ஆன்மீகம் அறிவோம்
1K Posts • 1M views
குசேலர் தினம் மார்கழி 2 December 17.12.25 நாளை புதன் கிழமை மார்கழி மாதத்தில் கிருஷ்ண. பகவானுக்கு பிடித்த தினம் மார்கழி மாதம் ஆன்மிகத்திற்கு உகந்ததாகும் குசேலர் தினம் அன்று கிருஷ்ணரை வழிபட அவர் மகிழ்ந்து நன்மை அருள்வார். இந்த நாளில குசேலர் கிருஷ்ண பகவானுக்கு அவல் முடிந்து வைத்து கொடுத்து மிகவும் ராஜ யோகம் பெற்றார். குசேலரின் உண்மையான பெயர் சுதாமா . மிகவும் வருமையில் வாழ்ந்து வந்தார் அவர் உடுத்தும் உடை கூட மிகவும் கிழிந்து இருக்கும். கண்ணனும் சுதாமாவும் குருகுலத்தில் ஒன்றாக படித்தவர்கள். சுதாமர் செல்வத்தின் மீது பற்று இல்லாமல் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தியுடன் இருந்தார். அவரை போலவே அவரது மனைவியும் தெய்வ பற்று உள்ளவள். அவள் குழந்தைகளின் நலன் கருதி சுதாமாவிடம் உங்கள் நண்பரிடம் சென்று நம் வருமை நிலை எடுத்து கூறி அவரிடம் ஏதேனும் உதவி பெற்று வாருங்கள் என கூறினாள். வேறு வழியில்லாமல் கண்ணனை பார்க்க புறப்பட்டார். ஆனால் அவருக்கு எதுவும் எடுத்து செல்ல முடியவில்லை அத்தனை வருமை. உடனே சுதாமாவின் மனைவி வீட்டில் இருந்த சிறிது அவலை ஒரு சிவப்பு நிற அழுக்கு துணியில் முடிந்து கொடுத்து அனுப்பினாள். கிருஷ்ணனை தேடி துவாரகா வந்தார். அங்கு வந்ததும் மலைத்து போனார். மாளிகை மிகவும் பிரம்மாண்டமாய் இருந்தது . வைகுண்டத்துக்கு வந்ததை போன்று உணர்ந்தார். அவர் கண்ணனின் பால்ய சிநேகிதன் அல்லவா நல்ல வரவேற்ப்பு திக்கு முக்காடி போனார். கண்ணன் அவரை வாரி அணைத்தார். தனக்கு என்ன கொண்டு வந்தார் என கண்களால் தேடுகிறார் பரந்தாமன். சுதாமா கூனி குறுகி நெளிந்த போது சுதாமா இடுப்பில் சிவப்பு நிற துணி கண்ணில் பட்டது அதை ஆர்வத்தோடு பிடிங்கி முடிச்சை அவிழ்த்தார் அதில் இருந்த அவலை ஒரு பிடி எடுத்து வாயில் போட்டு மறு பிடி அவலை எடுக்கும் போது லஷ்மி தடுத்து போதும் என்றாள். அதாவது இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று அர்த்தமாகும். இது சுதா மாவிற்கு புரியவில்லை. அன்று இரவு முழுவதும் பழைய கதைகளை பேசி கொண்டு மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் காலை கண்ணனிடம் விடை பெற்று சுதாமா புறப்பட்டார். போற வழி எல்லாம் மிகவும் சஞ்சலப்பட்டு கொண்டே சென்றார் நாம் கண்ணனிடம் உதவி கேட்க சென்று கேட்காமல் போனால் மனைவியிடம் என்ன சொல்வது என்று. குழந்தைகள் ஆர்வத்துடன் இருப்பார்களே என நினைத்து கொண்டே மனதெல்லாம் வலியுடன் கண்ணனை பார்த்த்த சந்தோஷத்தில் கவலை மறந்து வீடு சென்றார் அங்கு வீடு ரத்தினங்களால் மின்னிய ஒரு பெரிய மாளி கையாய் தெரிந்தது. ஒரு வேளை கண்ணனை நினைத்து வந்ததால் மாறி வந்து விட்டோமோ என நினைத்தார். ஆனால் அந்த மாளிகையில் இருந்த ரத்தினம் ஆபரணம் அணிந்து சிரித்த முகத்துடன் வெளிவந்த தன் மனைவியை கண்டார். குழந்தைகளும் பட்டு உடை உடுத்தி ஆபரணம் அணிந்தும் பலகாரம் தின்று கொண்டு வருவதை பார்த்து கண்ணன் கேட்காமலே வாரி வழங்கியதை உணர்ந்தார். அந்த பத்தியில் மிகவும் மெய்மறந்து நின்றார். இந்த நிகழ்வும் மார்கழி முதல் புதன் கிழமை அன்றுதான். அதனால் தான் இந்த மார்கழி புதன் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. வாசலில் இரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ண தீபமோ ஏற்ற வேண்டும். கண்ணன் எதையும் கேட்காமலேயே வாரி வழங்கும் வள்ளல் நாம் இந்த நாளில் குருவாயூர் கண்ணனுக்கு சிவப்பு துணியில் அவல் வெல்லம் ஏலம் கலந்து துணியில் முடிந்து நைவேத்யமாக வைக்கப்படுகிறது. அதோடு பால், வாழை பழம் வைக்கலாம். அதே போல் நாமும் அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் சிறிய அளவில் சிவப்பு துணியில் அவல் வெல்லம் ஏலம் கருது முடிந்து வைத்து நைவேத்யம் செய்ய அதீத நற்பலன் பெற்று நோய் நொடி இன்றி செல்வந்ததராய் வாழலாம். பிறகு அந்த அவலை நாம் பிரசாதமாக பகிர்ந்து சாப்பிடலாம். . சிவப்பு துணி இல்லை என்றால் ஒரு சிறிய தாம்பாளத்தில் வைத்து படைக்கலாம். நம் வருமை நீங்கும். குழந்தை வரமும் பெறலாம். இந்த கதையை படிப்போரும் கேட்ப்போரும் கிருஷ்ணனின் அன்புக்கு பாத்திரமாவர்கள் ...... Savittri Raju #ஆன்மீகம் அறிவோம்
13 likes
14 shares