புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு
2K Posts • 24M views
*புரட்டாசி ஸ்பெஷல் !* *பகுதி 19* *திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்* திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும் பெற ஒரு மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம். மந்திரம்: ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே புண்ணியங்கள் பல நிறைந்ததும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான வேங்கட மலையே. என் பாதங்களை உங்கள் மீது வைத்து ஏறுகிறேன். அதனால் ஏற்படும் பாவங்களை கருணையோடு பொறுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். திங்களுடைய சிகரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாளை காணவே நான் செல்கிறேன், அவரின் தரிசனம் எனக்கு கிடைக்க தாங்கள் அருளுமாறு வேண்டுகிறேன். திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஏறினால், ஏழுமலையானின் தரிசனம் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் அவற்றின் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். கோவிந்தா ஹரி கோவிந்தா 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏புரட்டாசி முதல் சனிக்கிழமை🏵️ #🙏🏻புரட்டாசி மாதம்✨
3019 likes
8 comments 6321 shares
sankarkalai
26K views 1 days ago
625 likes
1672 shares