ShareChat
click to see wallet page

*#திருக்கயிலாயம் - #போற்றித்திருத்தாண்டகம்* பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி பூதப்படை உடையாய் போற்றி போற்றி மன்னியசீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறியேந்து கையானே போற்றி போற்றி உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி வெண்மதியம் கண்ணி விகிர்தா போற்றி துஞ்சிருள் ஆடல் உகந்தாய் போற்றி தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐

7.5K ने देखा
6 दिन पहले