🏹ராமாயணம் 📚
531 Posts • 2M views
*ஶ்ரீ ராம கர்ணாம்ருதம் - ஸ்லோகம் 20* ராமம் சந்த³னஶீதலம் க்ஷிதிஸுதாமோஹாகரம் ஶ்ரீகரம் வைதே³ஹீநயனாரவிந்த³மிஹிரம் ஸம்பூர்ணசந்த்³ரானனம் ராஜானம் கருணாஸமேதநயனம் ஸீதாமனோநந்த³னம் ஸீதாத³ர்பணசாருக³ண்ட³லலிதம் வந்தே³ ஸதா³ ராக⁴வம் *ஸகல ஜனங்களையும்‌ ஆனந்தப்படுத்துகிறவனாகவும்‌, சந்தனம்‌ போல்‌ குளிர்ந்தவனாகவும்‌, ஸீதா தேவிக்கு மோஹத்தைச்‌ செய்பவனாகவும்‌, ஸம்பத்தைக்‌ கொடுப்பவனாகவும்‌, ஸீதாதேவியின்‌ கண்களாகும்‌ தாமரைப்பூவுக்கு சூரியன்‌ போன்றவனாகவும்‌, பூர்ண சந்திரன்‌ போன்ற முகமுடையவனாகவும்‌, பூமண்டலத்துக்‌கு அரசனாகவும்‌, கருணை புரிந்த கண்களை உடையவனாகவும்‌, ஸீதாதேவியின்‌ மனஸை ஸந்தோஷப்படுத்துகிறவனாகவும்‌, ஸீதாதேவியின்‌ கண்ணாடி போன்ற கன்னங்களில்‌ மகிழ்ச்சியுடையவனாகவும் இருக்கின்ற ஸ்ரீராகவனை எப்பொழுதும்‌ வணங்குகிறேன்‌* 🚩🕉🪷🙏🏻 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏சீதா ராமர் #🏹ராமாயணம் 📚 #இராமாயணம் மகாபாரதம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
36 likes
37 shares
*ஸ்ரீராம கர்ணாம்ருதம் - ஸ்லோகம் 28* ராஜீவாய தலோசனம் ரகுவரம் நீலோத்பலஸ்யாமலம் மன்தா ராஞ்சிதமண்டபே ஸுலலிதே ஸௌவர்ணகே புஷ்பகே ஆஸ்தானே நவரத்னராஜிகசிதே ஸிம்ஹாஸனே ஸம்ஸ்திதம் ஸீதாலக்ஷ்மணலோகபாலஸஹிதம் வன்தே முனீன்த்ராஸ்பதம் *தாமரைப்பூ போல நீண்ட கண்களையுடையவனும்‌, நீலோத்பவ புஷ்பம்‌ போல்‌ நீலவர்ண மேனியுடையவனும்‌, மந்தாரபுஷ்பங்களால்‌ அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்‌ அழகான சுவர்ணமயமான புஷ்பகத்தில்‌, தர்பார்‌ மண்டபத்தில்‌ நவரத்னங்களினால் இழைக்கப்பட்ட சிம்ஹாஸனத்தில்‌ வீற்றிருப்பவனும்‌, மஹரிஷிகளால் அடையத்தக்க ஸ்தானமாயிருப்‌பவனும்‌, ஸீதா தேவி, லக்ஷ்மணன்‌, இந்திராதி லோகபாலாள்‌ முதலிய பேர்களுடன்‌ கூடியவனுமாகிய ரகு சிரேஷ்டனாகிய ஸ்ரீராமனை யான்‌ வணங்குகிறேன்‌.* 🚩🕉🪷🙏🏻 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏சீதா ராமர் #🏹ராமாயணம் 📚 #இராமாயணம் மகாபாரதம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
41 likes
17 shares
*ஸ்ரீராம கர்ணாம்ருதம் - ஸ்லோகம் 27* கள்யாணதம் கௌஸிக-யஜ்ஞபாலம் களானிதிம் காஞ்சன ஸைலதீரம் கஞ்ஜாத னேத்ரம் கருணாஸமுத்ரம் காகுத்ஸ்த ராமம் கலயாமி சித்தே *க்ஷேமத்தைக்‌ கொடுக்கின்றவனாயும்‌, விஸ்வாமித்ர முனியின்‌ யாகத்தை ரக்ஷித்தவனாயும்‌, ஸகல கலைகளுக்கும்‌ இருப்பிடமாயும்‌, மேரு பர்வதம்‌ போல்‌ மஹாதீரனாயும்‌, தாமரைக்‌ கண்ணனாயும்‌, கருணைக் கடலாயும்‌ இருக்கின்ற காகுத்ஸ்த வம்சத்தில்‌ பிறந்த ஸ்ரீராமனை நான்‌ மனதில்‌ தியானிக்கின்றேன்‌.* 🚩🕉🪷🙏🏻 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏சீதா ராமர் #🏹ராமாயணம் 📚 #இராமாயணம் மகாபாரதம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
45 likes
11 shares