ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 4 months ago
ப்ரஹ்ம வித்தை ( இரகசியம்) -04-
இனி தைத்ரீய உபநிஷத்-ப்ருகு வல்லீ.-
சொல்வதை பார்ப்போம்…
இந்த பகுதி-பார்கவீ- வாருணீ வித்யை எனப் படுகிறது- அதை தெரிந்து கொள்வோம்.
இந்தப் பகுதி வருண மஹரிஷி( முனிவர்) தன் மகன் ப்ருகுவிற்கு உபதேசிப்பதாக அமைந்துள்ளது.
அனுவாகம்-01.
மந்த்ரம்-01(01).
முதல் அனுவாகம்* இறைவன் யார்* (ப்ரஹ்மம் யார் ) என்ற கேள்வியுடன் தொடங்குகிறது.
வருண முனிவரின் மகன் ப்ருகு தன் தந்தையிடம் சென்று-இறைவன் என்பவர் ?-
எனக் கேட்டான்.அவர் பல விளக்கங்களைக் கூறி
தவம் செய்து உண்மைகளை அறிந்துகொள் எனவும் பதிலளித்தார். தவம் செய்து படிப் படியாக
முன்னேறி உண்மையை உணர்ந்தான்.
நாம் ஆனந்தவல்லியில்-
“ யதோ வாசோ நிவர்த்தந்தே / அப்ராய மனஸா-
ஸஹ /
எவரை மனதாலும், வாக்கினாலும் அறிய முடியாதவராக இருக்கிறாரோ, அவரே இறைவன்-
என படித்தோம்.
இனி வருண முனிவர் கூறுவதை பார்ப்போம்.
மந்த்ரம்-0-(01).
ப்ருகுர்வை வாருணீ: / வருணம் பிதரமுபஸ்ஸார /
அதீஹி பகவோ ப்ரஹ்மேதி /
தஸ்மா ஏதத் ப்ரோவாச /
அன்னம் ப்ராணம் சக்ஷூ:ச்ச்ரோத்ரம் மனோ-
-வாசமிதி //.
கருத்து-
வருண முனிவரின் மகன் தன் தந்தையிடம் சென்று
“ தெய்வத்திற்கு சமமானவரே” இறைவன் என்பவர்
யார் என்பதை எனக்கு உபதேசியுங்கள் என கேட்டான். அவர் உடனே*உணவு, ப்ராணன், கண்,
காது, மனம்,பேச்சு ஆகிய இவைகளே இறைவன்
என பதிலாக கூறினார்.
தந்தை சொல்லியவாறு தவத்தில் உட்கார்ந்த
ப்ருகு முதற்படி உண்மையை தெரிந்து கொண்டான். அந்த் உண்மை என்ன ? இந்த மந்த்ரம் அதை கூறுகிறது.
மந்த்ரம்-
அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜானாத் /
அன்னாத்யேவ கல்விமானி பூதானி ஜாயந்தே /
அன்னேன ஜாதானி ஜீவந்தி /
அன்னம் ப்ரயந்த்யபிஸம்விசந்தீதி /
தத் விஜ்ஞாய / புனரேவ வருணம் பிதரமுபஸ்ஸார /
அதீஹி பகவோ ப்ரஹ்மேதி / தக்ம் ஹோவாச /
தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ /. தபோ ப்ரஹ்மேதி / ஸ தபோsதப்யத /
ஸ தபஸ் தப்த்வா //.
கருத்து-
உணவே இறைவன்,உணவிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன; அவ்வாறு தோன்றியவை உணவினாலேயே வாழ்கின்றன; மரணத்திற்குப் பிறகு உணவிலேயே ஒடுங்குகின்றன, என ப்ருகு தெரிந்து கொண்டான். அதன் பிறகு தன் தந்தை வருண
முனிவரிடம் சென்று, தெய்வத்திற்கு சமமானவரே,
இறைவன் யார் என்பதை எனக்கு இறைவன் யார்
என என்க்கு உபதேசமாக கூறுங்கள் எனவும் கேட்டான். அவர்,” தவமே கடவுள், தவத்தால்
அவரை அடைவாயாக” என கூறினார். இதை
கேட்டு ப்ருகு மீண்டும் தவத்தில் அமர்ந்தான்.
தவம் நிறைந்த பிறகு....
குறிப்பு-
ப்ருகு தான் உணர்ந்த உண்மையை,உணவே இறைவன் என்பதை தந்தையிடம் கூறியதும்
அவர் அதை ஒப்புக் கொண்டாரா ? இல்லையா?
அவர் சரி என்றும் சொல்லவில்லை, தவறு என சொல்லவுமில்லை, மேலும் முயற்சி செய் என கூறினார்.
ஏனெனில் ஆனந்தவல்லியில் அனுவாகம்-04.
மந்த்ரம்-02 கூறுகிறது,
அன்னாத்வை ப்ரஜா: ப்ரஜாயந்தே /
யா: காச்ச ப்ருதிவீக்ம்ச்ரிதா: /
அதே அன்னேனவை ஜீவந்தீ /
அதைதபியந்த்யத்யந்தத: /
அன்னக்ம் ஹி பூதானாம் ஜ்யேஷ்ட்டம்/ ...என தொடர்கிறது.
அந்த கருத்தைதான் மேலே ப்ருகு முதல் உண்மையாக அறிந்து கொண்டான்.
அந்த கருத்து—-
கருத்து-
உணவிலிருந்தே மக்கள் தோன்றினர். பூமியில் வாழும் எல்லா உயிரினங்களும் உணவிலிருந்தே
தோன்றியது. உணவிலேயே வாழ்கின்றன.
