Failed to fetch language order
பண்டரிபுரம்--பாண்டுரங்கன்.
257 Posts • 62K views
தெவிட்டாத விட்டலா - 5 கடிதத்தில் கண்டபடி 🌼🌼🌼🌼🌼🌼 அடுத்ததாக வரும் இந்த பாண்டுரங்கன் கதையில் ஒரு மகா புருஷரை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன். இன்று சிறந்த விட்டல பக்தர் நார்சி மேத்தா நம்மிடம் வருகிறார். சும்மா சொல்லக்கூடாது. கிளி என்றால் கிளி தான். அவ்வளவு அழகான ஒரு பெண் அவருக்கு. திருமணவயது. ஆனால் அவருக்கோ இது பற்றி கவலையே கிடையாதே! சதா விட்டல தியானம், பஜனை, பக்தர்களுக்கு அதிதி உபசாரம். இது ஒன்றே அவருக்குத் தெரிந்தது எல்லாம். பாவம். பரம ஏழை குடும்பம். ஒருநாள் அவர் இருந்த ஜுனகாத் என்ற ஊருக்கு ஒரு பணக்கார வியாபாரி வந்தான். தாகத்துக்கு தண்ணீர் அருந்த வந்தவன் மேத்தாவின் பெண்ணைப் பார்த்தான். அவள் பதவிசு, அதிதி உபசாரம், பண்பு, அடக்கம் எல்லாம் அவனைக் கவர தன் பிள்ளைக்கு அவளை மணமுடிக்க விருப்பம் வந்து விட்டது. அதை மேத்தாவிடம் வெளிப்படுத்த "எனக்கு உங்களிடம் சம்பந்தம் பேசும் அளவுக்கு அந்தஸ்தோ பணமோ இல்லையே. இந்த கல்யாணம் எப்படி நடக்க முடியும்" என்றார் மேத்தா "பணம் என்னய்யா பணம். மனம், குணம், இது தான் என்னைப் பொருத்தவரை ரொம்ப அவசியம் இது எதேஷ்டம் உங்கள் பெண்ணிடம் இருக்கு". ஊருக்கு திரும்பி வீட்டில் விஷயம் சொன்னான் வியாபாரி. அந்த வியாபாரியின் மனைவிக்கோ இந்த சம்பந்தம் துளிக்கூட பிடிக்க வில்லை. நிறைய சீதனம் வரதக்ஷணை கொண்டு வராத இந்த பெண்ணை பரம வைரியாக கருதினாள். கல்யாண த்துக்கு ஒத்துக்கொண்டாளே தவிர கல்யாணமானபிறகு அந்த பெண்ணை சித்ரவதை செய்தாள். ஒரு நாள் பணத்தோடு திரும்பிவா என்று மேத்தா வீட்டுக்கே திருப்பி அனுப்பியும் விட்டாள். நாள் உருண்டதே தவிர பெண்ணும் மாமியார் வீடு போகவில்லை. மேத்தாவிடமும் ஒரு பைசாவும் இல்லை.! சம்பந்தி கேட்ட வரதக்ஷணைக்கு அவர் எங்கே போவது?? நார்சி மேதா உருகினார். நிர்க் கதியாக அவர் மனம் " ஹே விட்டலா நீ தானே என்னைத் தூண்டினாய். நான் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தேனே. அவர்கள் கேட்ட பணத்தை எங்கிருந்து கொடுப்பேன்."? மேத்தாவின் மனைவியோ துடித்தாள். பெண்ணும் சகல துன்பத்தையும் வெளிக்காட்டாமல் எரிமலையை விழுங்கிக்கொண்டு அமைதியாக இருந்தாள். ஒருநாள் தாங்கமுடியாத துக்கத்தில் அவர் மனைவி "இதோ பாருங்கோ. நீங்க இன்னிக்கே நம்ம பொண்ணை சம்பந்தி வீட்டில் கொண்டு விடறேள். என்ன பண்ணுவேளோ எனக்கு தெரியாது. அவா கேட்டதை கொடுக்க ஏற்பாடு பண்றேள். பொண்ணு