால், வீட்டில் ஒரு வாளி தண்ணீர் வைத்து, அதற்குள் விநாயகர் சிலை வைத்து கரைக்கலாம். அந்த தண்ணீர் நாம் நடந்து செல்லும் பாதை ஊற்றக் கூடாது. கால் படாத இடத்தில் அல்லது பூந்தொட்டி ஊற்றுவது நல்லது. #நாளை விநாயகர் சதுர்த்தி.
6 likes
11 shares