முடிவில் உணவிலேயே கலக்கின்றன. உணவே உயிர்களின் துவக்கம்.அதனால் உணவே அனைத்திற்கும் மருந்து என சொல்லப்படுகிறது. யார் உணவை தெயவமாக போற்றுகிறார்களோ அவர்கள் உணவை இடையூறு இல்லாமல் பெறுகின்றனர்.
ஶ்ரீ ருத்ரம்- அனுவாகம்-02. மந்த்ரம்-04.
“நமோ பப்லுஶாய விவ்யாதிநேsந்நாநாம் பதயே-
-நம: //
காளை மாட்டின் மேல் அமர்ந்திருப்பவரை வணங்குகிறேன். தவறு செய்கவர்களை தண்டுப்பவரும்,*அனைத்து உணவுகளுக்கும் தலைவரான இறைவனை வணங்குகிறேன்.
என கூறுகிறது.
உணவில் அனைத்து உயிர்களும் ஒடுங்குகின்றன
என்றால் உணவு பூமியிலிருந்து விளைகிறது.
அந்த பூமியிலேயே உயிர்கள் ஒடுங்குகின்றன எனப் பொருள்.
அன்னமே இறைவன் முதல் படியாக தெரிந்து கொண்டாலும்,திருப்தி அடையாத ப்ருகு,தந்தை
கூறியது போல், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான்.
இரண்டாவதாக அவன் அறிந்து கொண்டதை இந்த ஸூக்தம் சொல்கிறது.
மந்த்ரம்-
ப்ராணோ ப்ரஹ்மேதி வ்யஜானாத் / ப்ராணாத்யேவ
கல்விமானி பூதானி ஜாயந்தே / ப்ராணேன ஜாதானி ஜீவந்தி /ப்ராணம் ப்ரயத்ந்பிஸம்விசந்தீதி/
தத்விஜ்ஞாய / புனரேவ வருணம் பிதாமுபஸ்ஸார /
ஆதீஹி பகவோ ப்ரஹ்மேதி / தக்ம் ஹோவாச /
தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ / தபோ ப்ரஹ்மேதி / ஸ தபோsதப்யத/
ஸ தபஸ் தப்த்வா //.
கருத்து-
ப்ராணனே கடவுள் என அறிந்து கொண்டான்.
ப்ராணனிலிருந்தே உயிர்கள் தோன்றுகின்றன.
அந்த ப்ரணனாலேயே வாழ்கின்றன. மரணத்திற்கு
பிறகு அந்த ப்ராணத்திலேயே ஒடுங்குகின்றன.
எனவும் அறிந்து கொண்டான். இந்த விடையும்
திருப்தியளிக்காதலால், மீண்டும் தந்தை வருண
முனிவரை அணுகி, இறைவனுக்கு சமமானவரே,
இறைவன் யார் என உபதேசியுங்கள் என கேட்டான். அதற்கு அவர்”தவமே கடவுள், தவத்தால் அவரை அடைவாயாக என பதிலளித்தார். எனவே மீண்டும் அவரது உபதேசத்தை ஆணையாக கொண்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தான். தவம் நிறைவு பெற்ற பிறகு...
இதற்கும் அடுத்து வரும் ஸூக்தங்களுக்கும் பதவுரை” முந்தைய மந்தரம்,”அன்னம் ப்ரஹ்மேதி-
- வ்யஜானாத்” போன்றுதான்.
சீக்ஷா வல்லியில் இந்த ப்ரபஞ்சத்தை்தை இயக்கும் ப்ராண சக்தியே நமது உடலையும், மனதையும் இயக்கும் சக்தி எனப் படித்தோம்.
ப்ராணன், அபானன் போன்ற பத்து சக்திகள் நமது
உடலையும், மனதையும் இயக்கும் சக்திகள் என
தெரிந்து கொண்டோம்.
அனுவாகம்-01.
மந்த்ரம்-01(05).
தந்தை சொல்படி மூன்றாவது முறை தவம் செய்ததால், மனமே இறைவன் என அறிந்துகொண்டான் என இந்த ஸூக்தம் சொல்கிறது.
மந்த்ரம்-
மனோ ப்ரஹ்மேதி வ்யாஜானாத் / மனஸோ ஹ்யேவ கல்மானி பூதானி ஜாயந்தே / மனஸா ஜாதானி ஜீவந்தி / மன:ப்ரயந்த்யபிஸம்விசந்தீதி / தத் விஜ்ஞாய /
புனரேவ வருணம் பிதரமுபஸ்ஸார / அதீஹி பகவோ ப்ரஹ்மேதி / தக்ம் ஹோவாசா /
தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸ்ஸ்வ / தபோ ப்ரஹ்மேதி / ஸ தப்போsதப்யத/ஸ தபஸ்தப்த்வா //
கருத்து-
மனமே இறைவன் எனவும், மனதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன. அவை மனதால்
வாழ்கின்றன. மரணத்திற்குப் பிறகு மனதிலேயே
ஒடுங்குகின்றன. இவ்வாறு அறிந்து கொண்ட பிறகும் தந்தை வருண முனிவரிடம் சென்னு,
தெய்வத்திற்கு சமமானவரே இறைவன் யார் என்பதை உபதேசியுங்கள் என கேட்டான்.
அவர் தவமே இறைவன் என கூறி தவத்தால் அவரை அடைவாயாக என பதலளித்தார்.
இந்த உபதேசத்தை ஏற்றுக் கொண்டு, ப்ருகு தவத்தில் அமர்ந்தான். தவம் நிறைவுற்ற பிறகு... 🚩🕉🪷🙏🏻 #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சித்தர்கள் வாக்கு #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
18 likes
12 shares