நம் முன்னோர் செய்த மகத்துவங்கள் மற்றும் அண்ட இரகசியங்கள்...!
மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தன் திருவண்டப்பகுதியில் வானத்தில் பலகோடி அண்டங்கள் உள்ளதாக குறிப்பிடுகின்றார்.
அண்டப்பகுதியின் உண்டைபிறக்கம்!
அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன!
இன்றைக்கு சூரியனுக்கு விண்களம் அனுப்பத் துடிக்கும் NASA, ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சூரியனுக்கு சென்று ஆய்வு நடத்தியது மட்டுமல்லாமல் அண்டத்தையே ஆய்வு செய்த நம் முன்னோர்கள்! DNAவையும் இதனோடு ஒப்பிடுகிறார்கள் (புறநானூரும், திருமந்திரமும்):
நான் இந்த செய்யுளை ஏற்கனவே பதிந்திருந்த போதிலும். மக்களின் புரிதலுக்காக இரு காணொளிகளை இனைத்து என்னால் இயன்ற அளவிற்கு எளிதாக விளக்க முற்பட்டுள்ளேன். நமது முன்னோர்களின் வலிமையை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவே இந்த பதிவு.
புறநானூறு செய்யுள்:
----------------------------------
“செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும்
இனைத்தென் போரு முளரே யனைத்தும்” (புறநானூறு: 30:5)
திருமூலரின் திருமந்திரம்:
------------------------------------------
”கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச
மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி
குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த்
தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே” (திருமந்திர:478)
பொருள்:
--------------
புறநானூறு: செஞ்சூரியனின் வீதியும், அந்த சூரியனின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழ்ந்த மண்டிலமும், காற்றியங்கும் திசையும், ஓராதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும், என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை யுடையனவென்று சொல்லும் கல்வியை யுடையோரு முளர்.
திருமந்திரம்:
--------------------
அண்டமான வெளிமண்டலங்கள் பிண்டமான நம் உடலிலும் உள்ளது என்பதை கூறுகிறார் திருமூலர்.
அறிவியல் ரீதியான தெளிவான விளக்கம்:
---------------------------------------------------------------------
சூரியனின் வீதியும் என்றால் சூரியன் சுற்றும் பாதையை குறிப்பிடுகிறார் புறநானூற்றுப் புலவர். அவ்வியக்கத்தை சூழ்ந்த மண்டிலமும் என்று சூரியன் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பால்வீதியை சுற்றி வருவது போல சூரியனை அதன் கிரகங்கள் சுற்றி வருகிறது என்று கூறுகிறார். அது மட்டுமல்லாமல் எந்த வித ஆதாரமும் இன்றி தனியே நிற்கும் ஆகாயம் என்று ஈர்ப்பயும் விசையையும் கூறுகிறார். இவை அனைத்தையும் கற்றோர் ஒரு யூகத்தில் கூறவில்லை அங்கே சென்று ஆராய்ந்தே கூறியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். அப்போ நமது முன்னோர்கள் விண்களத்தின் வாயிலாகவோ அல்லது வேறு ஏதோ உந்து சத்தியின் வாயிலாகவே சூரிய மண்டலத்தை ஆய்வு செய்துள்ளதை கூற முற்படுகிறார்.
திருமூலர் இவ்வளவு விளக்கத்தையும் கொடுக்காமல் சுருக்கமாக அண்டத்தில் எது உள்ளதோ அது பிண்டத்திலும் உள்ளது என்று முடித்துவிட்டார். இதை நீங்கள் தெளிவாக ஆய்வு செய்து பார்த்தாலே போதும். நமது DNAவிலிருந்து அனைத்தும் இதன் கோட்பாட்டிலேயே அமைந்துள்ளது தெரியும்.
எம்முன்னோர்களின் பராக்கிரமத்தை அறிய இதைவிட ஒரு சான்று வேண்டுமா என்ன? மக்களே தயவு கூர்ந்து செய்யுளை அதன் விளக்கத்தையும் படித்துவிட்டு காணொளியை காண்க அப்போதுதான் வியப்பின் உச்சத்திற்கு செல்வீர்கள்.
ஒரு சனாதனவாதியால் சக்தியே சிவம் சிவமே சக்தி என்று சொல்ல முடியும்.......
ஒரு சனாதனவாதியால் உன்னுள் கடவுள் இருக்கிறான், நீ காண்போர் மனதிலும் கடவுள் இருக்கிறான். அதானால் காண்போரை அன்புடன் நடத்து என்று கூற முடியும்.....
