Failed to fetch language order
Failed to fetch language order
Failed to fetch language order
காற்று
46 Posts • 112K views
-
997 views 2 months ago
காற்று... #காற்று காற்று அடிக்கும் திசையைப் பொறுத்து தான், மழையின் பயணம் இருக்கிறது. கலங்கரை விளக்கை பார்த்து தான், கப்பலின் கரையும் இருக்கும். உழைப்பவரின் உயர்வை பொறுத்து தான் மேலாண்மையின் திறன் இருக்கும். வரப்பு உயர்ந்தால் தான் நீர் உயரும். நீர் உயர்ந்தால் தான் நெல் உயரும். உழைப்புக்கு உயர்வு கொடுத்தால். வெற்றி நிச்சயம்!* உற்சாகமான மாலை வணக்கம்.....
13 likes
10 shares
ஆதி தமிழன்
814 views 2 months ago
#🙏ஆன்மீகம் #காற்று #பஞ்சபூதங்கள் #மரணம் #🙏மாத சிவராத்திரி🪔 மனிதா நீயே மண்ணில் அதிசயம் புனிதம் மிக்க புதிர்கள் கொண்டாய் உயிரும் பிரியும் உடலும் அடங்கும் வயிறும் தசையும் வாய்வில் இணையும் மலமும் வந்து மரணமும் நிகழும் உலகில் எங்கும் உண்மை நிகழ்வே பத்து விதத்தில் பங்கு கொள்ளும் புத்தியை நீயும் பகுத்தறி தமிழனே வாய்வும் பத்து வகையாய் உண்டு தாய்மடி வந்து தரணியில் வாழ்ந்தாய் வேண்டா செயலும் வேகமாய் செய்யவே மீண்டும் இறைவன் மீட்டுக் கொள்கிறான் தங்களில் வாயு தானாய் நிற்கும் அங்கம் வலுவும் அற்று போகும் உயிரில் காற்றும் உள்ளே போகா கயிறாய் மூச்சும் சரிந்து அகலும் மலக்குடல் காற்றும் மலமும் போகும் விலகும் தொழில் விரைவாய் அகன்றே ஒலியின் காற்றும் ஓசையும் கேட்கா பலியும் விதியும் பக்குவம் தருமே நிரவுக் காற்றும் நீரும் பருகா மரணம் வரும்வரை மனமும் துடிக்கும் தும்மல் காற்றும் துடிக்கச் செய்யும் வம்சம் கதர வருவான் ஈசன் விழியில் காற்றும் விடைபெறும் நாளே வழியில் காணலாம் வந்தோர் பாதையே உறக்கம் மின்றியே உடலும் தவிக்கும் உறவுகள் நெருங்கிட உள்ளமும் துடிக்கும் கொட்டாய் ஆவியும் கொஞ்சம் வரவே கட்டில் பக்கம் காலும் அசையும் இமையில் காற்றும் இனிதாய் விடைபெறும் அமைதி நிலவி அதிர்ச்சி தருமே வீங்கற் காற்றும் வெறுமனே புறப்படும் தேங்கும் விழிநீர் தேம்பியே வழியும் உயிரும் பிரிய உணர்வும் இருக்கா கையிலை மலையான் கையையும் பிடிக்கவே வெளியே புறப்படும் வெற்றுடல் கிடக்கவே களிமண் உயிரும் கடந்து போகுமே நாளும் நேரமும் நாவில் நெருங்கவே ஆளும் உடலின் அனைத்து செல்களும் முடங்கி விடுமே மூச்சும் அடங்கவே முடக்கம் வழிகளும் மூன்றும் அடைபடும் வழியில் நாடியும் வகுத்து கொடுக்கும் அழிவிலா செயலும் அன்பில் தொடரவே மண்ணில் உயிரும் மாற்றம் இன்றியே கண்களின் வழியே கடந்து செல்லுமே வாயின் திறவு வழியே போகுமே தாயின் கொடியே தானாய் போகவே உச்சி மண்டையில் உள்வழி பிரியுமே உச்சம் தருவே உரைமுடி முடங்கவே ஆசனம் வாயில் அதிர்ந்து பிரியுமே நேசம் பாசம் நெஞ்சில் தவிக்குமே சிறுநீர் வாசலில் சிந்தியே பிரியும் மறுகணம் நாடியும் மறுத்து விடுமே காதும் அடைக்க கடக்கும் உயிரே ஏதும் அறியா எச்சம் குறைவே மூக்கின் வழியில் மூச்சும் நிற்கும் நாக்கும் வரண்டு நலிந்து விடுமே தொப்புள் குழியில் தொடர்பும் நிற்குமே ஒப்பனை இல்லா உயிரும் அடங்குமே ✍️தமிழ் தாசன்
6 likes
8 shares