படற கஷ்டம் தாங்க முடியலே/ உடனே கிளம்புங்கோ!!": நார்சி மேத் தா பெண்ணை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார் அவள் கணவன் வீட்டுக்கு. வழியெல்லாம் அவர் மனம் "விட்டலா விட்டலா" என்றே வேண்டிக்கொண்டு வந்தது. வந்தவர்களை முகம் கொடுத்து கூட பெண்ணின் மாமியார் வரவேற்கவில்லை. "எதற்கு வந்திருக்கிறீர்கள். வெறும் கையோடு?" என்று சுட்டாள். நார்சி மேத்தாவுக்கு என்ன ஆயிற்று!! ? ஏதோ திடீரென்று ஒரு அசட்டு தைர்யம் வந்து விட்டது. வெறிபிடித்தாற்போல் ரொம்ப தைரியமாக அந்த வீட்டில் நுழைந்தவர் மிடுக்கோடு பேசினார். "என்னம்மா எப்போ பார்த்தாலும் பணம் நகை என்றே பினாத்துகிறீர்கள். சும்மா சும்மா சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். ஒரு காகிதத்தில் என்ன எல்லாம் வேண்டுமோ சப் ஜாடா எழுதிக்கொடுங்கள். 4 நாளில் வீடு வந்து சேரும்" . எல்லோருமே அசந்து போனார்கள். இவ்வளவு தைர்யம் யார் கொடுத்தார்கள் மேத்தாவுக்கு? என்ன ஆச்சு அவருக்கு? நாலு நாளில் எங்கேயிருந்து பணம் கொட்டப் போகிறது? . மாமியார் ஆடிப்போய் விட்டாள். நடுங்கும் கரத்தோடு தேவைகளை சுருக்கமாக எழுதிக்கொடுத்தாள். வீடு திரும்பியதும் தான் மேத்தாவுக்கு தான் எவ்வளவு அசட்டுத் தைரியமாக நடந்து விட்டோம் என்று தோன்றியது. அவள் கொடுத்த அந்த நீளமான பட்டியல் பிரகாரம் ஏறக்குறைய சீர் செய்ய குறைந்தது ஒரு லக்ஷம் ஆகுமே? தலை சுற்றியது அவருக்கு. தூக்கம் போச்சு! ஒரு நாள் ரெண்டு நாளும் போச்சு. மூணாம் நாள் காலையில் எழுந்தார். அப்போது பார்த்து ஒரு விட்டல பக்தர்கள் கூட்டம் தெருவில் போனது. பாண்டுரங்க பக்தர்களைப் பார்த்ததுமே அவருக்கு எல்லாம் , மறந்து போனது. அவர்களைக் கூப்பிட்டு வழக்கம்போல உபசாரம் செய்து நீர் மோர் கொடுத்தார். "இங்கு நார்சி மேத்தா என்பவர் யார்?" "ஐயா, அது இந்த நாயேன் தான்" . "உங்களைத்தான் பார்க்க சொன்னார்கள். நாங்கள் வியாபாரிகள். பண்டரிபுரம் போகிறோம். எங்களுக்கு திரும்பி வர ஒரு மாத காலம் ஆகும் எங்களிடம் உள்ள நகை, பணம் எல்லாம் தங்களிடம் கொடுத்தால் ஜாக்ரதையாக நம்பகமாக இருக்கும் என்று சிலர் பேசிக் கொண்டதைக் கேட்டு இவற்றை உங்களிடம் ஒப்புவிக்கிறோம். முடிந்தால் பணத்தை எல்லாம் எங்களுக்கு பண்டரி புரத்தில் தரும்படியாக உங்களால் ஏதாவது ஏற்பாடு செய்யமுடியும் என்றும் சொன்னார்கள். உங்களுக்கு வேண்டியவர்கள் பண்டரி புரத்தில் யாரோ இருக்கிறார்களாமே?" மறுபடியும் ஏதோ ஒரு சக்தி மேத்தாவிற்குள் புகுந்து கொண்டது. "ஆம் எனக்கு