ஒரு சனாதனவாதியால் நாத்திகம் பேசுபவன் உள்ளும் கடவுள் இருக்கிறார் என்று சொல்ல முடியும்......
ஒரு சனாதனவாதியால் நீ எங்கு சென்றாலும் இறுதியில் என்னையே அடைகிறாய் என்று சகோதரத்துவம் பேசவும் முடியும்.
ஒரு சனாதனவாதியால் உன் கடவுளை நீ எப்படி வேண்டுமானாலும் வணங்கு என்று சொல்ல முடியும்.
ஒரு சனாதனவாதியின் வேதங்களில் இரைவனை வனங்காதன் நரகத்தின் கிடத்தப்படுவான் என்று கூறப்படுவதில்லை அல்லது இறைவனை நம்புபவனே செழிப்பான் என்றும் கூறப்படுவதில்லை.
ஒரு சனாதனவாதியின் பக்திக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. முக்தி ஒன்றே சித்தமாய் இருக்கும்.
இந்த மாதிரியான அடிப்படை காரணங்களால்தான் நாங்கள்:மதங்களில் இருந்து விலகி நிற்கிறோம். சனாதனம் என்பது மதமல்ல.... வாழ்வியல் நெறிமுறை......
ஆனால் ஒரு மதவாதியால்,
நான் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒன்றையாவது ஏற்க இயலுமா?
: ”தோடு” என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் பிரணவத்தின் மாண்பையும், இந்த பிரபஞ்சத்தின் அறிவியலையும் போதிக்கும் சேகிழார்:
(பெருவெடிப்பு அறிவியல் (Big Bang), பெண்ணியம், இயற்பியல் (Physics), தமிழின் பெருமை)
--------------------------------------------------------------------------------------------
என் தாய் தமிழின் அழகை காணீர் மக்களே! தமிழில் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் புதைந்திருக்கும் அறிவியல் அற்புதத்தை கண்டு கேட்டு வியந்ச்து போங்கள் மக்களே!
“எல்லையிலா மறைமுதல்மெய்
யுடன் எடுத்த எழுதுமறை
மல்லல் நெடுந் தமிழால்இம்
மாநிலத் தோர்க்கு உரைசிறப்பப்
பல்லுயிரும் களிகூரத்
தம்பாடல் பரமர்பால்
செல்லும் முறை பெறுவதற்குத்
திருச் செவியைச் சிறப்பித்து” (பெரியபுராணம்: 1978)
பொருள்:
--------------
எல்லையில்லாது விரிந்து மேவும் வேதத்தின் முதல் எழுத்தான பிரணவ ஓங்காரத்தின் “ஓ” என்பதனோடு தகர மெய்யின் “த்” ஐயும் சேர்த்து (த்+ஓ = தோ)நற்றமிழால் இவ்வுலகவத்தவற்கு உரை சிறக்கும் தன்மை பல்லுயிரும் களிப்பெய்த “தோ” என்னும் எழுத்தை முதலிற் கொண்டு விளங்குவதாய்,, பெருமான் திருச் செவியைச் சிறப்பிக்கும் வகையில் “தோடு” என்று தொடக்கம் கொண்டதாக நாயனார் மொழியலானார்.
தெளிவான விளக்கம்:
---------------------------------
திருஞானசம்பந்தர் அழுகுரலைக் கேட்டு அந்த பிரணவத்தின் (ஓம் (சிவன்)) மெய் பொருளான சத்தியே (சத்தியின் மெய்யெழுத்து “த்”) ஓடோடி (ஓ(டு)) வந்து பால்லூட்டியமையால் தோடு என்னும் சொல் தோண்றுதலாயிற்று. அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் சத்தியின் பாகத்தில் உள்ள செவியில் தோடு அமையப் பெற்ரிருக்கும். (பிரணவத்தின் முதல் எழுத்து “ஓ” + சத்தியின் மெய்யெழுத்து “த்” + ஓடி வந்தமையால் ”டு” = “தோடு”
அறிவியல்:
------------------
1. பிரபஞ்சம் விரிந்து பரவிக் கொண்டே செல்லக் கூடியது. எங்கெல்லாம் பெருவெடிப்பு நிகழ்கிறதோ அங்கெல்லாம் பிரணவ ஒலி இருக்கும் (Big Bang). 2. சிவமில்லாமலோ சத்தியில்லாமலோ எதுவும் தனித்து செயல்பட முடியாது. இதைத்தான் நியூட்டன் F = MA என்பார் (Physics) நாம் அர்த்தநாரீஸ்வரர் என்போம். 3. இங்கே ஆணுள் பெண் உண்டு பெண்ணுள் ஆண் உண்டு என்பது உறுதிப்படுத்தப் படுகிறது (பெண்ணியம்).
