#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும்
*ஏழாம் தந்திரத்தில் உள்ள 19-ஆம் பதிகம் சமாதிக் கிரியை பற்றியது, இது ஞானிகள் தங்கள் உடலை விட்டுப் பிரிந்தபின் செய்யப்படும் சடங்குகள், சரியான இடம் தேர்வு செய்தல், குழி தோண்டுதல், நிலவறை அமைத்தல் போன்ற வழிமுறைகளை விளக்குகிறது. இந்தச் சடங்குகளைச் சரியாகச் செய்யாவிட்டால், ஞானியின் உடலுக்கு என்ன ஆகும், அதனால் நாட்டுக்கு என்ன விளைவு ஏற்படும் என்பதையும், ஞானியின் உடல் மண்ணோடு மண்ணாகி எல்லாவற்றிலும் கலந்துவிடும் தன்மையையும், சித்தர்கள் கூறும் ஆன்மீக வழிமுறைகளையும் விளக்குகிறது*.
பாடல் வரிகள் :
*19. சமாதிக் கிரியை*
1910 அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1
1911 எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 2
1912 புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 3
1913 அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 4
1914 நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே. 5
1915 தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 6
1916 நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 7
1917 பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு
முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 8
1918 நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 9
1919 ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு கண்ணமும் நறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே. 10
1920 விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம் இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 11
1921 மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 12
1922 ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலில் சோடசம் காண்உப சாரமே. 13
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