#ஆடுமாடுகளின்_மாநாடு
கால்நடைகள் காடுகள் மேய்ச்சல் நிலங்களில் மேய்வதற்கு தடை விதிப்பை எதிர்த்து "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 10-07-2025 அன்று மதுரை விராதனூர் என்னும் இடத்தில் ஆடு-மாடுகளின் மாநாடு நடந்தது.
இதில் அண்ணன் சீமான் பேசிய முக்கிய விஷயங்கள்..
கால்நடைகள் மேய்ச்சல் நிலத்தில் மேய தடை இட்டால் கால்நடை தொழில் செய்யும் லட்சகணக்கான் குடும்பங்கள் தங்கள் தொழிலை கைவிடும் நிலை வரும், நாட்டு மாட்டு பால் நம் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போகும். பால் முட்டை இறைச்சி விலை பல மடங்கு உயரும்.
மொத்த கால்நடைகளும் கார்பொரேட் கையில் போகும் வெறும் பாக்கெட் பால் ராசாயனத்துடன் நமக்கு கொடுக்க பட்டு சிறு வயது முதல் நோய்கள் அதிகமாகும்.
இயற்கையாக வளர்ந்த கால்நடைகள் கோழிகள் இல்லாமல் போய், பிராய்லர் கோழி ஆடு மாடு என்று வந்து நோய்கள் கருத்தறித்தல் குறைகள் அதிகமாகும், ஒரு வயது குழந்தை முதல் சக்கரை நோய் வரும்.
மேலும் பல உலக நாடுகள் எல்லாம் மேய்ச்சல் நிலங்களை தங்கள் கால்நடைகளை பாதுகாத்து மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது. ஏன் என்றால் பால் முட்டை இறைச்சி போன்றவற்றின் சந்தை பல லட்சம் கோடி பெருமானமுள்ள பொருளாதாரம்..
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்!
ஆடும் மாடும் நம் செல்வங்கள்!
#📢 தங்கத்தில் திடீர் தள்ளுபடி! #🍥HBD நா. முத்துக்குமார்😍 #🥹பெற்ற மகளை துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுட்ட தகப்பன்! #😱4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்கள் .