நடராஜர் அபிஷேகம் ஆனித் திருமஞ்சனம் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜப்பெருமான்
35 Posts • 113K views
சிற்றம்பலக்காேவை தந்த பெருஞ் சிந்தனையாேடு இனி வாழ்வேன் ஆனி 19 (04.7.25) ============================= சிவாய நம திருச்சிற்றம்பலம் என்உயிரே எனக்கினிய உறவே என்அன்பே என்னார் அமுதேஉன் குமுதவாய் சிரிப்பே தன்உயிரே தந்தனை தன்உடலும் தந்திங்கே சிறியேனை காதலித்து என்னுடனே இறங்கிய மண்உயர் மாடத்து பைங்கிளியே என்னுடன் வழிநடக்க வளரத்திலேன் புண்ணிய நிழல்தரு தன்உயர் மரந்தன்னை தாகம் தீர்க்கவும் சுனைஇல்லை சுடுகற்கள் ஆனதுவேஎன் வழிஆனதுவே!! அம்பலக் கூத்தனை அணுகியே வணங்கி அறியார் அடைகின்ற ஆவியின் பெருந்துன்பம் எம்பலம் குன்றியனாய் நானும்இருக்க என்ரதியே என்னைநீ நம்பிய அதிசயமு மதுவறியேன் உம்பலமும் மனமும் மனத்தின் திடமும் உணர்ந்தறியேன் என்னை நீ உவந்தே என்னுடன் நம்பலம் அதுவென்று துணிந்தாய்க்கு நாயினேன் பஞ்சின்மெல் லடிக்குமலர் தூவிஎன்மனம் பதைத்திலேனே! #நடராஜர் #தில்லையம்பல நடராஜா 👏 #நடராஜர் அபிஷேகம் ஆனித் திருமஞ்சனம் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜப்பெருமான் நன்றி வணக்கம் ஓம்நமசிவாய (அரன் நாமமே சூழ்க! வையமுந் துயர் தீர்கவே) ஜெய்க சிவமே #sivan #சிவன்
68 likes
1 comment 56 shares