"நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!
ஏனிந்த சிரிப்பு?"
இந்தப் பாடலை அனேகமாக அனைவரும் அறிந்திருப்பார்கள். அதுமட்டுமின்றி மனதையும் பறிகொடுத்திருப்பார்கள். அப்படி என்ன ஒரு விசேஷம் இந்தப் பாடலில்.?...அதெல்லாம் தெரியாது...ஆனாலும் ஒரு முறை கேட்ட பின்பு இதயத்தில் நாள்பூரா எதிரொலிக்கும் வரிகள் அனேகமாக எத்தனையோ பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
அப்போது, என் உலகம் சிறியது. வெளிஉலகத்தைப் பற்றி எதுவும் அறியாத சின்னஞ்சிறு வயது எனக்கு. கூடவே, சிறுமிகளுக்கே உரித்தான இருட்டென்றால் அதீத பயம். இரவு நேரத்தில் பயத்தில் உறக்கம் வராது அடம் பிடிக்கும் வேளையிலே 'டிக் டிக் டிக்' எனும் கடிகாரமுள் நகரும் சத்தம் கூடப் பெரிதாகக் கேட்டு எனது சின்ன இதயத்தை 'பயம்' விடாது பிறாண்டும்.அப்போதெல்லாம் 'முருகா...முருகா....முருகா' என்று இடைவிடாது மனத்துள் மந்திரம் ஓதும். அது போன்ற பருவத்தில், சில உணர்வுகள் மனத்தை எளிதாகப் பிடித்துக் கொள்ளும்.
அன்றும் அப்படித்தான், ரேடியோவில் ஒலித்த பலமான சிரிப்புச் சத்தம்..அதை தொடர்ந்து ஒலித்த அந்தப் பாடல். சில வினாடிகள் அப்படியே பாடலோடு ஒன்றிப்போய் சலனமே இல்லாத மனத்துள் ஒரு எதிரொலி. கணீரென்ற குரல்...இறுக்கமான ஒரு மௌனத்தில் புரியாத அர்த்தங்கள் கொண்ட பாடல். ஒலித்து முடிந்த பின்பும் கூட காதுக்குள் அதே ராகம். அன்று முழுதும் திரும்பத் திரும்ப என்னோடு பயணித்த அந்த முதல் வரி....'நதியினில் வெள்ளம்' முதல் நான்கு வரிகள் உள்ளத்தோடு வந்து ஒட்டிக்கொண்டதைப் போன்ற நிலை. வாய் ஓயாது அதையே முணு முணுத்தபடி நடந்து கொண்டிருப்பேன். அப்படி ஒரு ஆளுமை கொண்ட பாடல் வரிகள். என்னெவென்றே சொல்ல இயலாத ஒரு பிடிமானம் எனக்கும் அந்த இசைக்கும் இடையில் நடந்து கொண்டிருந்தது ஏன் என்று இன்றுவரையில் ஏன் என்று புரியவில்லை எனக்கு.
பாடலைப் பாடியவர் யார் என்றும் தெரியாது, இந்தப்பாடல் எந்தத் திரைபாடப் பாடல் என்றும் தெரியாது, யார் எழுதியது? யார் நடித்தது? என்னும் விவரங்கள் கூடத் தெரியாத, சொன்னாலும் புரியாத வயது. அதிலெல்லாம் அவ்வளவு விருப்பமும் கிடையாது. ஆனால் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு மட்டும் மனத்துள் இருந்து கொண்டே இருந்தது. அந்தக் காலத்தில் பாட்டுப்புத்தகம் வெளிவந்து கொண்டிருந்த நேரம். இந்தப் பாடல் எந்தப் படத்தில் வருகிறது என்று மிகவும் கஷ்டப்பட்டு..! கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பாட்டுப் புத்தத்தை வாங்கிப் படித்துப் பாடிப் பார்த்த நிகழ்வு இன்னும் எனது நெஞ்சில் பெரிய விஷயமாகவே இருக்கிறு. ஒருவேளை அதுவே
#நடிகர் திலகம் சிவாஜி கணேசன் #சிவாஜி கணேசன் நடிகர் திலகம் 🙏