Failed to fetch language order
Failed to fetch language order
Failed to fetch language order
திருமலை திருப்பதி நேரலை தரிசனம்
27 Posts • 21K views
நடேசன் S
2K views 2 months ago
🌹 🌿 திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை 🌹 🌿 ஏன் ! மேலே படியுங்கள் !: 🌹 🌿 காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி - தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !. . 🌹🌿குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் ... அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார் ! 🌹 🌿 திடுக்கிட்டு கண் விழித்த அவர் , ...தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் ........ திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு !.... 🌹 🌿 பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் , அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க ..... 🌹 🌿 அப்போது அசரீரியாய் ஒரு குரல் ! '' அந்த மணியை யாரும் தேட வேண்டாம் !....ஆம் ...புரட்டாசி , சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக , வேங்கடநாதன் என்கிற பெயரில் ...துப்புல் அனந்தசூரி - தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் !....அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் !'' 🌹 🌿 அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன் ! 🌹 🌿 திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே ,' மணியான குழந்தையாக ' அவதரித்ததால் , திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் கூட மணி அடிப்பது இல்லை, 🌹 🌿 மாயவன் சன்னிதியிலும் மணி இல்லை என்று கூறப்படுகிறது. படித்ததை பகிர்ந்தேன் 🙏 #திருமலை திருப்பதி #திருமலை திருப்பதி நேரலை தரிசனம்
14 likes
1 comment 7 shares