Dr.M.Chandran.Ph.D.,
7418888778,
9894254262.
நாட்டு மருந்து.
25.05.2025.
====================
வெண்புள்ளி
====================
இது ஒரு தன்னுடல் தாக்க நோய் ஆகும். தோலுக்கு நிறத்தை கொடுக்கக் கூடியது மெலனின் என்னும் நிறமி. இது சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இந்த சுரப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்து போவதால் அந்த இடத்தில் வெண்புள்ளி உருவாகும்.
லிப்- டிப் விட்டிலிகோ என்னும் உதடு, கை, கால் விரல்களில் உண்டாகும், சிலருக்கு நரம்பின் பாதையில் மட்டும் வெண்புள்ளி உண்டாகும். இது செக்மெண்டெல் விட்டிலிகோ என்று அழைக்கப்படுகிறது. சிலருக்கு உதடு, பிறப்புறுப்பு போன்ற இடங்களில் மட்டும் பாதிப்பு இருக்கும். பெண்களாக இருந்தால் மார்பகங்களில் வெண்புள்ளிகள் வரலாம். இது மியூகோசல் என்று அழைக்கபடுகிறது.
இன்னும் சிலருக்கு மெலனோசைட்கள் பாதிக்கப்பட்டு முழுமையாக வெள்ளையாகி விடும். இதற்கு யுனிவர்சல் விட்டிலிகோ என்று பெயர்.
வெண்புள்ளி ஒரு தொற்றுநோயல்ல. ஆனால் குடும்பத்தில் வெண்புள்ளி பாதிப்பு இருந்தால் மரபணு காரணமாக பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
விட்டமின் சி அதிகளவு சேர்க்கப்பட்டாலும் நிறமிகள் பாதிக்கப்பட்டு வெண்புள்ளிகள் ஏற்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன)
தீக்காயங்கள் விபத்துக் காயங்கள், மிகச் சூடான நீர் மற்றும் திரவங்களால் தோலும் தோலிலுள்ள சிறப்புச் செல்களான Chromatophores களும் (இவை மெலனினை உள்ளடக்கியவை) அழிந்து விடுகின்றன. சத்துக்குறைவுகளால் குறிப்பாக வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைவால் வெண்புள்ளி வரக்கூடும். வைடமின் சி சத்து அதிகம் சேர்ந்தாலும் வெண்புள்ளி விழக்கூடும்.
இவை தவிர தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் பி 12 குறைபாடு போன்ற நிலைகளில் உண்டாகலாம். வெண்புள்ளிக்கு தொடக்கத்தில் சிகிச்சை எடுத்தால் மட்டுமே இந்த பாதிப்பை கட்டுப்படுத்தவோ குணப்படுத்தவோ முடியும்.
மதுப்பழக்கம், ப்ளூபெர்ரி, சிட்ரஸ் உணவுகள், காஃபி, தயிர், மீன், பழச்சாறு, நெல்லிக்காய், திராட்சை, ஊறுகாய், மாதுளை, பேரிக்காய், சிவப்பு இறைச்சிகள், தக்காளி, கோதுமை போன்றவை வெண்புள்ளி நிலைமையை அதிகரிக்கச் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
சிறு சிறு புள்ளிகளாய் எளிதில் தோன்றுகின்றன.
ஒவ்வொரு புள்ளியிலும் உருவம் விரிவடைந்து திட்டு (Patch) வளர்கிறது
புள்ளிகளும், திட்டுகளும் வளர்க்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்து அகலமான திட்டுகளாக (Patches) விரிவடைகின்றன.
ஆரம்பத்தில் சற்று பழுப்பான நிறத்திலும் (Pale) பின்னர் வெண்மையாகவும் நாளடைவில் மிக வெண்மையாகவும் மாறி விடுகின்றன (வெயிலில் பார்த்தால் பால் போன்ற வெண்மை நிறத்தில் (milky white) இவை பளிச்சிடும்.
சில சந்தர்ப்பங்களில் இத்திட்டுக்களீல் அரிப்பு (Pruritis) இருக்கலாம்.
