காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔
52 Posts • 322K views
உயிரிழந்த பெண் 40 வயதான யமனவ்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது கணவரைப் பிரிந்து, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீசைல் பாட்டீல் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், யமனவ்வாவிற்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாக ஸ்ரீசைல் பாட்டீலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 14-ஆம் தேதி இரவு தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீசைல் பாட்டீல், யமனவ்வாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்ற அவர், மறுநாள் காலையில் வந்து யமனவ்வா மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி கதறி அழுது நாடகமாடியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு அவரே தகவல் அளித்துள்ளார். ஆனால், யமனவ்வாவின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஸ்ரீசைல் பாட்டீல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இறுதியில், ஆத்திரத்தில் தாமே அவரைக் கொலை செய்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📢 ஜனவரி 19 முக்கிய தகவல்கள் 📸
10 likes
6 shares
இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, உயிரிழந்தவரின் காதுக்கு அருகே ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கணவரைக் கொன்றுவிட்டு, அவரது சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்து இரவு முழுவதும் அந்தப் பெண் தனது மொபைலில் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளார். கொலையாளி பெண்ணின் இந்த வக்கிரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📢ஜனவரி 22 முக்கிய தகவல் 🫠
11 likes
11 shares