வேண்டிய சியாமள ஸா பண்டரியில் இருக்கிறார். யோசிக்காமல் ஒரு கடிதம் எழுதி கொடுத்தார் . இந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தால் வேண்டிய பணம் கொடுப்பார்" நார்சி பணம் நகை எல்லாம் பெற்றுக்கொண்டு விட்டார். யாத்ரிகர்களும் சந்தோஷமாக பண்டரிபுரம் சென்றார்கள். நார்சி மேத்தா ஒரு காகிதத்தில் அவரிடம் கொடுக்கபட்ட நகைகள் பணங்கள் எல்லாம் எழுதி வைத்தார். என்ன ஆச்சர்யம்? சம்பந்தி அம்மாள் போட்ட பட்டியலின் நகல் தானோ இது என்கிற மாதிரி அச்சாக தேவைப்பட்ட அத்தனை பணமும் நகைகளும் பட்டியல் பிரகாரம் சரியாக இருந்தன. " விட்டலா இதுவும் உன் விளையாட்டா?"என்று எண்ணிக்கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டுசம்பந்தி வீடு சென்றார். அவற்றை பெற்றுக்கொண்ட சம்பந்தி அம்மாள் ராஜோபசாரம் செய்தாள். பெண்ணை சந்தோஷமாக வைத்து கொண்டாள் என்றெல்லாம் எழுதவே தேவையில்லையே. இதற்கிடையில் பண்டரிபுரம் சென்ற யாத்ரிகர்கள் அங்கு யார் யாரையோ கேட்டபோதும் ஒருவருக்கும் சியாமள ஸா வைத் தெரியவில்லை. கையில் பணமும் இன்றி எங்கு தங்குவது என்று தெரியாமல், பண்டரிபுரம் விட்டலன் ஆலயத்திற்குள்ளே சென்று களைப்புடனும் பசியுடனும் அமர்ந்தார்கள் . நார்சி மேத்தா ஏமாற்று பேர்வழி அல்லவே. ஏதோ தவறு நடந்திருக்கிறது. என்ன செய்வது இப்போது? என்று தவிக்கையில் வேறு ஒரு வியாபாரிகள் கூட்டம் கோவிலுக்குள் நுழைந்தது. ஒரு வேளை இவர்களில் யாருக்காவது சியாமள ஸா வை தெரிந்திருக்குமா? "அதோ நடுவில் நிற்கிறாரே எங்கள் தலைவர் அவர் தான் சியாமள ஸா என்று காட்டப்பட்ட ஒரு தனவந்தனான வியாபாரியிடம் நமது யாத்ரிகர்கள் தலைவன் அணுகினான். "யார் நீங்கள்?" "பிரபு தாங்கள் தான் சியாமள ஸா என்பவரா?" "ஆமாம்". " தங்களுக்கு ஜுனகாத் என்ற ஊரில் வசிக்கும் நார்சி மேத்தாவை தெரியுமா அவர் உங்களுக்கு ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார்" "அப்படியா. நார்சி நமக்கு ரொம்ப வேண்டியவராச்சே. எனக்கு முதலாளி!. அவர். இங்கு வரவில்லையா. கடிதம் படித்து விட்டு சியாமள ஸா, 'இந்த கடிதத்தில் தங்களுக்கு பணம் கொடுக்க சொல்லி எழுதியிருக்கிறார் . எங்கே தங்க போகிறீர்கள்."