வரலாற்றில் இன்று.....மறக்க முடியாத நினைவுகள்
2K Posts • 470K views
-
695 views 26 days ago
#வரலாற்றில் இன்று.....மறக்க முடியாத நினைவுகள் அக்டோபர் 19,* *நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை* சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார். இவர் 1906-ல் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டு, முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பிறகு காங்கிரஸில் இணைந்தார். இவர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 1932-ல் உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற பாடல். இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார். தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 83வது வயதில் (1972) மறைந்தார்.
17 likes
9 shares