#முக்கிய செய்தி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ்
நேற்றையே தினம் இரவு சுமார் 11.30 மணி அளவில் வசந்தம் மருத்துவமனை சாலையில் ஒரு கன்றுக்குட்டி அடிபட்டு கிடந்தது. அந்த கன்றுக்குட்டி ஐயோ என்று கத்தியது. அன்று ஒரு நாளில் மனுநீதி சோழனிடம் தைரியமாக சென்று தாய் பசு தன் பிள்ளை பசுவிற்காக நீதி கேட்டது, மகன் என்றும் பாராமல் தாய்பசுவிற்கு நீதி வழங்கினார். அதை போன்று ஐயோ என்று கத்திய கன்றுக்குட்டிக்கு அவ்வழியாக வந்த மருத்துவர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் அடிப்பட்டு கிடந்த கன்றுக்குட்டிக்கு முதல் உதவி செய்து அக்கன்றுக்குட்டியை அவர்கள் எஸ்எப் வாகணத்தில் உட்கார வைத்து கோட்டார் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..!
#முக்கிய செய்தி
கின்னஸ் சாதனை படைத்த 10.5 கிலோ தங்க ஆடை
* 10.5 கிலோ தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட ரூ. 9.5 கோடி மதிப்புள்ள ஆடை துபாயில் அறிமுகம்.
* அரிய வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஆடை, சவுதி அரேபியாவின் 'அல் ரோமைசான் கோல்டு நிறுவனம்' வடிவமைத்துள்ளது
* மேலும், இது உலகின் கனமான தங்க ஆடை என கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது..!
#முக்கிய செய்தி
உடை என்பது ஒரு கவசம் - சாதிக்க உடை ஒரு தடை அல்ல...
* கேரளா - வயநாடு : துவாரகா AUP பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் 55 வயதான கன்னியாஸ்திரி சபீனா
* தடகள போட்டியில் மற்ற வீரர்களை விட மின்னல் வேகத்தில் முந்தி சென்று தங்கப் பதக்கம் வென்றார்.
* சிஸ்டர் சபீனா ஒன்பதாம் வகுப்பிலே தேசிய தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றது மட்டுமில்லாமல் சிறு வயதிலேயே பல பதக்கங்களை வென்றுள்ளார்..!