----------------------------------------------------------------------------------------------
தமிழின் அழகை காணாத கண்ணும் ஒரு கண்ணா? தமிழின் தேன் ஓசையை கேட்காத காதும் ஒரு காதா? என்றவகையில் வார்த்தையின் மெய்ஞானத்தை உணரவைத்த சேக்கிழாரின் மெய்ஞானத்தை என்னவென்று போற்றுவது.
[ கலியுகம் அதாவது தற்போது உள்ள உலகம் எவ்வாறு அழியும்? என்ற கேள்விக்கு 12ஆம் நூற்றாண்டிலேயே தெள்ளத் தெளிவாக பதிலுரைத்துவிட்டார் சேக்கிழார்:
----------------------------------------------------------------------------------------
யுகங்கள் அழிவது பின்பு மீண்டும் புதுப்பொழிவுடன் மலருவதும் ஒரு சுழற்சி முறை என்கிறது சனாதனம். இன்றைய அறிவியல் அறிஞர்களும் இதை ஒப்புக் கொள்ளாமல் இல்லை.
“கடையுகத்தில் தனிவெள்ளம்
பலவிரிக்கும் கருப்பம் போன்று
இடை யறாப் பெருந்தீர்த்தம்
எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடை உயர்த்தார் திருத் தோணிப்
பற்றுவிடா மேன்மையதாம்
தடம் அதனில் துறை அணைந்தார்
தருமத்தின் தலை நின்றார்” (பெரிய புராணம்: 1961)
பொருள்:
--------------
தருமநெறியில் தலைசிறந்தவரான சிவபாத இருதையர், ஊழிக் காலத்தின் முடிவில் தோண்றுகின்ற பெரு வெள்ளம் பலவற்றை தன்னிடத்திலிருந்தே பெருகி விரியுமாறு தோற்றுவிக்கும் கருப்போன்று, எல்லா நீர் நிலைக்கும் பிறப்பிடமாக உடைய இடபத்தை கொடியாகக் கொண்ட திருத்தோணியப்பர் திருக்கோயிலிலுள்ள திருக்குளத்தினை அடைந்தார்.
அறிவியல்:
------------------
இன்றைக்கு உலகம் முழுக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விஷயம் உலகம் வெப்பமையமாதல்தான் (Global Warming). அதீத இரசாயனப் புகைகள் வெளியீடு, மழை இல்லாமல் அதீதமாக பாலைவனங்கள் உருவாவது, வாகனப் புகைகளால் காற்று மாசடைந்து பிராணன் அளவு குறைவது, நிலத்தடி நீர் வற்றிப் போவது, குளுமைப்படுத்தும் மரங்கள் அழிந்து போவது போன்ற காரணிகளால் இந்த புவி நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகிறது. இதன் எதிரொளியாக துருவங்களில் உள்ள பனிக்கட்டிகளும், உலகில் இருக்கும் இன்ன பிற பனிப்பாறைகளும் வேகமாக உருகி வருவதால் கடலின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆறுகளில் திடீர் வெள்ளத்துக்கும் இது அச்சானியாகிறது. இந்த உலகை நீரே அதிகம் ஆக்கிரமித்து இருக்கிறது என்னும் பட்சத்தில் 3 பாகம் இருக்கும் நீரானது அதிகறித்துக் கொண்டே போனால் 1 பாகத்தை மூழ்கடிப்பது அத்தனை கடினமான விஷயம் அல்லவே. அது மட்டுமல்லாமல் நீரின் மூலமாக உயிர்பெற்ற உலகம் நீரினால் அழியும் என்பது இயற்கை வகுத்த நியதி என்கிறார் சேக்கிழார்.
-----------------------------------------------------------------------------------------------
அண்டம் உருவானது முதல் அழியும் வரை ஏடுகளில் எழுதி வைத்துவிட்டனர் நமது முன்னோர்கள். சற்று தாமதமேயானாலும் இன்றைய அறிவியல் அறிஞர்கள் நமது முன்னோர்களது கூற்றை ஒப்புக் கொண்டு வருகின்றனர்.
🚩🕉🪷🙏🏻
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #இந்து மத நம்பிக்கை💐 #முன்னோர்கள்