நியூஸ் அப்டேட்👇👇👇
366 Posts • 882K views
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி உத்தரவு. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தாக்கல் செய்த . மேல்முறையீட்டு மனுவை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணை. தனி நீதிபதியின் உத்தரவுப்படி தற்போதைய நிலை தொடர வேண்டும். இந்த வழக்கில் கட்சிகள், சங்கங்கள் தங்களை இடையீட்டு மனுதாரராக ஆக.,5க்குள் இணைத்துக் கொண்டு கருத்துக்களை முன் வைக்கலாம். விசாரணை ஆக., 6க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு. #நியூஸ் அப்டேட்👇👇👇 #ரெங்கா! #renga-vamba!
14 likes
11 shares
விருதுநகர் மாவட்டத்தில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழிலக பாதுகாப்பு துறை பயிற்சியில் பங்கேற்காத பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து. 215 ஆலைகளுக்கு ரூ.16.85 லட்சம் அபராதம் விதிப்பு. அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளைத் தற்காலிகமாக மூடவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு. #நியூஸ் அப்டேட்👇👇👇 #newsupdate. #ரெங்கா! #renga-vamba!
8 likes
11 shares
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அறிவிப்பின் படி தனியார் கார் வேன் / ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை வசதி வரும் *ஆகஸ்ட் 15-ம் தேதி* முதல் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு இந்த சலுகை பேருதவியாக இருக்கும் 3,000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண அட்டையை பெறும் தனியார் கார் / வேன் / ஜீப் உரிமையாளர்கள், ஒரு வருடத்திற்கோ அல்லது 200 முறையோ கட்டணம் இன்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச் சாலை கட்டண மையங்களை கடப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். #நியூஸ் அப்டேட்👇👇👇 #News update #ரெங்கா! #renga-vamba!
14 likes
14 shares
#😍இனிய மாலை வணக்கம் 😍 #🌻வாழ்த்துக்கள்💐 #renga-vamba! #ரெங்கா! வருமானத்தில்*_ _*தமிழகம் 2வது இடம்!*_ தேசிய அளவில் தனிநபர் வருமானத்தில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது; தேசிய அளவில் தனிநபர் வருமானம் ரூ.1,14,710 என்று உள்ள நிலையில், தமிழகத்தில் ரூ.1.96,309 என உள்ளது; முதலி டத்தில் ரூ.2,04,605 உடன் கர்நாடகா உள்ளது -லோக்சபாவில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தகவல். News update #நியூஸ் அப்டேட்👇👇👇
10 likes
10 shares