மெலனின் நிறமிகள் சிதிலமடையாமல் வெண் தோல் திட்டுகள் மட்டுமின்றி முடிவெளுத்து போவதும் உண்டு. இதனால் இளவயதிலேயே மீசை, புருவம், தலைமுடி வெண்மை நிறமாகிவிடும் (Prematured greying).
உடல் இயக்க நோய்களான தைராய்டு கோளாறுகள், உடல் கோளாறுகள் வெண்புள்ளிகளை உருவாக்கி உள்ளது. நீரிழிவு நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கும் வெண்புள்ளிகள் தோன்றியதுண்டு. பரம்பரை தன்மையும் இதற்கு ஒரு காரணம். இப்படி இதற்கு பல காரணங்கள் கண்டறியப் பட்டுள்ளது. அடிப்படையான காரணமாக கருதப்படுவது நோய் எதிர்ப்பு திறன் குறைவதால் தான் ஏற்படுகிறது. ஒவ்வொரு பாதிக்கப்பட்ட வெண்புள்ளி நோயாளிக்கும் நச்சுதன்மை ஏற்பட்டு ஒவ்வாமை தன்மையாக மாறி, நிறமி அணுக்களை பாதிக்கிறது. அதுவும் அணுசக்தியின் ஆற்றல் போல உடலில் புகுந்து தன் வேலைகளை காண்பிக்க ஆரம்பித்து வருகிறது. எனவே தான் சரியான சிகிச்சை பெறாமல் உடம்பில் பரவிக்கொண்டே இருக்கும். குணம் பெறுவது கடினமாக உள்ளது.
இதற்கு கற்றாழை மடலை இரண்டாக வெட்டி வெள்ளை நிற ஜல்லை எடுத்து அந்த வெண் புள்ளிகள் மேல் தொடர்ந்து தேய்த்து மசாஜ் செய்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஊற விட்டு பிறகு குளிப்பதன் மூலம் வெண்புள்ளிகள் மறையும்.
வேப்பிலையோடு மஞ்சளை சேர்த்து அரைத்து கட்டியாக பசும் தயிரில் குழைத்து அந்தக் கலவையை வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் நீங்கள் போட்டு வந்தால் கட்டாயம் விரைவில் வெண் புள்ளிகள் மறையும்.
மேலும் அனைத்து விதமான சருமப் பிரச்சனையை தீர்க்கக்கூடிய சக்தி வேப்பிலைக்கு உள்ளதால் அந்த வேப்பிலையை தனியாக பறித்து அரைத்து நீங்கள் வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு பிறகு குளிக்கலாம்.
துளசிக்கும் நுண்கிருமிகளை எதிர்க்கக்கூடிய ஆற்றல் இருப்பதால் துளசியை விழுதாக அரைத்து அந்த விழுதினை நீங்கள் உள்ளுக்கு தேனில் குழைத்து சாப்பிடவும் செய்யலாம். அத்தோடு வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு பிறகு குளிக்கலாம்.
சருமத்திற்கு மிக நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடிய குப்பைமேனி இலைச்சாறுடன் சிட்டிகை அளவு சுண்ணாம்பு, கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து அந்த கலவையை வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நிச்சயமாக அந்த வெண் புள்ளிகள் மறைவதோடு திட்டுக்களாக இருந்தால் அது மங்கி உடலின் நிறத்திற்கு ஏற்ப மாற்றத்தை கொடுக்கும்.
இதுபோலவே மருதாணி இலையையும், ஆவாரம் பூவையும் சேர்த்து சாறு பிழிந்து எடுத்து வெண்புள்ளி திட்டுகள் மீது தடவி வந்தால் சரும ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி வெண்புள்ளிகளை மறைக்க உதவி செய்யும்.
இது மட்டுமல்ல பச்சை மஞ்சளை அரைத்து வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் ஆரம்ப நிலைகளில் தேய்த்து விட மிக எளிதில் குணமாகும்.
====================
Dr.M.Chandran.Ph.D.,
7418888778,
9894254262.
நாட்டு மருந்து.
25.05.2025.
====================
#👩🏼⚕️ மகளிர் மருத்துவம் #👩🏼⚕️ மகளிர் மருத்துவம் #🔔மூலிகை மணி #மருத்துவம் ##ஆன்மீக தகவல்கள் 🕉️ #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #