aalayam arivom.
669 Posts • 164K views
saravanan.
548 views 2 days ago
#aalayam arivom. ஆன சுயம்பு அம்மன்! உலகிலேயே இங்கு மட்டும்தான்!_* * 🛕🛕🛕தேவர்கள் இட்ட பிரம்மதண்டம், கோடாரியால் வெட்டுப்பட்ட தடத்துடன் சிவலிங்கம், ருத்ராட்சத்தைத் தாங்கியபடி சுயம்பு அம்மன்... எங்கே? அர்ச்சுனம் - மருதமரம் ஸ்ரீசைலம் – தலையார்ச்சுனம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் – இடையார்ச்சுனம் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் – கடையார்ச்சுனம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் (நாறும்பூ -மணம்மிக்க மலர்கள்) கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. > ஒரு சமயம், தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த இடம் தேடினார்கள். காசிக்கு நிகரான திருத்தலம் எதுவென்று சிவபெருமானிடம் கேட்டார்கள். சிவபெருமாள் பிரம்மதண்டத்தைத் தேவர்களிடம் கொடுத்து, அதைத் தரையில் போடும்படி கூறினார். தேவர்களும் பிரம்மதண்டத்தை தரையில் இட, அது கங்கை தொடங்கி பல்வேறு இடங்களில் பயணித்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் வந்து நின்றது. அந்த இடமே திருப்புடைமருதூர். காசிக்கு நிகரான திருத்தலம் இதுவே என சிவபெருமான் கூற, தேவர்கள் அங்கே சிவலிங்கத்தையும், பிரம்மதண்டத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து தேவலோகம் திரும்பினார்கள். தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், காலப்போக்கில் மரங்கள் வளர்ந்து, மண்மூடி மறைந்துவிட்டது. நாளடைவில் மருத மரங்கள் நிறைந்த வனமாக இப்பகுதி மாறியது. வீரமார்த்தாண்டவர்மன் என்ற மன்னன், ஒருமுறை வேட்டையாட இந்த வனத்திற்கு வந்தான். அவன் கண்ணில்பட்ட ஒரு மானை நோக்கி அம்பு எய்தான். மான் அங்கிருந்த ஒரு மருத மரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்தது. மன்னன் அந்த மரத்தை வெட்டும்படி உத்தரவிட்டான். வீரர்கள் கோடாரியால் மரத்தை வெட்ட ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த வீரர்கள் மன்னனிடம் தகவலைச் சொல்ல, மன்னன் வந்து பார்த்து, உள்ளே வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் இருப்பதைக் காண்கிறான். தன் தவறுக்கு வருந்திய மன்னன், அங்கே ஆலயம் எழுப்பி, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்கிறான். அதுவே இப்போதிருக்கும் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் ஆலயம் ஆகும். தேவர்கள் வைத்து பூஜித்த பிரம்மதண்டத்தை இப்போதும் இக்கோவிலில் தரிசிக்கலாம். அதே போல் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் கோடாரியால் வெட்டுப்பட்ட தடமும், அம்பு பாய்ந்த தடமும் இப்போதும் இருக்கிறது. காயம்பட்ட சுயம்பு மூர்த்தியின் லிங்கத் திருமேனிக்கு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது. நாறும்பூநாதர் எங்ஙனம் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறாரோ, அதைப்போலவே அம்பிகையும் உளிபடா திருமேனியாக நின்றகோலத்தில் அருள்கிறார். இத்தலத்து அம்பிகையின் திருமேனி ருத்ராட்சத்தால் ஆன சுயம்பு திருமேனி. இந்த விக்ரகம் இமயமலையின் ஒரு பகுதியில் உள்ள கோமதி ஆற்றில் இயற்கையாகவே கண்டெடுக்கப்பட்ட சிலை என்று சொல்கிறார்கள். இதனால்தான் அம்பிகைக்கு கோமதி என்ற பெயர் வந்தது என்கிறார்கள். அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்யும்போது ருத்ராட்சத் திருமேனியை நன்றாகத் தரிசிக்கலாம். கருவூர் சித்தர் இறைவனைத் தரிசிக்க வந்தபோது, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அக்கரையில் நின்று தவித்த சித்தர், நாறும்பூநாதரைக் காண இயலாது போய்விடுமோ என்று வேதனைப்பட்டார். “நாறும்பூநாதா! உன்னைத் தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கிறேன். ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடுகிறது. உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா?” என்று இறைவனிடம் இறைஞ்சினார். பக்தனின் குரலுக்கு செவிசாய்க்கும் விதமாக நாறும்பூநாதர் சற்றே திரும்பி, சித்தர் சிரமப்படாமல் ஆற்றைக் கடந்து வர அருளினார். இப்போதும் இறைவன் நாறும்பூநாதர், பீடத்திலிருந்து சற்றே இடப்பக்கம் தலை சாய்ந்தபடி இருப்பதைக் காணலாம். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் நவகைலாயங்களில் இத்திருத்தலமும் ஒன்று. இத்தலத்திற்கு மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி போன்ற பெயர்களும் முந்தைய காலங்களில் இருந்துள்ளன. இக்கோவிலுக்குப் பின்புறம் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில், தனி சந்நிதியில், ஆதியில் மான் ஒளிந்து லிங்கம் வெளிப்பட்ட மருத மரத்தின் அடிப்பகுதி உள்ளது. இதில் தேவேந்திரன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். 🍁🍁🍁
9 likes
16 shares
saravanan.
5K views 4 days ago
#aalayam arivom. அருள்பாலிக்கும் உச்சிஷ்ட கணபதி: பிள்ளையாரை மூலவராகக் கொண்ட ஒரே கோவில்!_* _முழுக்க முழுக்க விநாயகருக்காகவே உரித்தான கோவில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. அபூர்வமான இக்கோவிலை இந்தக் கட்டுரையில் தரிசிக்கலாம் வாருங்கள்._ * 🛕🛕🛕முழுமுதற்கடவுள் என்று பிள்ளையாரைக் கொண்டாடுகிறது இந்து மதம். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் நம் வழிபாட்டினைத் துவங்குவது விநாயகரிடம் குட்டு போட்டுக்கொண்ட பிறகு தானே.. எல்லா கோவில்களிலும் பெரும்பாலும் பிள்ளையார் அர்த்த மண்டபத்திலும், மகா மண்டபத்திலும், பிரகாரங்களிலும் தான் காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் சில கோவில்களில் இருந்தாலும் ஓரத்தில் தான் இருப்பார். ஆனால் முழுக்க முழுக்க விநாயகருக்காகவே உரித்தான கோவில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது அறிவீர்களா...? அபூர்வமான இக்கோவிலை இந்தக் கட்டுரையில் தரிசிக்கலாம் வாருங்கள். > மணிமுக்தீஸ்வரம் என்ற தலத்தில் உள்ள ‘உச்சிஷ்ட கணபதி’ திருக்கோவிலில் தான் விநாயகர் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். > ‘உச்சிஷ்ட’ என்ற சொல்லுக்கு ‘மீதமான உணவு’ என்று பொருள். முப்பத்து இரண்டு விநாயகர் வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி முக்கியமானவர். பொதுவாக பிரம்மச்சாரியாகவே காட்சி தரும் விநாயகர், இந்த உச்சிஷ்ட கணபதி கோலத்தில் நீலசரஸ்வதி தேவியைத் தன் மடியில் அமர்த்தி அணைத்துப் பிடித்தபடி காட்சி தருகிறார். இதுவே இவரின் சிறப்பம்சமும் கூட. கருவறையில் அருள்பாலிக்கும் இந்த உச்சிஷ்ட கணபதி குடும்ப அமைதியை அருள்பவர் என்று நம்பப்படுகிறது. இவரை வேண்டிக்கொண்டு மகாமண்டபத்தின் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தால், அங்கே மொத்தம் பதினாறு வடிவங்களில் விநாயகப் பெருமானே தான் வீற்றிருக்கிறார். 1. குஷி கணபதி – நோய்கள் நீக்க 2. ஹரித்ரா கணபதி – மக்களை ஈர்க்கும் சக்தி அருள 3. சொர்ண கணபதி – தங்கம் வாங்குமளவு செல்வ வளம் அருள 4. விஐய கணபதி – வெற்றிகளைப் பெற்றுத் தந்திட 5. அர்க்க கணபதி – நவக்கிரக தோஷங்களையெல்லாம் விலக்கித் தர 6. குரு கணபதி – குருவருள் கிடைத்திட 7. சந்தான கணபதி – புத்திர பாக்கியம் அருள 8. ஹேரம்ப கணபதி – அலையும் மனத்தினை அமைதிப்படுத்த 9. சக்தி கணபதி – செயல் வெற்றி அருள 10. சங்கடஹர கணபதி – தடங்கல்கள் தடைகளை உடைத்துவிட 11. துர்கா கணபதி – துன்பங்களைக் களைந்திட 12. ருண ஹரண கணபதி – கடன்களை அடைக்கும் சூழல் உருவாக்கிட 13. ஸ்ரீவல்லப கணபதி – பலம் அருளிட 14. சித்தி கணபதி – காரிய சித்தி அருள 15. வீர கணபதி – மனோதைரியம் அருளிட 16. சர்வசக்தி கணபதி – நல்ல ஆரோக்கியம் அருளிட என மொத்தம் பதினாறு கணபதி திருமேனிகளையும் தரிசித்த பிறகு ‘முழுக்க முழுக்க ஒரு விநாயகர் கோவில் இது’ என்ற உணர்வினை நாம் அடைவது திண்ணம். இந்த 16 விநாயகத் திருமேனிகளும் வேறெங்குமே இல்லாத தனிச்சிறப்பாகும். நெல்லையின் நாயகியாம் காந்திமதி அடுத்தபடியாக தனிச்சந்நதியொன்றில் அருளக் காத்திருக்கிறாள். அவளை வணங்கி நகர்ந்தால் யோகக்கலை வளர்த்த பதஞ்சலி முனிவர் காட்சி தருகிறார். ஸ்ரீ வியாக்கிர பாத முனிவர்கள் லிங்க வடிவில் அடுத்தபடியாக வீற்றிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சுவர்ண ஆகர்ஷண பைரவரும் நமக்கு அருள்புரிகிறார். இக்கோவிலுக்கு வெளிப்பிரகாரத்தில் அழகிய நந்தவனம் பராமரிக்கப்படுகிறது. நாகர் திருமேனிகள் வெளிப்பிரகார முடிவில் உள்ளன. இக்கோவிலின் தல விருட்சம் பனை மரமாகும். கோவிலின் அர்த்த மண்டபத்தில் மலர்கள் அர்ச்சனை பொருட்கள் வாங்க கடை ஒன்றும் உள்ளது. 900 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் இக்கோவில் சேதப்படுத்தப்பட்ட இருப்பதன் தடயங்களையும் ஆங்காங்கே காண முடிகிறது. இக்கோவிலுக்கு வழிகாட்டிக்கொண்டு திருநெல்வேலியின் ஜீவ நதியான தாமிரபரணியும் நம்முடனேயே ஓடி வருவது மற்றொரு சிறப்பாகும். நெல்லை ரயில் நிலையத்திலிருந்து வெறும் பத்து நிமிட தொலைவில் தான் இந்த உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் உள்ளது. கண்டிப்பாகப் போய்வாருங்கள். கணபதியின் அருள் பெற்றிடுங்கள்.. 🟨🕉️. 🟨. 🕉️🟨 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* *✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶* 🟨🦚. 🟨. 🦚🟨
60 likes
44 shares
saravanan.
612 views 10 days ago
#aalayam arivom. கோவிலில் 3 நிலைகளில் பெருமாள்! எங்கே தெரியுமா?_* _திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க... இந்த ஒரு பெருமாள் கோவில் தான் தீர்வு!_ * 🛕🛕🛕நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் மன்னார் கோவில். இந்த இடத்தில் மிகப் பழமையான பெருமாள் கோவில் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. கோவிலில் உள்ள தனி சன்னதியில் லட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். அடுத்த சன்னதியில் கிருஷ்ணர் தரிசனம் தருகிறார். நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபடுவதால் எதிரிகள் பயம், தோஷம், தடைகள் விலகுவதால் ஏராளமான பக்தர்கள் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். > குலசேகர ஆழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. மூலஸ்தானம் அஷ்டாங்க விமானமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மதுரை கூடலழகர் கோவில், உத்திரமேரூர் கோவில் இரண்டிலும் இதே போன்ற அஷ்டாங்க அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் மூன்று நிலைகள் உள்ளன. மூன்று நிலைகளிலும் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். கீழே உள்ள மூலஸ்தானத்தில் வேத நாராயணர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அடுத்து நிலையில் அமர்ந்து, பரமபத நாதனாக காட்சியளிக்கிறார். மூன்றாம் நிலையில் பள்ளிகொண்ட பெருமாள் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராஜகோபால் என்பது உற்சவர் பெயர். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும், தொழில் வளர்ச்சி அடையவும் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களது எண்ணங்களும் நிறைவேறி வருகின்றன. மூலவர் வேத நாராயணர்; தாயார் வேதவல்லி இருவரும் காட்சி அளிக்கின்றனர். தலமரம் பலா செண்பகம். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் பிருகு தீர்த்தம். இந்த கோவில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இணையாக பேசப்படுகிறது. புராண காலத்தில் வேதபுரி என அழைக்கப்பட்டது. அஷ்டாங்க விமானம் என்பது எட்டு அங்கங்களை குறிக்கும். இந்தக் கோவிலில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. மூலவர் மற்றும் தாயார் சன்னதிகள் வியக்க வைக்கின்றன. பிருகு முனிவரும் மார்க்கண்டேயன் முனிவரும் வழிபட்ட தலமாகும். குலசேகர ஆழ்வார் தனது அரசு பதவியை துறந்து இங்கு வந்து மங்களாசாசனம் பாடி இந்த இடத்தில் முக்தி அடைந்ததாக வரலாறு காணப்படுகிறது. அவர் வணங்கிய பெருமாள் திருஉருவம் இன்றும் காணப்படுகிறது. இந்தக் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. மூன்று நிலைகளில் இங்கு இறைவன் அருள் பாலிக்கிறார். திருக்கோயில் விமானம் லாடம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. வேத நாராயணர் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் காட்சி அளிக்கிறார்கள். இந்த திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது என கல்வெட்டுகள் உள்ளன. அக்காலத்தில் வேதங்கள் ஒலிக்கும் இடம் என்பதால் வேதபுரி என அழைக்கப்பட்டது. மர மண்டபத்தில் 12 ராசிகளும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவர் மூலிகைகள் அடங்கிய சுதையால் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். பிருகு முனிவருக்கும் மார்க்கண்டேயன் இருவருக்கும் பெருமாள் இந்த ஊரில் காட்சி கொடுத்ததாக கோவில் வரலாறு கூறுகிறது. பிருகு முனிவர் மார்க்கண்டேயர் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்க வேத நாராயணர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார். பிற்காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் மூவரும் சேர்ந்து இந்த கோவிலை விரிவு படுத்தினார்கள். `இத்திருக்கோவில் சிறந்த பரிகாரத் தலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வந்தால், திருமண தடைகள் அகலும்; எதிரிகள் தடைகள் அகலும்; நினைத்த காரியம் கைகூடும் என்பதால் இங்கு அடிக்கடி பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கட்டடக்கலைக்கும் சிற்ப வேலைப்பாட்டிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது.` 🍁🍁🍁
14 likes
15 shares
saravanan.
2K views 12 days ago
#aalayam arivom. சிவ தரிசனம்: குபேரன் வழிபட்ட ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் அற்புதம்!_* * 🛕🛕🛕திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் கடைவீதியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் கிழக்கே உள்ளது அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் கருவறையில் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார் ஸ்ரீ பஞ்சமுகேஸ்வரர். ஐந்து திருமுகங்களோடு லிங்க சொரூபராக அருள்பாலிக்கிறார் சிவபெருமான். சத்தியோஜாதம், அகோரம், தத்புரு‌ஷம், வர்மதேவம், ஈசானம் என்பவையே அந்த ஐந்து முகங்கள். திசைக்கு ஒன்று எனவும், ஆகாயத்தை நோக்கி ஒன்று என ஐந்து முகங்களோடு இத்தல சிவபெருமான் தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு எதிரே தனிச் சன்னிதியில் 90 டிகிரி நேர்க்கோணத்தில் இத்தல இறைவி திரிபுரசுந்தரியின் சன்னிதி அமைந்துள்ளது. இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள்பாலிப்பதால் இருவரையும் நாம் ஒருசேர தரிசிக்க முடியும். இந்த அமைப்பு அபூர்வமானது என்கிறார்கள் பக்தர்கள். நான்கு திருக்கரங்களோடு அருளும் அம்பிகையின் மேலிரு கரங்கள் சங்குகளை ஏந்தியிருக்க, கீழ் இரு கரங்கள் அபய, அஸ்த முத்திரையோடு காட்சி தருகிறாள். இக்கோயிலின் மகாமண்டபத்தில் ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜராஜேஸ்வரரை தரிசிக்கலாம். எதிரே நந்தியும், பலிபீடமும் விளங்க, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியோடு அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி ராஜராஜேஸ்வரியின் சன்னிதி அமைந்துள்ளது. விச்ரவசுவுக்கு ராவணன், குபேரன் என இரு புத்திரர்கள். இருவரின் தாய்மார்கள் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப்போக அந்தப் பகை வளர்ந்து இருவரும் யுத்தம் புரியும் அளவுக்கு அது வளர்ந்தது. யுத்தமும் நடந்தது. இதனால் குபேரனின் அனைத்து சொத்துக்களும், ஐஸ்வரியங்களும், புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன. இதனால் மனமுடைந்த குபேரன், மகாதேவரை வழிபட, அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மகாவிஷ்ணுவானவர் தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, ராவணனை யுத்தத்தில் சந்திப்பார். அப்போது ராவணன் தோற்கடிக்கப்படுவான். அதன் பின்பு உன்னிடமிருந்து பறிபோன புஷ்பக விமானம் உன்னை வந்தடையும்’ என்றது அந்தக் குரல். அதன் பிறகு குபேரன் காவிரியின் தென் கரையில் ஒரு ஆலயம் அமைத்து, இறைவனை அங்கு பிரதிஷ்டை செய்து அவருக்கு ராஜராஜேஸ்வரர் என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினான். ராஜராஜேஸ்வரர் அருளால், குபேரன் இழந்த தனது பெருமைகளையும், பொருளையும் மீண்டும் பெற்றான் என்கிறது இக்கோயில் தல வரலாறு. ஆகவே, இழந்த சொத்து, சுகங்களை மீண்டும் பெற விரும்புவோர் இத்தல ஈசனை வழிபட்டு பலன் பெறலாம். இக்கோயில் இறைவனின் பின்புறம் நான்கு வேதங்கள் சாளக்ராம வடிவில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பாகும். ஆலயத்தின் தல விருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 12 முதல் 16 இதழ்கள் இருப்பது இந்த ஆலயத்தில் காணப்படும் மற்றுமொரு ஆச்சரியம். 🍁🍁🍁
34 likes
19 shares