சன் தலைப்புச் செய்திகள்
7 Posts • 1K views
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #சன் தலைப்புச் செய்திகள் #ரெங்கா! #renga-vamba! இன்றைய தலைப்புச் செய்திகள்! 🗞️ வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி. தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 🗞️ அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். 🗞️ மேகதாது அணை திட்ட அறிக்கையை தமிழ்நாட்டிடம் காட்டிய பிறகே முடிவெடுக்க உத்தரவு.முன்கூட்டியே எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு. 🗞️ மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி தரவில்லை என அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.வருங்காலத்திலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதி. 🗞️ புதுக்கோட்டை அருகே சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம் அகற்றம்.இரவோடு இரவாக டிரக்கில் ஏற்றி பணிமனைக்கு கொண்டு சென்றனர். 🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வானளாவிய குளறுபடிகள். பழைய நடைமுறையையே தொடர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல். 🗞️ நியாயமான முறையில் வீடுவீடாக BLO-க்கள் சென்று SIR பணிகளை செய்யவில்லை. அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி... 🗞️ விழுப்புரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் புகார். யூரியா வாங்கினால், துணை உரங்கள் வாங்க நிர்பந்தம் எனவும் குற்றச்சாட்டு. 🗞️ திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு `செவாலியே' விருது வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் வழங்கி கவுரவம். 🗞️ பெங்களூருவில் குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதி மீது மோதிய கார். தொடர்ந்து ஹார்ன் அடித்ததால் ஆத்திரத்தில் மோதியதாக கார் ஓட்டுநர் வாக்குமூலம். 🗞️ டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் ஒரு கார் பறிமுதல்.குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என அமித்ஷா திட்டவட்டம். 🗞️ பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகிறது பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடு. 🗞️ இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி. சவாலான தொடராக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டி.
11 likes
14 shares
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! *🚨 காலை தலைப்புச் செய்திகள்* 📰 🗞️ டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 9 பேர் உயிரிழப்பு.. படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை 🗞️ டெல்லியில் கார் வெடித்த இடத்தில் என்ஐஏ, என்.எஸ்.ஜி. அதிகாரிகள் தீவிர விசாரணை. ஒருவரை பிடித்து விசாரணை நடத்துவதாக தகவல் 🗞️ கார் வெடிப்பு நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு.. அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி... 🗞️ டெல்லி கார் வெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிர வாகன சோதனை 🗞️ பீகாரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. 122 தொகுதிகளில் 3.70 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 1300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் 🗞️ டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமித் ஷாவிடம் நிலைமை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.. டெல்லி சம்பவம் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் 🗞️ இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கான காலம் நெருங்கிவிட்டது.. முந்தைய ஒப்பந்தத்தை விட மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என டிரம்ப் பேட்டி 🗞️ பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. ஷாரூக், சல்மான் கான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் மருத்துவமனையில் குவிந்தனர் #சன் தலைப்புச் செய்திகள்
5 likes
21 shares
#sneha die hard fan #ரெங்கா! #renga-vamba! *இன்றைய தலைப்புச் செய்திகள்!* #சன் தலைப்புச் செய்திகள் 🗞️ ஹரியானா வாக்குத் திருட்டு பற்றி ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள் அதிர்ச்சி தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து. மக்கள் தீர்ப்பு திருடப்படும்போது தேர்தல் ஆணையம் மவுனம் காப்பதாகவும் கண்டனம். 🗞️ பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு. 🗞️ வாக்கு திருட்டு தொடர்பான புதிய ஆதாரங்களை வெளியிட்டார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி. ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. 🗞️ முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம். 2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என மீண்டும் திட்டவட்டம். 🗞️ திமுக - தவெக இடையேதான் போட்டி என கூறிய விஜய்க்கு வலுக்கும் கண்டனம். 2 ஆண்டுகால கட்சியின் தலைவர், 75 ஆண்டுகால திராவிட இயக்கத்தை பார்த்துச் சொல்வதா என தலைவர்கள் காட்டம். 🗞️ கரூர் கொடுந்துயருக்கு முழு பொறுபேற்க வேண்டிய விஜய் கண்ணியமற்ற முறையில் திசை திருப்ப முயற்சிப்பதாக வைகோ கண்டனம். விஜயின் நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும் என்று எச்சரிக்கை. 🗞️ கோவை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் வரும் 19-ம் தேதி வரை சிறை. கோவை குற்றவியல் நீதிமன்ற உத்தரவை அடுத்து சிறையில் அடைப்பு. 🗞️ ஒசூரில் பெண் தொழிலாளிகள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய இளம்பெண் கைது. வீடியோவை பகிர்ந்த ஆண் நண்பரை தேடுகிறது போலீஸ் 🗞️ கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படம். சுந்தர்.சி இயக்கவுள்ள திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு 🗞️ சென்னை ராயப்பேட்டையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு. ஃபேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்தவரும் உயிரிழந்த பரிதாபம்; மற்றொரு இளைஞரின் கால் துண்டானது.
12 likes
14 shares
#காலை வணக்கம் #சன் தலைப்புச் செய்திகள் *இன்றைய தலைப்புச் செய்திகள்!* 🗞️ தமிழ்நாட்டிக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கும் பாஜக -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் 🗞️ திருச்சி துறையூரில் இபிஎஸ் பரப்புரை செய்யவிருந்த பகுதி வழியே சென்ற ஆம்புலன்ஸ். ஓட்டுநர், உதவியாளரை தாக்கிய அதிமுகவினர், ஆம்புலன்ஸை விரட்டியடித்ததால் பரபரப்பு 🗞️ VP தேர்தலில் சந்திரபாபு நாயுடுவே சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிப்பார். மண்ணை நேசிப்பவராக இருந்தால் சந்திரபாபு மனம் மாற வேண்டுமென செல்வப்பெருந்தகை கருத்து 🗞️ விலை குறைவாகக் கிடைக்கும் இடத்திலேயே கச்சா எண்ணெய் வாங்குவோம் என இந்தியா உறுதி. அமெரிக்காவின் வரி விதிப்பு அநீதியானது என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் சாடல். 🗞️ சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வாழை இலை விலை கிடுகிடு உயர்வு. 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு 400 ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக விலையேற்றம் #ரெங்கா! #renga-vamba!
11 likes
11 shares