? "தெரியவில்லை பிரபு. எங்களுக்கு இங்கே யாரையும் தெரியாது. உதவிக்கு யாரும் இல்லையே'. சியாமள ஸா உள்ளூர் வியாபாரி ஒருவரை அழைத்து " இவர்களை நமது நார்சி அனுப்பியிருக்கிறார். நமக்கு ரொம்ப வேண்டியவரி டமிருந்து வந்தவர்கள் என்பதால் நமது மாளிகைக்கு அழைத்து சென்று வேண்டிய வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து அன்ன ஆகாரம் எல்லாம் வேளா வேளைக்கு கிடைக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். இதில் கண்ட பணத்தையும் அவர்களுக்கு உடனே கொடுத்து விடுங்கள்'' அந்த உள்ளூர் வியாபாரி சிட்டாய் பறந்தான். வெகு பொறுப்பாக எல்லா வசதிகளும் செய்து கொடுத்து யாத்ரிகர்களைக் கவனித்துக் கொண்டான். கேட்ட பணம் எல்லாம் பட்டுவாடா செய்தான். சியாமள ஸாவும் அடிக்கடி அவர்களை வந்து பார்த்துக் கொண்டார். யாத்ரிகர்களுக்கு புளகாங்கிதம். சியாமள சாவைப் பார்த்தாலே பாண்டுரங்கனை தரிசித்தது போல மனம் இனித்தது. சில மாதங்கள் கழிந்து யாத்திரை முடிந்து அவர்கள் நார்சி மேதா இருந்த ஜுனகாத் வந்தார்கள். அவர்களைப் பார்த்தபிறகு தான் அடி வயிற்றில் புளி கரைத்தது மேத்தாவுக்கு. பணமும் நகையும் எப்படி திருப்பி தருவது? குருட்டாம்போக்கில் சியாமளா சா என்று ஒரு இல்லாத ஆசாமிக்கு கடிதம் கொடுத்து ஏமாற்றிவிட்டேனே. பாவம் பணத்தை அனுப்புவேன் என்று எதிர்பார்த்து எப்படியெல்லாம் தவித்தார்களோ பண்டரிபுரத்தில்? ஏன் இப்படி செய்தேன்? எது என்னை இவ்வாறெல்லாம் செய்ய வைத்தது என்றே புரியவில்லையே. எந்த முகத்தோடு அவர்களை சந்திப்பது?? விட்டலா, இந்த ஆபத்திலிருந்தும் நீயே காப்பாற்று" என்று வேண்டினார் யாத்த்ரிகர்களோ வந்ததும் வராததுமாக மேத்தாவின் காலில் விழுந்து வணங்கி கண்ணீரால் அவர் கால்களை அலம்பினர். "ஐயா உங்கள் சியாமள ஸா எவ்வளவு பெரிய பணக்காரர். உங்கள் பெயரைச் சொன்னதுமே எங்களுக்கு இதுவரை வாழ்வில் நாங்கள் அடைந்திராத சுகத்தோடு எங்கள் பண்டரி யாத்திரை முடித்து கொடுத்தார். கேட்ட பணத்திற்கும் மேலாக வாரி வழங்கினாரே!!. உங்கள் மீது எத்தனை மதிப்பு மரியாதை அவருக்கு? .நொடிக்கு நொடி "மேத்தா எப்படி இருக்கிறார் அவர் ஏன் உங்களோடு வரவில்லை?" என்று கேட்டுக் கொண்டே இருந்தார். நீங்கள் அனுப்பிய எங்கள் நகையும் ஜாக்ரதையாக எங்களிடம் திரும்பி வந்துவிட செய்தார். " மேத்தாவுக்கு தலை சுற்றியது. பேச்சு வரவில்லை. "விட்டலா விட்டலா, என் சியாமளா ஸா, இப்பவே கிளம்புகிறேன் உன்னை கண்டு சேவிக்க " என்று பண்டரிபுரம் நடந்தார். விட்டலனின் மேல் தேன் மாரியாக நாமாவளி மனதில் சுரந்தது நார்சிக்கு. 'வைஷ்ணவ ஜனதோ' பாட்டு நாம் எல்லாம் கேட்டு மகிழ்கிறோமே அது ஒன்றே போதுமே நார்சி மேத்தாவின் இனிமையான பக்தி கீதத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு. இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள் #புராண கதைகள்
14 likes
9 shares