ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
798 views • 2 days ago
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜனனி சக்தியை காப்பாற்றிய கையோடு, ஆதி குணசேகரனுக்கு எதிரான நடவடிக்கையிலும் இறங்கி, அவரைப் பற்றிய உண்மைகளை ஜட்ஜ் ஒருவரிடம் புட்டு புட்டு வைத்தார். இதையடுத்து ஆதி குணசேகரனை பிடிக்க தனிப்படை ஒன்றையும் அமைத்தது அய்யாதுரை பாண்டியன் தலைமையிலான போலீஸ், மேலும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் குணசேகரன். இதையடுத்து வீட்டுக்குள் மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார் ஜனனி. அதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அரிவாளை எடுத்துக் கொண்டு ஜனனியை தாக்க வந்த அறிவுக்கரசியை கீழே தள்ளிவிட்டு அடிவெளுக்கிறார் ஜனனி. இதனால் அவர் ஒருபுறம் வலியில் கத்துகிறார். மறுபுறம் முல்லையை தர்ஷன் மற்றும் தர்ஷினி இருவரும் அடிக்கிறார்கள். பின்னர் அனைவரும் சேர்ந்து அறிவுக்கரசியை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார்கள். அதேபோல் தலைமறைவாக உள்ள ஆதி குணசேகரனுக்கு போன் போடு வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக உங்க பரம எதிரி சாருபாலாவை போட்டிருக்கிறார்கள் என கூறுகிறார். இதைக்கேட்டு கதிர், ஞானம் இருவரும் ஷாக் ஆகிறார்கள்.
அறிவுக்கரசியை ஓடவிட்ட பின்னர் வீட்டுக்குள் செல்லும் ஜனனி, விசாலாட்சியிடம் பேசுகிறார். இதுக்குமேல உங்ககிட்ட மறைக்க எதுவுமில்லை என கூறிவிட்டு, இந்த சொத்துக்களை வளர்த்தது மட்டும் தான் உங்க மகன், அதோட வேர் தேவகி என சொல்கிறார். உங்க புருஷன் ஆதி முத்துவுக்கு உங்களை தாண்டி இன்னொரு வாழ்க்கை இருந்ததாக ஜனனி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் விசாலாட்சி. அந்தப் பெண்ணை ஏமாற்றி அவர் சொத்தையெல்லாம் எழுதி வாங்கிவிட்டு தான் ஆதி முத்து அவரை கல்யாணம் பண்ணிக்கொண்டதாகவும், இந்த சொத்துக்கள் எல்லாம் தேவகிக்கு சொந்தமானது எனவும் ஜனனி, விசாலாட்சியிடம் கூறுகிறார் #📺எனக்கு பிடித்த சீரியல் #சன் டிவி எதிர்நீச்சல் சீரியல்
2 likes
11 shares