#பாதை
நடந்தால் பாதையில் முட்களும் கற்களும்...
நிறுத்தி விடாதீர் உங்கள் பயணத்தை...
கைகளில் அகப்பட்டப் பட்டாம்பூச்சியும் பறந்து விடும்...
போராடும் உங்கள் முயற்சியை விட்டு விடாதீர்கள்.
வாழும் வரைப் போராடுங்கள்...
நீங்கள் மட்டும் போராடப் பிறக்கவில்லை,
மண்ணில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் போராடி வாழ்கிறது.
சிந்தனையைக் கூர்மையாக்கி விரைந்து செயல்படுங்கள்...
வெற்றி உங்களைத் தேடி வரும்.
உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தவர்கள் எல்லாம்
உங்களைக் கை தட்டிப் பாராட்டுவார்கள்.
உருவமில்லாமல் இருக்கும் பாறைக் கூடச் செதுக்கினால் அழகிய சிற்பம்..
உங்களை நீங்கள் செதுக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றி நிச்சயம்.
வாழ்க வளமுடன்.