புரட்டாசி மாசம் சிறப்பு
15 Posts • 16K views
இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதால் பலன்கள் என்னென்ன? என்னென்ன விரதங்கள், வழிபாடுகள் மேற்கொள்ளலாம்? இந்த மாதம் வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம். மழை துவங்கும் மாதம்தான் புரட்டாசி.. தமிழ் மாதங்களில் 6வது மாதமாக வரும் புரட்டாசி கன்னி ராசிக்குரிய மாதமாகும். நட்சத்திரம், திதி, கிழமை என அனைத்துமே சிறப்பாக உள்ளது இந்த புரட்டாசியில்தான்.. புரட்டாசி மாத சனிக்கிழமையில், சனி பகவான் அவதரித்தார் என்பதால், சனியால் பாதிப்புள்ளவர்கள், புரட்டாசியில் விரதம் மேற்கொள்ளலாம். இதனால் சனியிலிருந்து விடுபடலாம். புரட்டாசி சனிக்கிழமை புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொண்டால், பூஜையறையை சுத்தம் செய்து, மாக்கோலம் போட வேண்டும். துளசி, தாமரை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய பயன்படுத்த வேண்டும். சனிக்கிழமைகளில் புதிய அகல் விளக்கில், தாமரைத்தண்டு திாி போட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பெருமாள் படங்களுக்கு 5 முக குத்து விளக்கை ஏற்றி வைத்தும், நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை பெருமாளுக்கு நிவேதனமாக படைக்கலாம். பெருமாள் மாதம் இந்த சனிக்கிழமைகளில் எள், வெல்லம் இவற்றை சாப்பாட்டுடன் சோ்த்து பிசைந்து காகங்களுக்கு உணவாக வேண்டும். சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் அனைத்துவிதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.. புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்கிறார்கள். இதற்கு பெருமாளுக்கு பூஜை செய்து முடிந்ததுமே, அன்னதானமும் செய்ய வேண்டும். எள்ளுப் பொடி சாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பலருக்கும் அதை வழங்கலாம். புரட்டாசி மாதம் வரும் மகாளய பட்சத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்படுகிறது.. இதனால் மூதாதையர்கள் சாபங்களிலிருந்து விடுபடலாம். செய்யக்கூடாதவை புரட்டாசியில் புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில் வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்கலாம். இந்த மாதத்தில் பகலில் தூங்கவே கூடாது.. வெற்றிலை, பாக்கு சாப்பிடக்கூடாது. மது, மாமிசத்தை தவிர்க்க வேண்டும். புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர மகாலட்சுமி விரதம், கபிலா சஷ்டி விரதம், ஸித்தி விநாயக விரதம், சஷ்டி - லலிதா விரதம், அனந்த விரதம், அமுக்தாபரண விரதம், உள்ளிட்ட விரதங்கள் உள்ளன.. முக்கிய விரதங்கள் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியதால், பிள்ளையாரை வழிபட்டு வரவேண்டும். அதிலும், வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஒரு வருடத்துக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும். புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடக்கும்.. காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம் போன்ற தோஷங்களால் அவதிப்படுபவர்களும் இந்த மாதத்தில் கருட வழிபாடு செய்வது பலனை தரும். புரட்டாசி மாதத்தில் எந்த விரதம் மேற்கொண்டாலும் சரி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம் நிறைவாக இருக்கும்.. மொத்தத்தில் இறைவனுக்கு காணிக்கை, நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. Hemavandhana #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #புரட்டாசி மாசம் விரதம் முடிஞ்சி மறுநாள் 🍖🍤🍗 Enjoy 💯😋 சிக்கன் அலப்பறை 🤣 #புரட்டாசி மாசம் சிறப்பு
15 likes
12 shares