love
753 views • 3 months ago
மிடில் கிளாஸ்...
என்னாங்க... பத்து தேதி ஆகிடுச்சி இந்த மாச சம்பளத்தில மளிகை பாக்கி கொடுத்தாச்சா...?
ஒன்னாந் தேதியே கொடுத்தாச்சி...
பசங்களுக்கு டியூசன் பீஸ்...?
ரெண்டாந் தேதி பட்டுவாடா பண்ணியாச்சி...
வீட்டு வாடகை...?
அஞ்சாந் தேதி கொடுத்தாச்சி...
தீபாவளி பண்டுக்கு...?
நாலந்தேதியே வந்து வாங்கிட்டு போயிட்டாங்க...
பிராட் பான்ட் பில்லு....?
பிராட்பான்ட், மொபைல் ரீ சார்ஜ்லாம் மூனாந்தேதியே பண்ணியாச்சி...
வண்டி EMI...
அது ஏழாந்தேதி ஆட்டமேடிக்கா போயிடும்...
கரண்டு பில்லு...?
நேத்து ஆன்லைன்ல கட்டியாச்சி...
ஜுவல் லோனுக்கு வட்டி...?
நாளைக்கு ஆபிஸ் போற வழில கட்டிட்டு போயிடுறேன்...
ஸ்ஸப்பாடா... எல்லா கடனும் கட்டுனது போக மீதி என்னங்க இருக்கு...?
மீதி என்ன இருக்குன்னா கேட்ட...?
ஆமாங்க...
கரெக்ட்டா இருபது நாள் இருக்கு..
#மிடில் கிளாஸ் வாழ்க்கை
17 likes
10 shares

